search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல வாரியம் அமைத்து தர வேண்டும்; கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் மனு
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்க நிர்வாகிகள்.

    நல வாரியம் அமைத்து தர வேண்டும்; கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் மனு

    • பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
    • ஆபரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சைவ. குமணன், மாவட்ட செயலாளர் முருகு .இளஞ்செழியன், மாவட்ட பொருளாளர் குமரன் ஆகியோர் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கிய பின்னர் தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரைய தொகை என்று கூறி பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

    கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும் . நிலுவைத் தொகை என்ற பெயரில் ஆப்பரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு, திருவையாறு , பூதலூர், பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×