search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "வசூல்"

  • அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.
  • வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.

  அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டனர்.

  உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

  அப்போது உண்டியல் எண்ணிக்கையில் ரூ.3 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 501 ரூபாயும், தங்கம் 1 கிலோ 860 கிராம், வெள்ளி 24 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

  பொதுமக்கள் சார்பில் வேலாண்டி, மோகன் ஆகி யோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். 

  விழுப்புரம்:

  மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கையை மாதந்தோ றும் எண்ணுவது வழக்கம். அதன்படி அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலி ங்கம், செஞ்சி ஆய்வர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தி ல்குமார் பூசாரி, ஆகியோ ர் முன்னிலையில் உ ண்டியல்கள் திறந்து எண்ண ப்பட்டன.

  இதில் 27 லட்சத்து ஆயிரத்து 917 ரூபாய் ரொக்கமும், 70 கிராம் தங்க நகைகளும், 240 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
  • மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

  தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.

  அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர்.

  வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது.

  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.

  நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

  வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

  அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

  தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

  • பாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
  • கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது

  சேலம்:

  சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

  தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன் மாற்று பஸ்கள், வழித்தட பஸ்கள், தட நீட்டிப்பு, கூடுதல் நடைகளும் இயக்கப் பட்டன. இதன்மூலம் 4 நாட்களில் டவுன் பஸ்களில் 39 லட்சம் பயணிகள், புறநகர் பஸ்களில் 23 லட்சம் பயணிகள் என மொத்தம் 62 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

  தினமும் சராசரியை விட டவுன் பஸ்களில் கூடுதலாக 45 ஆயிரம் பேர், புறநகர் பஸ்களில் 56 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து ஆயிரம் பேர் கூடுதலாக பயணித்து உள்ளனர். அவர்களுக்காக 39 லட்சம் கி.மீ. பஸ்கள் இயக்கப்பட்டு 11.03 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

  கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது என அவர் அதில் கூறி உள்ளார்.

  • கோவை மாநகர போலீசார் புதிய நடவடிக்கை
  • ரசீதுகள் சம்பந்தப்பட்ட வாகனஓட்டியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது.

  கோவை,

  கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதுதவிர சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் மூலமாகவும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான ரசீதுகள் சம்பந்தப்பட்ட வாகனஓட்டியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது.

  வாடகைக்கு வண்டி ஓட்டுபவர்கள் ஓராண்டுக்குள் அபராத தொகையை செலுத்தி விடுகின்றனர். ஆனால் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் உடனடியாக அபராதம் செலுத்துவது இல்லை. வாகனத்ைத விற்கும்போதும், பெயர்மாற்றம் செய்யும்போது மட்டுமே நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தி வருகின்றனர்.

  இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் தற்போது வாகனஓட்டிகளிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்கும் வகையில், புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

  இதில் அபராதம் செலுத்துவோரின் செல்போன் எண், எந்த இடங்களில் விதிகளை மீறியதற்கான அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் நிலுவைத்தொகை பாக்கி விவரம் ஆகிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

  கோவையில் அபராத நிலுவைத்தொகை செலுத்த வேண்டிய நபருக்கு மேற்கண்ட சாப்ட்வேர் மூலம் செல்போன் அழைப்பு வரும். இதனை சம்பந்தப்ப ட்டவர் எடுத்தால், மறுமு னையில் பேசும் குரல்பதிவு, நீங்கள் இந்த-இந்த இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு இவ்வளவு தொகை அபராதம் விதிக்க ப்பட்டு உள்ளது.

  உங்களின் ஒட்டுமொத்த அபராத நிலுவைத்தொகையை உடடியாக கட்ட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகும். கோவை மாநகரில் செல்போன் எண்ணுக்கு குரல் பதிவை அனுப்பி அபராதம் வசூலிக்கும் முறையை அடுத்த சில நாட்களில் அமல்படுத்துவதென போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

  • தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணங்கள் குவிந்தன
  • உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. இரவு 7 மணி வரை நடந்தது

  கன்னியாகுமரி :

  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

  இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட் டுள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3 மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டி யல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

  குமரி மாவட்ட கோவில் களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சுஜித், கோவில் பொருளாளர் கண்ணதாசன் கணக்கர் முருகையா ஆகியோர் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

  இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. இரவு 7 மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத் தில் உள்ள கோவில் பணியா ளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்டனர்.

  இதில் உண்டியல் மூலம் ரூ.30 லட்சத்து 65 ஆயிரத்து 819 ரொக்க பணம் வசூலாகி உள்ளது. இதுதவிர 34 கிராம் 100 மில்லி கிராம் தங்கமும், 94 கிராம் 200 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் அமெரிக்க டாலர், மலேசியா ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர், அரபு எமிரேட்ஸ் திர்காம்ஸ் போன்ற வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.

  குமாரபாளையத்தில் மரம் வெட்டியவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் உள்ள புருஷோத்தம பெருமாள் கோவில் பின்புறம் உள்ள அரசு இடத்தில் நன்கு வளர்ந்த பெரிய மரம் ஒன்றை அப்பகுதியினர் வெட்டினர். இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

  இது குறித்து வி.ஏ.ஒ. செந்தில்குமார், ஆர்.ஐ. விஜய் ஆகியோர் தாசில்தார் தமிழரசிக்கு விசாரணை அறிக்கை சமர்பித்தனர். மரம் வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்க தாசில்தார் தமிழரசி திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

  ×