என் மலர்
நீங்கள் தேடியது "collection"
2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர்.
தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் 27.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
- அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா
- இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் முதல் நாள் வசூலாக 1.75 கோடி, 2 ஆம் நாள் 4.6 கோடி, 3-வது நாள் 9.5 கோடி ரூபாய் மற்றும் 4-5 ஆம் நாளில் 13.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தம் திரைப்படம் வெளியாகி இதுவரை உலகளவில் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் நல்ல வரவேற்பை முன்னிட்டு திரைப்படம் இலங்கை, ஆஸ்திரேலயா, மலேசியா மற்றும் யூரோப் ஆகிய நாடுகளில் திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்க சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த சினிமாடிக் யூவிவெர்ஸ் விஷ்ணுவின் 10 அவதாரங்களை படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். 2025 முதல் 2037 ஆண்டுகள் மத்தியில் இப்படங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- விஜய் தேவரகொண்டா அடுத்ததாக கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்
- திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 39 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் அதிகம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
- ஆபரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சைவ. குமணன், மாவட்ட செயலாளர் முருகு .இளஞ்செழியன், மாவட்ட பொருளாளர் குமரன் ஆகியோர் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கிய பின்னர் தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரைய தொகை என்று கூறி பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும் . நிலுவைத் தொகை என்ற பெயரில் ஆப்பரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு, திருவையாறு , பூதலூர், பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணி இன்று காலை 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில்
நடைபெற்றது.
இதில் தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டி னைட்கள் சுரேஷ்பாபு, வசந்த், பேரரசன் மற்றும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, கரந்தை தமிழ்வேள் உமா மகேஸ்வரனார், பூண்டி புஷ்பம் கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்தனர்.
புல் பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து பெரிய கோவிலுக்கு வந்தி ருந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பிளா ஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூலானது.
- தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
உண்டியல் வருவாயாக ரூ.1 கோடியே 19 லட்சத்து, 82 ஆயிரத்து, 629 ரொக்கம். தங்கம் 17 கிராம், 200 மில்லி மற்றும் 710 கிராம் வெள்ளி யும் கிடைக்க பெற்றது.
உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், கோவில் பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன் பஞ்ச மூர்த்தி, செல்லம் உள்பட பணியாளர்களும், அலு வலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
- மாதாமாதம் மின்சாரத்தை கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும்.
- மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரெயில் கட்டண சலுகை திரும்ப வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் 11-வது அமைப்பு தின விழா கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார்.
வட்ட துணைத்தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். வட்ட செயலாளர் செல்லத்துரை விளக்கி பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சமூக நீதியின் அடிப்டையில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும், மின் கட்டணம் மாதம் என்பதை தவிர்த்து மாதாமாதம் மின்சாரத்தை கணக்கீட்டு வசூல் செய்ய வேண்டும்,
இறந்துபோன ஓய்வூதியருக்கு ரூபாய் 1,50,000 குடும்பநல நதி வழங்க வேண்டும்,மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரயில் கட்டண சலுகை திரும்ப வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜமோகன், ஜெகஜோதி, நடராஜன், அன்பழகன், கருணாநிதி உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் அண்ணா துரை நன்றி கூறினார்.
- காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது
- , சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்காபக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்க ளும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியில்(டிசம்பர் மாதம்) இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற இருப்பதால், கடந்த வாரம் 16-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாரம் இரு நாட்கள் என 4 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முடிவில், ரூ.2 கோடியே 7 லட்சம் பணமும், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உண்டியலில் கிடைக்க ப்பெற்ற காணிக்கை மற்றும் பணம் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
- ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டதால் வசூலில் விறுவிறுப்பு
- ரூ.18 கோடி வசூலாகி உள்ளது
திருச்சி,
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் இந்த முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனும் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.அதில், திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000 வரை ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இந்த ஊக்கத்தொகை அறிவிப்பினால் திருச்சி மாநகராட்சி வரி வசூல் அதிகரித்துள்ளது.குறிப்பாக முதல் அரையாண்டு வரி சுழற்சிக்கான மொத்த நிலுவைத் தொகையில் 32 சதவீதத்தை திருச்சி மாநகராட்சி வசூலிக்க உதவியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரூ.55 கோடி மொத்த வரி பாக்கியில் ரூ.18 கோடியை மாநகராட்சி வசூலித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஊக்கத்தொகை அறிவிப்பால் மக்கள் ஆர்வத்துடன் வந்து வரி செலுத்தியுள்ளனர்.ஊக்கத்தொகை வழங்குவதால் மாநகராட்சிக்கு இழப்பு ஏதுமில்லை. டெபாசிட்டுக்கு நாங்கள் பெறும் வட்டி, வழங்கிய ஊக்கத்தொகையை ஈடுசெய்யும் எனக் கூறினர். மக்கள் ஒரு மண்டலத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.60 லட்சம் வரை செலுத்துகிறார்கள். முதல் அரையாண்டு வரிச் சுழற்சியில் மட்டுமே ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு காலாவதியாகிவிட்ட நிலையில், குடியிருப்பாளர்கள் வரி செலுத்தினால் அது இன்னும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
- தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் 100-க்கண க்கான வாகனங்கள் மூலமாக பல்வேறு பொரு ட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளில் பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றனர் கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர். 4 மணி நேரமும் வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரும் நிலையில் பணம் வசூலிக்கும் வாலிபர்கள் வாகன டிரைவர்களிடம் சீட்டு வழங்கி அதற்கான கட்டண தொகை வசூல் செய்கின்றனர். கட்டணம் வசூல் செய்யும் வாலிபர்கள் அடாவடியாக வாகன ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அடா வடியாக வசூல் செய்யும் வாலிபர்களிடம் ஏன்? இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள், பணம் கேட்டால் கண்டிப்பாக வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் வேலை பளு காரணமாக சில நிமிடங்கள் காலதாமதமானால் இது போன்ற அடாவடியாக வசூல் செய்வதால் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் தொ டர்ந்து அடாவடிப்போக்கில் கட்டண வசூல் செய்வதால் நாளடைவில் பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்படும் சமயத்தில் தகராறாக மாறி கடும் பாதிப்பை ஏற்படும் நிலையும் உருவாக்கி வருகின்றது. இது சம்பந்தமாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி, கட்டணம் வசூல் செய்யும் நபர்களிடம் ஒழுங்கான முறையில் பணம் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து அதிகரித்தால் வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது.
- இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை இந்த விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது. இந்நிலையில் தற்போது விற்பனைகூடம் வயலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தினால், கடந்த 60 ஆண்டு காலமாக, இப்பகுதி விவசாயிகளுக்கும் மற்றும் வணிகர்களுக்கும் எந்தவித சேவையும் செய்யவில்லை.
விற்பனைக்கூடத்திற்கு, வெளியே நடக்கும் வணிகத்திற்கு மட்டும் சந்தை கட்டணம் வசூலித்து வருகின்றனர். விற்பனைக்கூடம் வெறும் கட்டண வசூலிப்பு அலுவலகம் போல் மட்டும் செயல்பட்டு வருகின்றது. சரியான முறையில் இந்த விற்பனைகூடம் செயல்பட்டால் இங்குள்ள விவசாயிகளும் வணிகர்களும் விற்பனை கூடத்தின் சேவையைப் பெற்று பயன்பெறுவர். இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு நிரந்தரமாக்கவும், சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விற்பனை க்கூடம் அமைக்கவும் அங்கு நடைபெறும் வணிகத்திற்கு மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க சங்கம் முயற்சி செய்யும் என வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
- நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
- இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (19) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பிச்சைக்காரன் 2 போஸ்டர்
இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த போஸ்டரில் விஜய் ஆண்டனியின் படங்களில் இதுதான் அதிக வசூல் பெற்ற படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
?BLOCKBUSTER? pic.twitter.com/oZcT5gHED6
— vijayantony (@vijayantony) May 20, 2023






