என் மலர்
நீங்கள் தேடியது "Pinarayi Vijayan"
- கோழிக்கோட்டில் நிபா வைரசால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இது குறித்து மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருகிறது என முதல் மந்திரி தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிபா வைரஸ் தொற்று காரணமாக, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.
இருவரும் உயிரிழந்ததற்கு நிபா வைரஸ் தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பேஸ்புக் பக்கத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவனமாக இருப்பது நிலைமையைச் சமாளிக்கத் தேவையான வழியாகும். சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தன் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் உள்ள திரையரங்கில் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு- கார்கே
- நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம்- ராகுல் காந்தி
கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.
உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோர் கர்நாடகா சென்றுள்ளனர். அவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
மல்லிகார்ஜூன கார்கே தனது இரங்கல் செய்தியில் ''நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு. சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் நேர்மையான கட்சி தலைவர். இன்று அவரை இழந்துள்ளோம். நான் மிகவும் கவலையடைகிறேன். இது மிகப்பெரிய இழப்பு'' என்றார்.
ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் ''இந்திய மற்றும் கேரள உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். கேரள மக்களின் உண்மையான தலைவராக திகழ்ந்தவர். அவரை நாம் தவற விடுகிறோம். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காகவும், கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டவர்- மோடி
- மக்கள் வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருந்தவர், திறமையான நிர்வாகி- பினராயி விஜயன்
கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 79 வயதாகும் உம்மன் சாண்டியின் மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மோடி தனது இரங்கல் குறித்து டுவிட்டர் செய்தியில் ''மிகவும் எளிமையாக பழகக்கூடிய, தனது வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காகவும், கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டவரை நாம் இழந்துள்ளோம். நாங்கள் இருவரும் அவரவர் மாநில முதல்வராகவும், நான் பிரதமரான பின், சந்தித்த நிகழ்வுகளை திரும்பி பார்க்கிறேன். அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடன் என்னுடைய எண்ணங்கள் இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ''ஒரே வருடத்தில்தான் நாங்கள் இருவரும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டோம். மாணவர் வாழ்வில் இருந்து அரசியல் வாழ்வு வரை ஒரே நிலையில் இருந்தது. தற்போது அவரது பிரிவு மிகவும் வருதத்தை அளிக்கிறது. மக்கள் வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருந்தவர், திறமையான நிர்வாகி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
- குடும்பத்தினர் இறப்பின் கீழ் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு உள்ளவர்கள் ஆவர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இறப்பின் கீழ் வேலை பெற்ற அரசு ஊழியர்கள், இறந்த ஊழியரை சார்ந்த பிறரை புறக்கணித்தால், அவரது சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
குடும்பத்தினர் இறப்பின் கீழ் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு உள்ளவர்கள் ஆவர். மேலும் அவர்களது தேவைகளான உணவு, சொத்து, தங்குமிடம், சிகிச்சை பராமரிப்பு உள்ளிட்டவைகளை கவனிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதுபோல் கவனிக்காமல் இருக்கும் அரசு ஊழியர் மீது எழுத்துப்பூர்வமான புகாரை நியமன அதிகாரியிடம் பதிவு செய்யலாம்.
அரசு முடிவின்படி அத்தகைய ஊழியர்கள் மீது பெறப்படும் புகார் உண்மை யென நிரூபிக்கப்பட்டால், அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் அவர்களைச் சார்ந்தவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது
திருவனந்தபுரம்:
கேரளாவில் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வந்தவர் மோன்சன் மாவுங்கால். இவர் தங்கம் கடத்தல் மற்றும் பழமையான பொருட்கள் விற்பனையில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர் மீது பாலியல் வழக்கும் இருந்தது. இந்த வழக்கில் மோன்சன் மாவுங்காலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மோன்சன் மாவுங்காலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர், கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், நான் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. கோர்ட்டில் வழக்கை சந்திப்பேன். நான் பயப்படவோ ஒளிந்து கொள்ளவோ போவதில்லை என்றார்.
