என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி ஏலம்"

    • மினி ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதனை ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    வீரர்களுக்கான அடிப்படை விலை குறைந்தபட்சம் ரூ. 30 லட்சம் என்றும் அதிகபட்சம் ரூ. 2 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் ஆடிய திறமையான வீரர்கள் பலரும் ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் ஆரம்ப விலை ரூ.2 கோடியிலிருந்தே தொடங்கும்.

    இந்நிலையில் இந்த மினி ஏலத்தில் அதிகபட்ச தொடக்க விலையான ரூ.2 கோடிக்கு வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னாய் ஆகிய இரு இந்திய வீரர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மொத்தம் 45 வீரர்கள் இப்பிரிவில் தங்களது பெயர்களை பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ.2 கோடி அடிப்படை விலை வீரர்கள்:

    ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் ஐயர், முஜீப் ரஹ்மான், நவீன் உல் ஹக், அபோட், அகர், கோனோலி, ஃப்ரேசர்-மெக்குர்க், கிரீன், இங்கிலிஸ், ஸ்மித், முஸ்தாபிஸூர், அட்கின்சன், பான்டன், கர்ரன், டாசன், டக்கெட், லாரன்ஸ், லிவிங்ஸ்டன், டைமல், ஜேமி ஸ்மித், ஆலன், பிரேஸ்வெல், கான்வே, டப்பி, ஹென்றி, ஜேமிசன், மில்னே, டாரில் மிட்செல், ஓ'ரூர்க், ரச்சின் ரவீந்திரா, கோட்ஸி, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, நார்ட்ஜே, ரூசோவ், ஷம்சி, வைஸ், ஹசரங்கா, பத்திரனா, தீக்ஷனா, ஹோல்டர், சாய் ஹோப், ஹொசைன் மற்றும் அல்ஸாரி.

    • மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது.
    • சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக நடந்த டிரேட் முறையில் பல அணிகளில் நிறைய வீரர்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதில் முக்கிய மாற்றமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கும் ராஜஸ்தான் அணியில் இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கும் மாற்றப்பட்டது ஆகும். மேலும் பல அணிகள் சில வீரர்களை கழற்றி விட்டும் தக்கவைத்தும் உள்ளது.

    மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான 10 அணிகளின் தலைமை பயிற்சியாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார். மும்பை அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே பயிற்சியாளராக உள்ளார். பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

    மற்ற அணிகள் பொறுத்தவரையில் ஆர்சிபி அணிக்கு ஆண்டி பிளெவர், குஜராத் அணிக்கு ரெஹ்ரா, கொல்கத்தா அணிக்கு அபிஷேக் நாயர், டெல்லி அணிக்கு பதானி, லக்னோ அணிக்கு ஜஸ்டின் லாங்கர், ஐதராபாத் அணிக்கு டேனியல் விக்டோரி, ராஜ்ஸ்தான் அணிக்கு குமார் சங்ககாரா பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இந்த ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த சீசனுக்கான வீரர்களின் மினி ஏலம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் நாளை மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல் வீரர்களின் மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16-ந்தேதி அபுதாபியில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது.

    ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் தொடர்ந்து 3-வது முறையாக வெளிநாட்டில் நடக்கிறது. 2024-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடந்தது. 2025-ம் சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெட்டாவில் நடந்தது.

    தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் அளித்தபிறகு ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகம் தயாரிக்கும்.

    • ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • இது கடந்த ஆண்டைவிட ரூ.1½ கோடி அதிகமாகும்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 5 அணிகள் 71 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன. மற்ற வீராங்கனைகள் ஏலத்துக்கு வருகிறார்கள்.

    இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். போட்டிக்கான வீராங்கனைகளின் மினி ஏலம் வருகிற 15-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது. ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1½ கோடி அதிகமாகும்.

    ×