search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1¼ லட்சம் வசூல்
    X

    கோப்பு படம் 

    பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1¼ லட்சம் வசூல்

    • உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    • 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல்நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர்ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் தர்மேந்தி ரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண் ணப்பட்டது. இந்த உண்டி யல் எண்ணும் பணி யில் திருக்கோவில் பணியா ளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 469 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப் பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    Next Story
    ×