என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: 31 பந்தில் சதமடித்த சி.எஸ்.கே. வீரர்
- சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
- ஐதராபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த போட்டியில் சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய குஜராத் அணி 12.3 ஓவரில் வெற்றி இலக்கை விரட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் உர்வில் படேல் 37 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர் ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் 31 பந்தில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே 28 பந்தில் அவர் சதமடித்து அந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மாவுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது 31 பந்துகளில் சதமடித்து 2வது இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்தில் உர்வில் படேல் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






