search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.28¼ லட்சம் காணிக்கை வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தபோது எடுத்த படம் 

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.28¼ லட்சம் காணிக்கை வசூல்

    • தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் குவிந்தன
    • உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்தக் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டுவருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும்நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர்தர்மேந்திரா ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது.மாலை4மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில் பணியா ளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 39 ஆயித்து 163 ரொக்கபணம் வசூலாகி உள்ளது. இதுதவிர 11 கிராம் தங்கமும் 193 கிராம் 600 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகிஉள்ளது. இது தவிர கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான திட்டத்துக்கான அன்னதான உண்டியலும் திறந்து என்னபட்டது.

    இந்த அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 866 வசூல் ஆகி உள்ளது. ஆக மொத்தம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 32 ஆயிரத்து 346 ரொக்க பணம் காணிக்கை யாக வசூல் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    Next Story
    ×