என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோகன்லால்"

    • PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • PATRIOT படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.

    அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 130 நாட்கள் இப்படத்தில் படப்பிடிப்பு நடந்தது. மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
    • மோகன்லால் தாயருக்கு 90 வயதாகும்.

    கேரள மாநிலத்தின் முன்னணி நடிகரான மோகன்லாலின் தாயார் சந்தானாகுமாரி அம்மா (90) வயது மூப்பு தொடர்பான நோயால் இன்று காலமானார். நோய் பாதிப்பால் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். இவர் காலமானபோது, மோகன்லால் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.

    மோகன்லால் தாயார் மறைவு செய்தியை அறிந்த அவரின் நெருங்கிய நண்பர்களாக மம்மூட்டி மற்றும் கேரள சினமா திரையுலக பிரபலங்கள் அவரது வீட்டிற்கு சென்று, அஞ்சலி செலுத்தினர். மோகன்லாலின் தந்தை விஸ்வநாதன் நாயர் கடந்த சில வருடத்திற்கு முன் காலமானார். அவர் சீனியர் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்.

    சினிமா துறையில் தன்னுடைய வெற்றிக்கு தந்தை மற்றும் தாயின் உத்வேகம்தான் காரணம் என அடிக்கடி கூறுவார்.

    கேரள மாநில முதல்வர் பினராயி விஜய், சட்டசபை சபாநாயகர் ஏ.என். ஷாம்சீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • கன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா நடித்துள்ளனர்.
    • அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

    மோகன்லால் நடித்துள்ள பான் இந்தியன் காவியம் விருஷபா. இதில் மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.

    அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 25 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார்.
    • மோகன்லால் நடத்தும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்தது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'டைஸ் ஐரே' என்ற பேய் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா-வை மோகன்லால் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.

    மோகன்லால் நடத்தும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி இந்த அறிவிப்பு வந்தது.

    விஸ்மயா நடிக்கும் முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இப்படத்திற்கு, 'துடக்கம்' எனப் பெயரிடப்பட்டது.

    இந்த படத்தில் மோகன்லாலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இடுக்கியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

     

    • சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
    • 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது.

    டிசம்பர் 21, 2011 அன்று, கேரள மாநிலம் கொச்சியின் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இரண்டு ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

    தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் மோகன்லாலுக்கு 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது. தந்தங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    பின்னர், மாநில அரசு அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முயன்றபோது பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது.

    கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் உயர் நீதிமன்றத்தை அணுகினார். மறுபுறம், ஜேம்ஸ் மேத்யூ என்ற மற்றொரு நபர் யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக மோகன்லால் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டபூர்வமானது அல்ல என கூறி அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    2015 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில் நடைமுறை பிழைகள் இருகின்றன. எனவே அது செல்லாது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மோகன்லால் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • விருஷபா படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • விருஷபா படத்திற்கு Sam CS இசை அமைத்துள்ளார்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக விருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.

    ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், விருஷபா படம் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • 2001 பத்மஸ்ரீ விருது, 2019 இல் பத்ம பூஷண் விருது, 2025-க்கான தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
    • ஆகஸ்ட் 2024 இல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலோச்சி வரும் மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    கலைத்துறைக்கு அவர் செய்த சேவைகளுக்காக , 2001 பத்மஸ்ரீ விருது, 2019 இல் பத்ம பூஷண் விருது, 2025-க்கான தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

    அதேநேரம் இந்திய பிராந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியையும் மோகன்லால் வகிக்கிறார். அவருக்கு இந்த கௌரவம் மே 2009 இல் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2024 இல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.

    இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியை சந்தித்து மோகன்லால் பாராட்டு பெற்றார். 7 தளபதிகள் முன்னிலையில் மோகன்லாலுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உபேந்திர திவேதி கௌரவித்தார். 

     இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால்,"ராணுவத் தளபதியிடம் இருந்து பாராட்டு பெறுவது ஒரு பெரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை.

    இது ஒரு நல்ல சந்திப்பு. தாதாசாகேப் பால்கே விருது இதற்கு ஒரு காரணம். நான் 16 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன்.புதிய தலைமுறையை ராணுவத்திற்குள் கொண்டு வர முயற்சிப்பேன்" என்று கூறினார்.  

    • மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
    • மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.

    கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

    'லால்-சலாம்' என்ற தலைப்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மோகன்லாலுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.

    விழாவில் பேசிய பினராயி விஜயன், "மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம். இது ஒவ்வொரு மலையாளியையும் பெருமைப்பட வைக்கிறது. இந்த விருது மலையாள சினிமாவின் கலை மதிப்பை தேசிய அளவில் நிலைநிறுத்தியுள்ளது" என்று கூறினார்.

    பாராட்டு விழாவில் ஓவியர் ஏ. ராமச்சந்திரன் வரைந்த ஓவியம் மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

    • நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
    • இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.

    இந்த நிலையில், மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் PATRIOT படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
    • பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.

    இதனை தொடர்ந்து நடிகர் மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பதிவில், "சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் என் வாழ்க்கையில் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்பியுள்ளேன். கேமரா அழைக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு MMMN என்று தெரிவித்துள்ள படக்குழு டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, மகேஷ் நாராயணன் ஆகியோரின் பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தைக் கொண்டு படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மம்மூட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.

    கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா எடுக்கிறது.

    'லால்-சலாம்' என்ற தலைப்பில் அக்டோபர் 4 ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது என கேரள கலாச்சார விவகார அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார்.

    மலையாள சினிமாவிற்கும் கேரள மக்களுக்கும் மோகன்லாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.

    இந்த விழாவில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் மற்றும் பாடகர்கள் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

    மேலும் பாடகர்கள் கே ஜே யேசுதாஸ் மற்றும் கே எஸ் சித்ரா ஆகியோரின் வீடியோவும் நிகழ்வின் இடம்பெற உள்ளது. இந்த விழாவின் போது மோகன்லால் கேரள அரசால் முறையே கௌரவிக்கப்படுவார்.   

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
    • பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் மம்மூட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அவரை தொடர்ந்து நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.  

    ×