இந்நிலையில் சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் 2 நாட்கள் கருப்பு தினம் கடைபிடிப்பதாகவும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் கட்சிகளுக்கு எதிராக கேரள அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக கூறி பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
- முகமது ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருப்பவர் முகமது ரியாஸ். இவர் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மருமகன் ஆவார்.
முகமது ரியாஸ், கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோழிக்கோடு மாவட்ட செயலாளராக இருந்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது, வடகரையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் சூறையாடப்பட்டது.
இதுதொடர்பாக முகமது ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வடகரை தபால் அதிகாரி சார்பில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாவட்ட கோர்ட்டு, அபராத தொகையை கட்ட உத்தரவிட்டது.
இருப்பினும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அபராதத்தை கட்டாமல் இருந்து வந்தனர். இதுதொடர்பாக வடகரை தபால் துறை சார்பில், வடகரை கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, வட்டி மற்றும் கோர்ட்டு செலவுத் தொகை சேர்த்து ரூ.3.81 லட்சம் கட்ட உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மந்திரி முகமது ரியாஸ் உள்பட 12 பேரும், நீதிபதி ஜோஜி தாமஸ் முன்னி லையில் அபராத தொகையை கட்டினர்.
- மலையோர மாவட்டங்களில் பறவை காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் பரவி வருவது சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்தது.
- மலப்புரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலியானான்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்பு பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். இது தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே மலையோர மாவட்டங்களில் பறவை காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் பரவி வருவது சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்தது. அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலியானான். அவனது ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அந்த சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
கேரளாவில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அடுத்த 5 நாட்களுக்கு அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- 12-ந் தேதி வாஷிங்டனில், உலக வங்கி தெற்கு ஆசிய துணை தலைவரை சந்திக்கிறார்.
- 14-ந் தேதி நியூயார்க்கில் இருந்து கியூபா செல்கிறார்.
திருவனந்தபுரம் :
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று (வியாழக்கிழமை) வெளிநாடு புறப்படுகிறார். இவர் அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 10-ந் தேதி அமெரிக்காவில் டைம் ஸ்கொயரில் நடைபெறும் உலக கேரள சபை மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். 11-ந் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல்-மந்திரி பினராயி விஜயன், அமெரிக்காவில் மலையாளி முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மாணவர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரை சந்திக்கிறார்.
12-ந் தேதி வாஷிங்டனில், உலக வங்கி தெற்கு ஆசிய துணை தலைவரை சந்திக்கிறார். 13-ந் தேதி மேரிலேண்ட் செல்கிறார். 14-ந் தேதி நியூயார்க்கில் இருந்து கியூபா செல்கிறார். கியூபாவில் 15, 16 ஆகிய 2 நாட்கள் பல்வேறு நிகழ்சிகளில் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். முதல்-மந்திரியுடன் அவருடைய மனைவி கமலா, உதவியாளர் வி.எம். சுனீஷ், மந்திரிகள் கே.என். பாலகோபால், வீணா ஜார்ஜ் சபாநாயகர் சம்சீர், தலைமை செயலாளர் வி.பி. ஜாய் மற்றும் பல்வேறு துறை செயலாளர்கள் உடன் செல்கிறார்கள். முதல்-மந்திரி மற்றும் குழுவினர் 17-ந் தேதி கேரளா திரும்புகின்றனர்.
- நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் கேரள சபாவின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
- அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் அங்கிருந்து அவர் கியூபா நாட்டிற்கு செல்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை அமெரிக்கா செல்கிறார். வருகிற 14-ந் தேதி வரை அமெரிக்காவில் இருப்பார். வருகிற 10-ந் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் கேரள சபாவின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
அதன்பின்பு ஐக்கிய நாட்டு சபை அலுவலகத்திற்கும் செல்கிறார். மேலும் அங்குள்ள தொழில் அதிபர்கள், தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார். அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் அங்கிருந்து அவர் கியூபா நாட்டிற்கு செல்கிறார்.
கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் சபா நாயகர் ஷம்ஷீர், நிதி மந்திரி பாலகோபால் மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள்.