என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி"

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியின் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா ஐசிசி விதிகளை மீறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

    இதில் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பிரெவிஸ் விக்கெட்டை இந்திய வீரர் ஹர்ஷித் ராணா வீழ்த்துவார். வீழ்த்திய வேகத்தில் அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கை சைகை காட்டுவார்.

    இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை அவுட்டாக்கிய போது ஹர்ஷித் ராணா செய்த சைகைக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விதியை மீறியதாக கூறி அவருக்கு ஒரு Demerit புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

    பெர்த் மைதானத்தில் இரண்டு நாளில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி இதுதான். இதனால் இந்த பிட்ச் பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளானது.

    இதனால் ஐசிசி பிட்ச்-ன் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி ஆய்வு செய்ததில் பிட்ச் மதிப்பு நன்றாக உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டை போட்டி நடுவர் ரஞ்சன் மதுகல்லே வழங்கினார்.

    ஐசிசி பிட்ச் மதிப்பீடு அமைப்பில், பிட்ச்சுகளை 'மிகச் சிறந்தது' (Very Good), 'நல்லது' (Good), 'சராசரி' (Average), 'திருப்திகரமற்றது' (Unsatisfactory) என வகைப்படுத்துகிறது.

    இதில் ஐ.சி.சியின் நான்கு வகை பிட்ச் மதிப்பீட்டு முறையின்படி, 'மிகவும் நல்லது' என்பது அவர்களின் மிக உயர்ந்த மதிப்பீடாகும். மேலும் இரண்டு நாள் நடந்த போட்டியின் போது பிட்ச் நல்ல கேரி, வரையறுக்கப்பட்ட சீம், ஸ்விங் மற்றும் சரியான பவுன்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தது என்பதைக் குறிக்கிறது.

    • ஒருநாள் பேட்டர் தரவரிசையில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
    • முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

    முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் கோலி 5-வது இடத்திலும் தொடர்கின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் பின் தங்கி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே 11 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா முதல் முறையாக முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    • இந்தியா அணியுடன் நியூசிலாந்து, வங்கதேசம், அமெரிக்கா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன.
    • ஜப்பான், தான்சானியா அணிகளும் விளையாட தகுதி பெற்றுள்ளன.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை (U-19 World Cup) கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் அடுத்த வருடம் ஜனவரி 15ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை 23 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. 16 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் 4 அணிகள் இடம் பிடித்துள்ளது. இந்தியா குரூப் ஏ-யில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் அமெரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியி்டுள்ளது. ஜனவரி 15-ந்தேதி இந்தியா முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. வங்கதேசத்தை 17-ந்தேதியும், நியூசிலாந்தை 24-ந்தேதியும் எதிர்கொள்கிறது. இந்தியா மோதும் போட்டிகள் ஜிம்பாப்வேயில் உள்ள புலவாயோவில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடக்கிறது.

    குரூப் நிலையில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் சிக்ஸ் நிலைக்கு தகுதி பெறும். இங்கு 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். அதன்பின் அரையிறுதி, இறுதிப் போட்டி நடைபெறும்.

    • ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
    • 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார்.

    ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் முதல் இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார். 

    முதல் இடத்தில் இருந்த ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார். அதனை தொடர்ந்து சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் 5-வது இடத்திலும் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • மகளிர் எமர்ஜிங் நேஷனல் டிராபி தொடருக்கான கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகம் செய்தது.
    • இந்த தொடர் வருகிற 20-ந் தேதி பாங்காக்கில் தொடங்குகிறது.

    உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக 8 அணிகள் பங்கேற்கும் புதிய தொடரை ஐசிசி அறிமுகம் செய்தது.

    மகளிர் எமர்ஜிங் நேஷனல் டிராபி தொடருக்கான கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகம் செய்தது. இந்த தொடர் வருகிற 20-ந் தேதி பாங்காக்கில் தொடங்குகிறது.

    இந்த தொடரில் தாய்லாந்து, நெதர்லாந்து, PNG, ஐக்கிய அரபு, ஸ்காட்லாந்து, நமிபியா, தன்சானியா, உகாண்டா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்கா வீரர் வென்றார்.
    • அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்கா கேப்டன் வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.

    சிறந்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தானின் நோமன் அலி, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் இடம்பெற்றனர்.

    இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி வென்றார்.

    சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளார்.

    • 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுகிறது.
    • ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் 6 நாடுகள் இடம் பெறும்.

    2028 ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்கும். இந்த 6 அணிகளும் புள்ளிகள் தரவரிசையில் பட்டியலில் இருந்து தேர்வாகும் என முதலில் தகவல் வெளியானது. தற்போது ஒரு கண்டத்திற்கு ஒரு அணி என்ற வகையில் 6 அணிகள் தேர்வு செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போட்டிகள் 2028ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என மொத்தமாக 29 போட்டிகள் நடைபெறும். பெண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். ஆண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 29ஆம் தேதி நடைபெறும். போட்டிகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள பொமோனாவில் நடைபெறுகிறது.

    இதற்கு முன்னதாக 1900-ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்திருந்தது. அதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. 128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்துள்ளது.

    • மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
    • ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.

    துபாய்:

    சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இதையடுத்து, ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.

    இந்நிலையில், வரும் 2029-ம் ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பை விரிவுபடுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

    மகளிர் உலகக் கோப்பையில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. 2029-ம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

    • அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இடம்பெற்றுள்ளார்.
    • அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவிக்கிறது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அந்தவகையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் தென் ஆப்ரிக்கா வீரர் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தான் வீரர் நோமன் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இதேபோல், அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் மற்றும் ஆஸ்தரேலிய வீராங்கனை ஆஷ் கார்ட்னர் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

    • ஆசிய கோப்பை தொடரின்போது இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர்.
    • இந்திய விமானங்களை சுட்டது போன்று ஹாரிஸ் ராஃப் சைகை காட்டியிருப்பார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தனர்.

    பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்று சைகை காட்டினார். ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை தெரிவிக்கும் வகையில் அவ்வாறு சைகை காட்டினார் என இந்தியா குற்றம்சாட்டியது.

    போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது, உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாகவும், அவர்களுடன் நிற்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

    இருநாட்டின் கிரிக்கெட் சங்கங்களும் ஐசிசி-யில் புகார் அளித்தது. இதனடிப்படையில் ஐசிசி ஹாரிஸ் ராஃப்-க்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

    ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பர்ஹானுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.

    • 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.
    • இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கியது தென் ஆப்பிரிக்க அணி.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய மகளிர் அணிக்கு பைசன் படக்குழுவினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பைசன் படக்குழு போஸ்டர் வௌியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    ×