உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூல்

ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூலானது.தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
Published on

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

உண்டியல் வருவாயாக ரூ.1 கோடியே 19 லட்சத்து, 82 ஆயிரத்து, 629 ரொக்கம். தங்கம் 17 கிராம், 200 மில்லி மற்றும் 710 கிராம் வெள்ளி யும் கிடைக்க பெற்றது.

உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், கோவில் பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன் பஞ்ச மூர்த்தி, செல்லம் உள்பட பணியாளர்களும், அலு வலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com