என் மலர்
நீங்கள் தேடியது "Income"
- மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
- சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது.
விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்து இருந்தனர்.
அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏராளமானவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தவர்கள் மட்டுமின்றி ஆந்திராவை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தனர்.
விண்ணப்ப படிவம் மூலம் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் வழங்கிய போது 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதன் மூலம் ரூ.1.370 கோடி வசூலானது. கடை உரிமை கட்டணம் மூலம் ரூ.3,500 கோடி வருவாய் கிடைத்தது.
தற்போது தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் 615 கடைகள் உள்ளது. ஐ.டி கார்டரில் உள்ள செரிலிங்கம், விமான நிலையம் அமைந்துள்ள ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள கடைகளுக்கு கடும் கிராக்கி நிலவியது.
சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் ரூ.2,639 கோடி அள்ளியுள்ளனர்.
- அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்தவர்கள், முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்க ள் அனைவரும் தகுதி உடையவர்கள் ஆவர்.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படி க்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2023 அன்று ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி களுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது.
பயனாளிகள் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படி ப்பவராக இருக்கக்கூடாது.
இந்த தகுதிகளை உடையவர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளில் எழுத ப்படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,000-மும் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்ற வர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது.
தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி அசல் மாற்றுச்சான்றிதழ், அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து விண்ணப்பப் படிவத்தை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜூன் மாதம் 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர்.
- மே மாதம் ரூ.109.99 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் வந்துள்ளது. கடந்த ஜூன் மாதமும் 100 கோடியை தாண்டியது.
ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர். 11-ந் தேதி 92,238 பேரும், 10-ந் தேதி 88,626 பேரும், 17-ந் தேதி 87,762 பக்தர்களும், 25-ந் தேதி 87,407 பக்தர்களும் தரிசனம் செய்தனர்.
18-ந் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.4 கோடியே 59 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.123.07 கோடி, பிப்ரவரியில் ரூ.114.29 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.120.29 கோடி, ஏப்ரலில் ரூ.144.12 கோடி, மே மாதம் ரூ.109.99 கோடி, ஜூன் மாதம் ரூ.116 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜூலை 15-ந்தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து.
- சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமலை :
திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.
அவா் பேசியதாவது:-
திருமலையில் பக்தர்களுக்கு கோடை முன்னேற்பாடுகளை செய்வதில், தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளும் எந்தவித சிரமமும் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதற்காக, அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், வி.ஐ.பி. புரோட்டோகால் தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் தரிசனத்துக்காக கிட்டத்தட்ட 2 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதுபோன்ற நேரத்தில் பக்தர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
திருமலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் ஹரிஷ்குமார்குப்தா மேற்பார்வையில், திருமலையில் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் 2 நாட்கள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்
டிரைவர்கள் கவனக்குறைவு மற்றும் வாகனங்களின் மோசமான நிலை காரணமாக திருப்பதி மலைப்பாதைகளில் சமீப காலமாக விபத்துகள் நடந்தன. விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஒருங்கிணைந்து நீண்ட கால திட்டங்களை தயாரித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் நிர்ணயித்த வேகத்தின்படி மெதுவாக ஓட்டுமாறு கார் டிரைவர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகளை கேட்டுக்கொள்கிறேன். வாகனங்களை ஓட்டும்போது செல்போனில் பேசாமல், திருப்பங்களில் வேகத்தைக் கட்டுப்படுத்தி, முந்தி செல்லாமல் ஓட்ட வேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. 56 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது.
- இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த மாதம் முதல் பக்தர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு 2 மடங்காக அதிகரித்தது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்து காணப்படுகிறது.
ஆங்கில வருட பிறப்பு முதல் ஏப்ரல் மாதம் வரை உண்டியல் வருவாய் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடியாக இருந்தது.
கடந்த மாதம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் சுமார் 35 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இருப்பினும் மே மாத உண்டியல் வருவாய் ரூ.110 கோடி மட்டுமே வசூலானது. மற்ற மாத உண்டியல் வசூலைவிட இது குறைவாகும்.
திருப்பதியில் நேற்று 62,407 பேர் தரிசனம் செய்தனர். 33,895 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் இலவச நேர ஒதுக்கீட்டில் வந்த பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.
- மாதம் ரூ 20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரையை சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி நாகலெட்சுமி (வயது 38). இவர்களுக்கு தீபஸ்ரீ என்ற மகள், சந்தோஷ் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்து ஒன்றில் சரவணன் இறந்து விட்டார். குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக இருந்த கணவர் சரவணன் இறந்தது நாகலெட்சுமியை நிலை குலைய செய்தது.
