என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா"
- பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
- திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது
கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று காலை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் அது வெறும் புரளி என்று போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
- ஷோபா சுரேந்திரன் வீடு அருகே வெடி பொருள் எதுவும் வீசப்பட வில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநில பாஜக கட்சியின் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன். இவர் முன்னாள் மாநில தலைவர் சுரேந்திரனின் மனைவி ஆவார். இவர்களது வீடு திருச்சூர் அய்யந்தோல் பகுதியில் இருக்கிறது.
இங்கு நேற்று முன்தினம் இரவு பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் கட்சியினர் அங்கு குவிந்தனர். யாரோ வெடிபொருட்களை வீசிச் சென்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.
இதில் ஷோபா சுரேந்திரன் வீடு அருகே வெடி பொருள் எதுவும் வீசப்படவில்லை. அந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்து உள்ளனர் என தெரிய வந்தது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததில்லை என்ற போதிலும் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- 3 ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
- பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களில் அவர்கள் சுற்றி பார்த்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்
இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனில் நரேந்திரன், அஜித்குமார், கிரிஷ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றிப்பார்த்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் தான் அப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் நீதிபதிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர்.
- கேரளா சமீபத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சந்தித்தது.
- இயற்கை பேரிடர்களால் அழிவை சந்தித்த கேரளாவிற்கு மத்திய அரசு எந்தவிதமாக உதவியும் செய்யவில்லை.
மத்திய அரசு கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலையை எடுத்து வருகிறது. தென்மாநிலமான கேரளாவை அழிக்க விரும்புகிறது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப். அரசு 4ஆம் கொண்டாட்ட விழாவில் பேசும்போது பினராயி விஜயன் கூறியதாவது:-
கேரளா சமீபத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சந்தித்தது. இயற்கை பேரிடர்களால் அழிவை சந்தித்த கேரளாவிற்கு மத்திய அரசு எந்தவிதமாக உதவியும் செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு கேரளாவிற்கு எதிராக முற்றிலும் எதிர்மறையான நிலையை எடுத்தது. மற்ற இடத்தில் இருந்து தருவதாக சொன்ன உதவிகளைக் கூட அவர்களுடைய அதிகாரத்தால் தடுத்தது நிறுத்த முயற்சித்தனர்.
கேரளா நொறுங்கட்டும், இன்னும் நொறுங்ககட்டும் என நினைத்தனர். அழிவு மனப்பான்மையுடன் மத்திய அரசு வழி நடத்தப்பட்டது.
பல வருடத்திற்கு முன் கேரளா மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து கேரளா எப்படி மீளப்போகிறது என்று ஒட்டு மொத்த உலகமும் நினைத்தது. இயற்கை சீற்றத்தில் இருந்து மாநிலம் தப்பியது பற்றி நாடும், உலகமும் மகிழ்ச்சி அடைந்தன.
எப்படி நம்மால் தப்பிக்க முடிந்தது?. இதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் அதன் மக்ககள். கடினமான நேரங்கள் மற்றும் சவால்களில் இருந்து தப்பிக்க ஒற்றுமை மற்றும் மக்கள் வலிமையாக இருந்தனர். கேரளாவின் அழிவதை மத்திய அரசு விரும்பி, அதற்காக எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் கேரளா நொறுங்கி போகவில்லை.
இவ்வாறு பினராயி விஜயன் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
- சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார்.
- ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது
2024ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.
சிறந்த நடிகருக்கான விருது ஆடு ஜீவிதம் படத்திற்காக பிரித்விராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனர்: விருதை பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்) வென்றார். ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தமாக 9 விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகைக்கான விருது உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசிக்கும் தடவு படத்திற்காக பீனா ஆர் சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த படத்திற்கான விருது மம்முட்டியின் 'காதல் - தி கோர்' படத்திற்கு வழங்கப்பட்டது.
- அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அவர் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார்.
- . இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி(27) என்ற மகளும் அகிலேஷ்(24) என்ற மகனும் இருந்தனர்.
சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்தார். மகள் அஞ்சலி வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இவர் விடுமுறைக்கு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அஞ்சலி தனது தந்தையின் கடைக்கு அருகில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த ஒருவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலி வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். இதனால் அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரடைந்தனர். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அஞ்சலியை கண்டித்து பெற்றோர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த தாய் ஸ்ரீஜா, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றி கொண்டது. இதனால் 3 பேரும் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்தனர். குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவின் மகன் அகிலேசும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தீயணைப்பு துறைக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து காயங்களுடன் கிடந்த 4 போரையும் மீட்டு கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீஜா பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியபாலனும், அஞ்சலியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த அகிலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எருமேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல.
- பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.
மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர்.
மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தனர். அதுமட்டுமின்றி வரலாற்றில் முதல் முறையாக, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நாட்டின் ஜனாதிபதிக்கு 3 மாதம் காலக்கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை விமர்சித்து கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அவர் கூறியதாவது, "மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு?.
அரசமைப்பில் திருத்தங்கள் செய்ய, நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், ஆனால் 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்" என விமர்சித்துள்ளார்.

கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தை விமர்சித்ததற்கு குறித்து சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் பொருந்தும். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி கூட தாமதப்படுத்துவது இல்லை. அப்படியானால், ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் ஆளுநர்களுக்கு எப்படி இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் இதுகுறித்து பேசுகையில், "பாராளுமன்றத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை ஆளுநர் அர்லேகர் மகிமைப்படுத்துகிறார், ஆனால் சட்டமன்றத்தின் அதிகாரத்தை மதிக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு சங் பரிவாரங்களுக்கு எதிரான "சில்வர் லைன்" என்று தெரிவித்தார்.
- மற்றொரு நோயாளியை இறக்கிவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தினார்
- கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்றது.
கேரளாவில் 2020இல் கோவிட் தொற்று பாதித்த 19 வயது பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று சமயமான 2020 இல் செப்டம்பர் 5 ஆம் தேதி பத்தினம்திட்டா மாவட்டத்தின் அடூர் பொது மருத்துவமனையில் இருந்து பந்தளத்தில் உள்ள அர்ச்சனா மருத்துவமனை கோவிட் சிறப்பு வார்டுக்கு தொற்று பாதித்த 19 வயது பெண் ஆம்புலன்சில் மற்றொரு நோயாளியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
மற்றொரு நோயாளியை பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தி 19 வயது பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின் அப்பெண்ணை கொண்டு சேர்க்கவேண்டிய பந்தளம் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் தப்பியோடினார்.

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்ததை மருத்துவமனை ஊழியர்களிடமும் பெற்றோரிடமும் முறையிட்டார். இதைத்தொடர்ந்து வழங்கப்பட புகாரில், அடுத்த நாளே அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் நௌபல் (Noufal) கைது செய்யப்பட்டார்.
கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று அவர் குற்றவாளி என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
- பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அந்த பருந்து வசதியாக அமர்ந்துகொண்டது.
- கீழே திரண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சலுக்கு மத்தியிலும், பருந்து அசையாமல் இருந்தது.
கேரளாவில் அரசு ஊழியர் துறைத் தேர்வில், செம்பருந்து பறவை தேர்வரின் ஹால்டிக்கெட்டை தூக்கிச் சென்ற விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது.
கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று அரசு ஊழியர் துறைத் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு முன் காலை 7.20 மணியளவில் தேர்வறைக்கு வெளியே படித்துக்கொண்டிருந்த பெண் தேர்வரிடம் இருந்து ஹால்டிக்கெட்டை பருந்து பறித்துப் கொண்டு பறந்தது.
ஹால்டிக்கெட்டை பிடித்தபடி பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அந்த பருந்து வசதியாக அமர்ந்துகொண்டது.
கீழே திரண்டிருந்த கூட்டத்தினரின் கூச்சலுக்கு மத்தியிலும், பருந்து அசையாமல் இருந்து, ஹால்டிக்கெட்டை பல நிமிடங்கள் பிடித்துக் கொண்டிருந்தது.
இருப்பினும் தேர்வு தொடங்கும் முன் அந்த பருந்து இறுதியில் ஹால்டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது. இதனால் அந்த பெண் தேர்வர் குறித்த நேரத்தில் தேர்வு எழுத முடிந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை.
- சாபம் விட்டு விடுவேன் என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் அலகோடு உதயகிரி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபி. அந்த பகுதியில் உள்ள மதரசா ஒன்றில் ஆசிரியராக இருந்துவந்த அவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 2020-2021 ஆண்டுகளில் மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தபடி இருந்திருக்கிறார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால், "சாபம் விட்டு விடுவேன்" என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
இதுகுறித்து பழையங்காடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் முகமது ரபி மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கேரளா தளிப்பரம்பா போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ், குற்றம் சாட்டப்பட்ட முகமது ரபிக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.9 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முகமதுரபியை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
போக்சோ வழக்கில் 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முகமது ரபி, இதற்கு முன்பு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 26 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்து வந்த நிலையில் தான், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை வரும் 2026-ல் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
- இந்தியா ஒரு வல்லரசு என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உலகிற்கு காட்டினார்.
பனாஜி:
நாடு முழுவதும் பா.ஜ.க. நிறுவன தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக கோவாவின் பனாஜியில் அடல் ஸ்ம்ருதி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பிரமோத் சாவந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வரும் 10 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இரு தென் மாநிலங்களும் 2026-ல் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானியின் காலத்தில் தொடங்கிய பணிகள் இப்போது பலனளிக்கின்றன. இந்தியா ஒரு வல்லரசு என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உலகிற்கு காட்டினார். பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தினார். சோதனைகளை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது என்பதை உலகிற்கு காட்டினார்.
நாட்டில் மொபைல் போன் புரட்சியில் வாஜ்பாய் முக்கிய பங்கு வகித்தார். நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்தக் கருத்தை அவர் கொண்டு சென்றார் என தெரிவித்தார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
வக்பு வாரிய சட்டமசோதாவிற்கு கேரளா முதலமைச்சர் பினாரயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிகமான முஸ்லிம் மக்கள் வாழும் கேரளாவில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது .
இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டத்தின்படி, புதிய வக்பு வாரியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை அரசாங்கம் விரைவில் முடிக்கும் என்று கேர்ளா வக்பு அமைச்சர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதன்மூலம் புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியம் அமைக்கப்படவுள்ள முதல் மாநிலமாக கேரளா மாறும் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் வக்பு வாரியத்தில் பதவிக்காலம் கடந்தாண்டு டிசம்பர் 19 அன்று முடிவடைந்தது. பின்னர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.