டி20 உலகக் கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்குமா? - வெளியான புதிய தகவல்

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு நேரிடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை சந்தித்து ஐசிசி ஆலோசனை
டி20 உலகக் கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்குமா? - வெளியான புதிய தகவல்
Published on

பாகிஸ்தான், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவோம் என்றும் ஆனால் பிப்.15-ல் கொழும்பில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

மறுபக்கம் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருக்கிறது என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடுவதா? இல்லையா? என பாக்., கிரிக்கெட் வாரியம் 24 மணி நேரத்தில் முடிவெடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு நேரிடும் என்பதால் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை சந்தித்து ஐசிசி தரப்பில் நேற்று சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து பாகிஸ்தான் அரசை சுலந்தாலோசித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com