என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத உண்டியல் வருமானம் ரூ.122 கோடியை தாண்டியது
- ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது.
- ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வேண்டுதலாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கில் உண்டியல் வருமானம் வருகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாத உண்டியல் வருமானம் ரூ.100 கோடியைத் தாண்டியது. ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது. ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.122.8 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
Next Story






