என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெனிசுலா"

    • அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
    • கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது

    அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.

    இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

    ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன.

    இந்நிலையில், வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கவனத்தில் கொள்ளவும்" என்று சரிகை விடுத்துள்ளார்.

    டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு 'காலனித்துவ அச்சுறுத்தல்' என்று தெரிவித்துள்ளது.

    • துருக்கி ஏர்லைன்ஸ் இன்று முதல் நவம்பர் 28-ந்தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
    • 6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இந்த நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.

    உலகின் சக்தி வாய்ந்த யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது. இது போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    இதனால் வெனிசுலா பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது. அதன்படி சிறப்பு அவசரநிலையை அதிபர் நிகோலஸ் அறிவித்து உள்ளார். 'பிளான் இன்டிபென் டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

    ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.

    6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் இன்று முதல் நவம்பர் 28-ந்தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.

    • ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
    • பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

    2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

    இந்தநிலையில் நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா அரசு தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் கூறும்போது, மரியா கொரினா மீது குற்றவியல் விசாரணைகள் உள்ளன. எனவே அவர் வெனிசுலாவில் இருந்து வெளியே சென்றால் தப்பி ஓடியவராகக் கருதப்படுவார் என்றார்.

    • வெனிசுலா அதிபர் நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
    • அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

    அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

    இதையடுத்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. டிரம்பின் இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    இதற்கிடையே அமெரிக்கா சமீபகாலமாக கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்து வருகிறது. மேலும் வெனிசுலாவிற்குள் ராணுவ நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக டிரம்பிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.

    இந்த நிலையில் ஆபரேசன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களையும், 15 ஆயிரம் துருப்புகளையும் கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க ராணுவம் குவித்துள்ளதால் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து சிறப்பு அவசர நிலையை வெனிசுலா அதிபர் நிகோலஸ் அறிவித்து நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அது என்னவென்று இப்போது என்னால் சொல்ல முடியாது. அதுபற்றி விரைவில் சொல்வேன் என்றார். இதனால் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக கருதப்படுகிறது.

    • தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2-ஆக பதிவானது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கம் பக்கத்து மாகாணங்களிலும் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்கள் வெனின்சுலாவை நோக்கி நகர்கின்றன.
    • உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டது வெனிசுலா.

    கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.

    அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்களை வெனின்சுலாவை நோக்கி அமெரிக்க ராணுவம் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    இதனால் வெனிசுலா எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதாகவும், இந்த இராணுவ நடவடிக்கை அவற்றை அடக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு இந்த போதைப்பொருள் மாஃபியாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்நது கூறி வருகிறார்.

    அது மட்டுமல்லாமல், மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 430 கோடி) வெகுமதியையும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

    மேலும், "மதுரோ அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன" என்று டிரம்ப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் நேரடியாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.  

    • பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
    • தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக கூறி எதிர்க்கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டது.

    கராகஸ்:

    வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.

    54 கட்சிகள் கலந்துகொண்ட இந்த தேர்தலை அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் வெனிசுலாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன.

    மொத்தம் 285 உறுப்பினர்களைக் கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சியினர் 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும், மாகாணங்களில் 24 இடங்களில் 23 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் அந்நாட்டின் புதிய அதிபராக நிகோலஸ் மதுரோ மீண்டும் தேர்வாகி பதவியேற்க உள்ளார்.

    • டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வரும்.

    வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், வெனிசுலா நாடு அமெரிக்காவுக்கு எதிரியாக செயல்பட்டு வருகிறது. வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு காரணமாக சீனா, ஸ்பெயின், இந்தியா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் வெனிசுலா ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த எண்ணெயில் சீனா 68 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வாங்கியுள்ளது அமெரிக்க எரிசக்தித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வெனிசுலாவுக்கு எதிராக வரிவிதிப்பு அறிவித்துள்ள போதிலும், அமெரிக்கா தற்போதும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்கா 8.6 பாரெல் எண்ணெயை வெனிசுலாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
    • விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும்.

    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அங்கோஸ்டுரா நகராட்சியில் புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும். இதனால் மீட்புக் குழுவினர் உடனடியாக செல்ல முடியவில்லை. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    தங்கச் சுரங்கத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து இருந்தனர்.அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலர் தங்கச் சுரங்கங்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    வெனிசுலாவில் கடந்த 2016-ம் ஆண்டு,புதிய வருவாய் திட்டமாக, நாட்டின் நடுப்பகுதி முழுவதும் ஒரு பெரிய சுரங்க மேம்பாட்டு மண்டலத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுவியது. இதையடுத்து தங்கம், வைரங்கள், தாமிரம் மற்றும் பிற கனிமங்களுக்கான சுரங்க நடவடிக்கைகள் தொடங்கின.மேலும் அந்த மண்டலத்திற்கு வெளியே சட்டவிரோத சுரங்கங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிகோலஸ் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்க வில்லை.
    • வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் 51.2 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

    தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று. எங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ், அதிபர் மதுரோவை தோற்கடித்ததற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

    தங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சா 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறும்போது, நாங்கள் தான் வெற்றி பெற்றோம், வெனி சுலாவின் புதிய அதிபராக எட்மண்டோ கோன்சாலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.

    இதற்கிடையே நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரோவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த மதுரோவின் பிரச்சார சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். பால்கன் மாநிலத்தில் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேசின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் இடித்தனர்.

    இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர். சில வாகனங்களுக்கும் தீ வைக் கப்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதை யடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். இதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

    சில போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை நோக்கி சென்றனர். அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறை காரணமாக வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.

    இதற்கிடையே அதிபர் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஏற்கவில்லை. அதே வேளையில் மதுரோவுக்கு ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

    • தனியார் நிறுவனங்களுக்கு குறைவான அரசு கட்டுப்பாடுகள் இருப்பதுதான் சுதந்திரமான பொருளாதாரம் ஆகும்.
    • பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.

    சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை முந்தி ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ளது.

    தனியார் நிறுவனங்களுக்கு குறைவான அரசு கட்டுப்பாடுகள் இருப்பதும், சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட சந்தையின் விலைகள் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் நிர்ணயிப்பதும், குறிப்பாக இதற்குள் அரசின் தலையீடு எதுவும் இல்லாமல் இருப்பது தான் சுதந்திரமான பொருளாதாரம் ஆகும்.

    ஃப்ரேசர் நிறுவனம் நடத்திய உலகின் பொருளாதார சுதந்திரம் பற்றிய அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இந்த அறிக்கையில் சிங்கப்பூர் 8.55 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் ஹாங்காங் 8.58 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் ஆசியாவின் சிறந்த நிதி நிலையமாக ஹாங்காங் உருவெடுத்துள்ளது.

    பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்தும் 4 ஆம் இடத்தில் நியூசிலாந்தும் 5 ஆம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. 3.02 புள்ளிகள் பெற்று வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.

    • 10 அமெரிக்கர்களை வெனிசுலா சிறைப்பிடித்தது.
    • ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    அமெரிக்கா-வெனிசுலா நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே 10 அமெரிக்கர்களை வெனிசுலா சிறைப்பிடித்தது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது.

    இதில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை தென் அமெரிக்க நாட்டிற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்புப் தூதர் ரிச்சர்ட் கிரெனெல் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் 6 அமெரிக்க பிணைக்கைதிகளை வெனிசுலா அரசு விடுதலை செய்துள்ளது. இதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். அதேவேளையில் இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    ×