என் மலர்
நீங்கள் தேடியது "பிசிசிஐ"
- நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
- முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகள் மற்றும் போட்டி நடுவர்களுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டித் தொடரில் விளையாடும் சீனியர் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. திருத்தப்பட்ட கட்டணத்தின்படி இனி அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் பெறுவார்கள். அணிக்கு தேர்வாகி களம் காணாமல் வெளியே இருக்கும் வீராங்கனைகளின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
இதே போல் உள்ளூர் 20 ஓவர் போட்டிகளில் களம் காணும் சீனியர் வீராங்கனைகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாற்று வீராங்கனைகளுக்கு ரூ.12,500-ம் அளிக்கப்படுகிறது. ஜூனியர் வீராங்கனைளுக்கும் ஜாக்பாட் அடிக்கிறது. அவர்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ரூ.25 ஆயிரமும், 20 ஓவர் போட்டிக்கு ரூ.12,500-ம் வழங்கப்பட உள்ளது.
நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், அதுவே முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்
- இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்
உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கிரிக்கெட் லீக் என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்தான். அடுத்தாண்டு இதன் 19வது சீசன் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் தொடங்கியது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஐபிஎல் ஏலம் தொடர்ந்து ஏன் வெளிநாட்டில் நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய பிரியங்கா கார்க்,
''ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? என்ன கட்டாயம்? இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா? ஐபிஎல் தேசிய பெருமையின் அடையாளமாக இருந்தால், இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் பிசிசிஐ என்ன செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காகத்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
- முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது
- அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி நாளை மறுநாள் (டிச.17) நடைபெற உள்ளது.
இந்நிலையில் மிஞ்சியுள்ள இருபோட்டிகளில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் அக்சர் படேல் விலகியுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது காய்ச்சலால் விளையாடாத அக்சர் படேல், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அதே காரணத்துக்காக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டுமே குவித்ததால், அக்சர் படேல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார். இந்நிலையில் மிஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் அக்சர் படேல்.
- ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
- 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.
சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.
அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
- டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
- ரோகித் மற்றும் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ தரப்பிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போதே அந்த வதந்தி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவேன் என விராட் கோலி கூறியுள்ளார்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
- தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.
- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது /
- இந்த போட்டியில் ரோகித் - கோலி ஒன்றாக விளையாடவுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் ஒருநாள் தொடரை தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது
- இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் இந்திய சீனியர் வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலியும் இடம் பெற்றனர்.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- ரோகித் சர்மா (38 வயது) அடுத்த உலக கோப்பைக்கு முன் 40 வயதை எட்டிவிடுவார்.
- உலக கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க உள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகின்றனர். இதன் காரணமாக இந்திய ஜெர்சியில் அவர்களை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் ஏறக்குறைய 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பினர். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் சொதப்பிய ரோகித் கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். மறுமுனையில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றினாலும் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி தனது தரத்தை நிரூபித்தார்.
இதில் ரோகித் சர்மா (38 வயது) அடுத்த உலக கோப்பைக்கு முன் 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி உடல் தகுதியை தக்கவைத்து கொள்ள முடியுமா? என்ற கேள்வி நிலவுகிறது. இருப்பினும் அவர் கடின உடற்பயிற்சி மூலம் உடலை பிட்டாக வைத்து கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான தகவலின் படி, ரோகித் தனது எதிர்காலம் குறித்த ஊடகங்களுக்கு எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து, அவரது உடற்தகுதி மற்றும் செயல்திறனில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நாளை நடைபெற உள்ளது.
- இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் இந்திய சீனியர் வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலியும் இடம் பெற்றனர்.
- இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
- இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது கேள்விக்குள்ளாகி உள்ளது.
இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஆலோசிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பி.சி.சி.ஐ அதிகாரிகள், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.
- மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
- தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும்.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்த மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார். இதனால் கம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வி.வி.எஸ். லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் இப்போதைக்கு நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
இப்போதைய சூழ்நிலையில் கம்பீருக்கு மாற்றாக வேறு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை. அவர் அணியை மறுசீரமைப்பு செய்தவர். கம்பீரின் ஒப்பந்தம் 2027 உலக கோப்பை வரை இருக்கிறது.
தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் அணி தேர்வு குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






