என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ICC"
- 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐசிசியின் சாம்பியன் டிராபி தொடர் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் புள்ளி பட்டியலில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளன.
ஆனால் இன்னும் பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலைகள் திருப்தியளிக்காத காரணத்தால் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடுவதற்கு தயக்கம் காட்டும். குறிப்பாக இருநாட்டுக்கும் இடையே நிலவும் தற்போதைய எல்லை பிரச்சினையும் விரிசலும் இதே போல நீடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அரசு அனுமதி கொடுக்காது என்று தெரிய வருகிறது.
அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அல்லது 2023 ஆசிய கோப்பை தொடரை போலவே பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடமான துபாயிலும் நடைபெறும் என்று தெரிய வருகிறது.
இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், நாங்கள் பின்வாங்குபவர்கள் அல்ல. 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான எங்களின் ஏலத்தை இன்று வெளியிட்டுள்ளோம். முடிவு குறித்து ஐசிசி-யின் இயக்குனர் கிரேக் பார்க்லே என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறியது.
We are not people who hold back. We have today issued our bid to host the Champions Trophy of 2025, and we look forward to hearing what Greg Barclay of @ICC has to say about it. pic.twitter.com/EsRzsikCqF
— Iceland Cricket (@icelandcricket) November 27, 2023
- பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் 4 இடத்தில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்தனர். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார். 2-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமும் 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் டாப் 10-ல் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் 4-வது இடத்தில் பும்ராவும் குல்தீப் யாதவ் 6-வது இடத்திலும் 10-வது இடத்தில் முகமது சமியும் உள்ளனர். 741 புள்ளிகளுடன் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.
அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் கூட்டம் அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றுபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. பாலின பாகுபாடின்றி அவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியமே வழங்கப்படும். ஜனவரியில் இருந்து புதிய முறை நடைமுறைக்கு வருகிறது.
மற்றொரு முக்கிய முடிவாக புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஆபரேஷன் மற்றும் பாலின மறுசீரமைப்பு சிகிச்சை முறைகள் மூலம் பெண்ணாக மாறினாலும் அவர் ஒரு போதும் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உங்களது விளையாட்டுக்கு எது சரியாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப பாலின தகுதி கொள்கையை நிர்ணயித்து கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கியது. இதன்படியே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இதற்காக கடந்த 9 மாதங்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ஐ.சி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் உள்ளூர் போட்டிகளில் பாலின தகுதி வரைமுறையை பின்பற்றும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.
- உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
- உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி 7 வார காலமாக நடந்த இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த 19ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் , இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளனர் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
45 நாட்கள் நடந்த இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து நேரில் கண்டுகளித்துள்ளனர். இது உலக சாதனையாக மாறியுள்ளது.
கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை 1.016 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும்.
- புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும். ஸ்டாப் கடிகாரங்களின் அறிமுகம் தற்போது சோதனை அடிப்படையில் டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும்.
புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். அப்படி தயாராகத பட்சத்தில், ஒரு இன்னிங்சில் இதேபோல் மூன்றாவது முறை நிகழும்போது 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.
- இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
- அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
கொழும்பு:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. அந்த வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் உள்ள அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து. சி பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா. டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளது.
- ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகியோர் ஐசிசி கனவு அணியில் இடம் பிடித்தனர்.
- ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பா மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
இந்நிலையில் உலகக் கோப்பை 2023-க்கான கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியில் 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகியோர் ஐசிசி கனவு அணியின் இடம் பிடித்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பாவும் தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், நியூசிலாந்து அணியில் டெய்ரி மிட்செல், இலங்கை அணியில் மதுஷன்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 12-வது வீரராக தென் ஆப்பிரிக்க அணியில் ஜெரால்ட் கோட்ஸி இடம் பிடித்துள்ளார்.
- கவாஸ்கர், டெண்டுல்கர், கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளனர்.
- இவருடன் டயானா எடுல்ஜி, அரவிந்த டி சில்வா ஆகியோரும் பட்டியலில் இணைந்து உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஐசிசி அவர்கள் பெயர்களை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கும். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், வீருாங்கனை டயனா எடுல்ஜி, இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களுடன் இந்த பட்டியலில் 112 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோ மன்கட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சேவாக், இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார். சேவாக் 103 டெஸ்ட், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 23 சதங்களும், ஒருநாள் போட்டியில் 15 சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 219 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 8586 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8273 ரன்களும் அடித்துள்ளார்.
- இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
- 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
- இதில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
இதற்கிடையே, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.
சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டி காக் மற்றும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்
அதேபோல், சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ், வங்காளதேசத்தை சேர்ந்த நஹிடா அக்டர் மற்றும் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவும், சிறந்த வீராங்கனை விருதை வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூசும் வென்றுள்ளனர்.