என் மலர்
நீங்கள் தேடியது "collection record"
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆண்பாவம் பொல்லாதது' படம் கடந்த அக்டோபர் 31-ந்தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 2 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள ஹிருதயப்பூர்வம் படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், சங்கீதா, சித்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அகில் சத்யன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ஒரு ஃபீல் குட் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதால் படத்தை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலில் கடந்துள்ளது. இதனை படக்குழு மற்றும் மோகன்லால் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாள திரைப்படங்களில் அதிகம் வசூலித்த ஓபனிங்கில் ஹிருஹயபூர்வம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
- ரசிகர்கள் பலரும் லோகா படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி 7 நாட்களான நிலையில், உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா வெளியானது.
- திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
- இந்நிலையில் இன்று 4- நாளாக தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது
- .மேலும் இப்படம் தற்போது 4 - நாட்கள் மட்டும் ரூ.50 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.
மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்துது. இப்படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார். படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.
இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.கடந்த 28- ந் தேதி தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
இப்படத்தின் பிரீமியர் ஷோ' பார்த்து நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டினார்கள்.
இந்நிலையில் இன்று 4- நாளாக தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது.ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த உற்சாகமாக பார்த்து மகிழ்ச்சி அடைந்து பாராட்டி வருகின்றனர்.மேலும் இப்படம் தற்போது 4 - நாட்கள் மட்டும் ரூ.50 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில் தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது
- இப்படம் 25 - நாளில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.
மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குனர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்தது. இப்படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.

இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்தார். கடந்த 28- ந் தேதி தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ' பார்த்து நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டினார்கள்.

இந்நிலையில் தியேட்டர்களில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது.ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த உற்சாகமாக பார்த்து வருகின்றனர். மேலும் இப்படம் தற்போது 25 - நாளில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






