என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஎஸ்கே"

    • சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
    • ஐதராபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடந்த போட்டியில் சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய குஜராத் அணி 12.3 ஓவரில் வெற்றி இலக்கை விரட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் கேப்டன் உர்வில் படேல் 37 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இவர் ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

    இந்நிலையில், இன்றைய போட்டியில் 31 பந்தில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் மீண்டும் இணைந்துள்ளார்.

    ஏற்கனவே 28 பந்தில் அவர் சதமடித்து அந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மாவுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது 31 பந்துகளில் சதமடித்து 2வது இடம்பிடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்தில் உர்வில் படேல் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
    • எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.

    • சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியது
    • அதற்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு சிஎஸ்கே கொடுத்தது.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வழங்கி விட்டன.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியது.

    அதன்படி சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியில் எடுப்பதற்காக இத்தனை வருடங்கள் விளையாடிய ஜடேஜவை சிஎஸ்கே அணி விட்டுக்கொடுப்பதா என ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர். மேலும் கடைசியாக ஜடேஜா ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சோக பாடல் பாடி வந்தனர்.

    இதனால் ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்றது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விளக்கமளித்தது. அதில் இரு நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியே இந்த டிரேட் முறை நடந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை ராஜஸ்தான் அணியில் எடுத்துக்கொள்ளுமாறு ஜடேஜா கேட்டுக் கொண்டதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சென்னை ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    எதனால் இந்த முடிவு இருக்கலாம் என்பது குறித்து ரசிகர்கள் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தோனி இந்த சீசனுடம் வெளியேறுவதால் இந்த முடிவை எடுத்திருக்காலம் என ஒரு சிலரும், என்னதான் சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தாலும் நமக்கான மதிப்பு இங்கு கிடைக்கவில்லை அதனால் தான் சென்றிருக்கலாம் என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது இடத்தை பிடித்தது.
    • கடந்த சீசன் முடிந்தவுடன் சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர்.

    இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து விட்டு அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.

    மேலும் சென்னை அணியில் இருந்து பல வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதனால் எந்த வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கவுள்ளது என்ற ஆவல் ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அணியின் இத்தனை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக போன சீசன் அமைந்தது ஆகும். கடந்த சீசனில் சென்னை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. குறிப்பாக சென்னையில் விளையாடி நிறைய போட்டிகள் தோல்வியடைந்தது.

    இதனால் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஐபிஎல் சீசன் முடிந்த உடனே ஜூன் மாதம் இதற்கான வேலையை அணி நிர்வாகம் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு இறுதி வரை சர்வதேச போட்டிகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த மைதானத்தை புதுபிக்க முதன்மை காரணம், உலகத் தரம் வாய்ந்த வடிகால் அமைப்பை நிறுவுதல், அவுட்ஃபீல்டை மாற்றுதல், பிட்ச் மற்றும் புல் மேற்பரப்பை மேம்படுத்துதல் ஆகும். இதனால் மழை பெய்த பிறகு விரைவாக விளையாட்டைத் தொடர அனுமதிக்கும் மற்றும் உயர்தர போட்டிகளை உறுதிப்படுத்தவும் ஆகும்.

    இந்நிலையில் இந்த மைதானத்தை புதுபிக்க நடந்த வேலைகள் குறித்த வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியன்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் வேலை தொடங்கியதில் இருந்து மைதானம் ரெடியாகும் வரை உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கூலி படத்தின் கூலி பவர் ஹவுஸ் பாடலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சி.எஸ்.கே. அணி எடிட் செய்துள்ளது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    மேலும், ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
    • ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டு மன்மதனே வாராய்' பாடலுடன் சஞ்சு சாம்சனின் வீடியோவை பகிர்ந்த அவரது மனைவி சாருலதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • பதிரனா, கான்வே உள்ளிட்டோரை அணியில் இருந்து விடுவித்துள்ளது.
    • ஜடேஜா Trade மூலம் ராஜஸ்தான் அணிக்கு செல்கிறார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது. அந்த வகையில் சி.எஸ்.கே. 11 வீரர்களை விடுவித்துள்ளது.

    ஜடேஜாவை Trade மூலம் விடுவித்துள்ளது. அவருடன் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, பதிரனா, சாம் கர்ரன் (Trade- ராஜஸ்தான்). அந்த்ரே சித்தார்த், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், விஜய் சங்கர் ஆகியோரை விடுவித்துள்ளது.

    • சி.எஸ்.கே. அணியில் இருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா கழற்றி விடப்பட்டுள்ளனர்.
    • மேலும் பல வீரர்களை விடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது.

    இதற்காக தக்க வைக்கப்படும் வீரர்கள், வெளியேற்றப்படும் வீரர்கள் மற்றும் பரிமாற்ற முறை வீரர்கள் விவரத்தை இன்று மாலைக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல சி.எஸ்.கே. அணியில் இருந்து ஜடேஜா, சாம்கரண் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம் மாறியுள்ளனர். இதற்கு இரு அணி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்று காலை வெளியானது.

    10 அணிகளும் 32 வீரர்களை விடுவிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் சி.எஸ்.கே. அணியில் இருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா கழற்றி விடப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் பங்குபெற உள்ளனர்.

    மேலும் விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகா் கோட்டி ஆகியோரையும் விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக பத்திரனாவை விடுவிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை மினி ஏலத்தில் மிகவும் மலிவான விலையில் திரும்பப் பெற அவர்கள் முயற்சிப்பார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

    • சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
    • ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில் சென்னை மைதானத்தில் எம்எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ஜெர்சியிலும் ரசிகர்களுக்கு மத்தியில் உள்ளனர். அப்போது தோனி ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கை காட்டுவார். அந்த கூட்டத்தில் ஒரு பேனரில் விசில் போடு சஞ்சு சாம்சன் என எழுத்தப்பட்டிருந்தது.

    இதனை பார்த்த சஞ்சு சந்தோசத்தில் குதிப்பார். உடனே அவரது ஜெர்சியில் மஞ்சள் நிறமாக மாறும். இவ்வாறு அந்த AI வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது.
    • 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்க உள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தீபர் சாஹர் மீண்டும் சிஎஸ்கே அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
    • ஆர்சிபி-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டன் சிஎஸ்கே அணிக்கு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதியில் நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் சில வீரர்களை டிரேட் முறையில் மற்ற அணிக்கு கொடுக்க ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய தீபர் சாஹர் மீண்டும் சிஎஸ்கே அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    அதேபோல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் சிஎஸ்கே அணிக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆர்சிபி-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சிஎஸ்கே அணிக்கும் மாற்ற பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணிக்கு மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன் ஆகிய இரண்டு பேர் சிஎஸ்கே அணிக்கு வருவதை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

    ×