எதிர்காலம் என்னவாகும் என்ற துயரத்தில் தவித்தவரை கரை சேர்த்திருக்கிறது தஞ்சாவூர் ஓவியம். முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் செய்வதற்கு கற்றுக் கொண்டவருக்கு அதுவே வாழ்வாதாரமாகவும் மாறியது.
தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான, அழியும் நிலையில் இருக்க கூடிய பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியம் செய்வதை தன்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக பயிற்சி தந்து கற்றுக் கொடுத்து வருகிறார். வருமானத்திற்கு வழியின்றி தவித்து நின்ற பல பெண்கள் இதன் மூலம் பலனடைந்து வருகின்றனர்.
இது குறித்து நாகலெட்சுமி கூறியதாவது :-
பத்து வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். அவர் இருந்த வரை வீட்டு வாசலை கூட நான் தாண்டியதில்லை. திடீரென ஒரு நாள் எங்களை தவிக்க வைத்து மறைந்து விட்டார். ஆதரவாக இருக்க எந்த உறவும் முன்வரவில்லை. அனைத்தையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கினேன். அப்போது தான் கும்பகோணத்தில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வரும் சக்கரபாணி ஆர்ட்ஸ் உரிமையாளரான பன்னீர்செல்வம் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தருகிறார். அவர் கம்பெனியில் என்னை போல் கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்தார்.
என் நிலையை அறிந்து கலை உலகிற்குள் அழைத்து சென்றார். எனக்கு முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தந்தார். சில ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்த நான் பின்னர் வீட்டிலேயே தனியாக தஞ்சாவூர் ஓவியம் தயாரிக்க தொடங்கினேன். மாதம் ரூ 20,000 வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது மகள் 10-ம் வகுப்பும், மகன் 8-வதும் படிக்கின்றனர்.
என்னைப் போல் கணவரை இழந்த, சரியான வாய்ப்பு கிடைக்காமல் வறுமையுடன் போராடி கொண்டிருப்ப வர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் பயிற்சி கொடுக்க தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்கள் பலரும் இன்றைக்கு கை நிறைய சம்பாதிக்கின்றனர். சொந்தக்காலில் நிற்க நினைக்கும் பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் சிறந்த முறையில் கை கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- விடுதிகளில் மாணவர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கும் 27 பள்ளி மாணவர் விடுதிகளும், 8 பள்ளி மாணவியர் விடுதிகளும் என மொத்தம் 35 பள்ளி மாணவ- மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
2023-24-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியு டனோ விண்ணப்பிக்கலாம்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது.
இணையதளத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வருகிற 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாதம் பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 42.64 லட்சம். தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 9.03 லட்சம் ஆகும்.
நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 853 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக்கட்டாக்களில் 33 ஆயிரத்து 381 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
- 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.1,450 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
உண்டியலில் காணிக்கையாக ரூ.833.41 கோடி செலுத்தினர். 2022-23 நிதி யாண்டின் படிகடந்த மார்ச் மாதம் வரை உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமி முடிந்து 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வசந்த உற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- தினசரி வருமானம் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
- கல் தயார் செய்யவும் முடியவில்லை, தயார் செய்த கல்லை காய வைக்கவும் முடியவில்லை.
மெலட்டூர்:
மெலட்டூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கோடைமழை காரணமாக செங்கல் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை யுடன் தெரிவித்துள்ளனர்.
பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர், சுரைக்காயூர், கோடுகிளி மற்றும் ஒன்பத்துவேலி உள்பட பல இடங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன கடந்த சில நாட்களாக பெய்து வரும் திடீர் கோடை மழையால் செங்கல் உற்பத்தி செய்யும் பணி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது இதனால் செங்கல் உற்பத்தி செய்யும்பணியில் ஈடுபட்டு வரும் ஏராளமான தொழிலாளர்கள் தினசரி வருமானம் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து செங்கல் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது
பொதுவாக கோடை காலத்தில் தான் எங்களுக்கு செங்கல் தயார் செய்ய முடியும் இரண்டு பேர் சேர்ந்து ஆயிரம் பச்சகல் தயார் செய்யலாம் ஆயிரம் கல் தயார் செய்யலாம் அந்த கல்லை நன்றாக இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து கொட்டகையில் அடுக்கி வைத்தால் தான் எங்களுக்கு ஆயிரம் ரூபாய்வரை கூலியாக கிடைக்கும் தற்போது தினசரி பெய்து வரும் மழையால் கடந்தசில நாட்களாக தயார் செய்து வைத்து பச்ச கல் எல்லாம் நனைந்து சேதமடைந்நு விட்டது தொடர்ந்து கல் தயார் செய்யவும் முடியவில்லை தயார் செய்த பச்ச கல்லையும் காயவைக்கவும் முடியவில்லை அதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்
செங்கல் தயார் செய்யும் தொழிலை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் மழையால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.