என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் காணிக்கை"

    • ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது.
    • ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வேண்டுதலாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கில் உண்டியல் வருமானம் வருகிறது.

    அதன்படி கடந்த மார்ச் மாத உண்டியல் வருமானம் ரூ.100 கோடியைத் தாண்டியது. ஜூலை மாதம் ரூ.139.35 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்தது. ஆகஸ்டு மாதம் ரூ.140.7 கோடியை தாண்டியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.122.8 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

    • உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் இந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை முதலாவதாக எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் ராம்தாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 1 கிலோ 193 கிராமும், வெள்ளி 15 கிலோவும், 234 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    • 29 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
    • மண்டல பூஜை இன்று நடக்கிறது.

    நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. இந்தநிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்றுமுன்தினம் வரை) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது.

    மேலும் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.
    • 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    • 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருமலை

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புகளை தாண்டி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது தேவஸ்தான வரலாற்றில் சாதனையாகும். 2022-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ1,441.34 கோடி கிடைத்துள்ளது.

    கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் ஆகும். தேவஸ்தானம் வெளியிட்ட ஆண்டு பட்ஜெட்டில் 2022-ம் ஆண்டு உண்டியல் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும், எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது சாதனையாகும்.

    2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 லட்சத்து 96 ஆயிரத்து 93 பக்தர்களும், பிப்ரவரியில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்களும், மார்ச் மாதம் 19 லட்சத்து 72 ஆயிரத்து 741 பக்தர்களும், ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 64 ஆயிரத்து 915 பக்தர்களும், மே மாதம் 22 லட்சத்து 61 ஆயிரத்து 641 பக்தர்களும், ஜூன் மாதம் 23 லட்சத்து 23 ஆயிரத்து 421 பக்தர்களும், ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரத்து 319 பக்தர்களும், ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 22 ஆயிரத்து 184 பக்தர்களும், செப்டம்பர் மாதம் 21 லட்சத்து 12 ஆயிரத்து 254 பக்தர்களும், அக்டோபர் மாதம் 22 லட்சத்து 74 ஆயிரத்து 265 பக்தர்களும் நவம்பர் மாதம் 20 லட்சத்து 77 ஆயிரத்து 816 பக்தர்களும், டிசம்பர் மாதம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 108 பக்தர்களும் (29-ந்தேதி வரை) என மொத்தம் 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
    • நாளை முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-

    இந்துக்களுக்கு முக்கியமான பண்டிகைகளில் ஒன்று சங்கராந்தி. இந்தத் திருநாளில் அனைத்துப் பக்தர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. விழாவை பிரமாண்டமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கோவிலின் நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து உணவு, குடிநீர், காபி, டீ, பால் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 20 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.129.37 கோடி கிடைத்தது. 1 கோடியே 8 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. 38 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 8 லட்சத்து 45 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    2022-ம் ஆண்டில் ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 37 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.1450.41 கோடி கிடைத்துள்ளது. 11 கோடியே 54 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4 கோடியே 77 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 1 கோடியே 9 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது.
    • நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    திருமலை :

    ஆந்திராவில் கொரோனா தொற்று இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் காணிக்கையும் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.123 கோடி கிடைத்துள்ளது.

    அதில் ஜனவரி மாதம் 2-ந்தேதி ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.7 கோடியே 68 லட்சம் கிடைத்தது. இது, தேவஸ்தான வரலாற்றில் அதிகமாகும். உண்டியல் வருமானத்தைபோல் ஏழுமலையானுக்கு இதர காணிக்கைகளும் பெரிய அளவில் பக்தர்கள் செலுத்தி வருகிறார்கள். அதில் கிலோ கணக்கில் தங்கத்தை பக்தர்கள் பிரதான உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது தொடர்கிறது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது.

    தற்போது நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. கோவிலில் நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 939 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 203 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 17 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூலானது.
    • தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    உண்டியல் வருவாயாக ரூ.1 கோடியே 19 லட்சத்து, 82 ஆயிரத்து, 629 ரொக்கம். தங்கம் 17 கிராம், 200 மில்லி மற்றும் 710 கிராம் வெள்ளி யும் கிடைக்க பெற்றது.

    உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், கோவில் பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன் பஞ்ச மூர்த்தி, செல்லம் உள்பட பணியாளர்களும், அலு வலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • உண்டியல் பணம் கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
    • உண்டியல் பணம் எண்ணுவதை பக்தர்கள் அறையில் கண்ணாடிக்கு வெளியே இருந்து காணலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கூறியதாவது:

    ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை புதிய பரகாமணி கட்டிடத்தில் தொடங்கியது.

    புதிய கட்டிடத்தில் அதிநவீன பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதால், நேற்று முதல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. உண்டியல் பணம் கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    ஒரு மாதத்திற்கு பின், கோவிலில் உள்ள பரகாமணி மண்டபம், பக்தர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும் என்றார்.

    முன்னதாக, புதிய பரகாமணி கட்டடத்தில் உள்ள படத்துக்கு வாஸ்து ஹோமம், கோபூஜை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உண்டியல் பணம் எண்ணுவதை பக்தர்கள் அறையில் கண்ணாடிக்கு வெளியே இருந்து காணலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 78, 340 பேர் தரிசனம் செய்தனர். 27,063 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.114.29 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 34 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 682 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக் கட்டாக்களில் 24 ஆயிரத்து 291 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 32 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாதுகாப்புடன் இந்தப் பணி வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
    • ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 558 ரொக்கப் பணம் இருந்தது.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் திருவிழா முடிந்த பிறகு ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று கோவில் வளாகத்தில் இந்த ஆண்டுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

    இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராதாமணி ஆகியோர் இந்த பணிகளை பார்வையிட்டனர். பலத்த பாதுகாப்புடன் இந்தப் பணி வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

    கோவில் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    முடிவில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 558 ரொக்கப் பணம் மற்றும் சில்லறை காசுகள் இருந்தது. மேலும் 12 கிராம் தங்கமும், 200 கிராம் வெள்ளியும் இருந்தது. இவை அனைத்தும் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கோவில் வங்கி கணக்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
    • கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் காணிக்கையாளர்களின் காணிக்கையில் ரூ.4.70 கோடியில் வெங்கடாசலபதி கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம்.

    மேற்கண்ட விவரங்களை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.

    • 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் கிடைத்தது
    • அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் யோக நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில், லட் சுமி நரசிம்மர் கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், மலை அடிவாரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை திறந்து காணிக்கை பணத்தை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜெயா மேற்பார்வையில் நடந்தது.

    இதில் 42 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    மேலும் 202 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியும் இருந்தது. அவை அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் கிஷோர் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×