என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அமைச்சரவை"
- சென்னை மற்றும் சூரத் இடையிலான பயண நேரம் சுமார் 45% குறையும்
- 5.6 கோடிக்கும் அதிகமான மனித வேலைநாட்களை உருவாக்கும்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் - சோலாப்பூர் இடையேயான மிகப்பெரிய ஆறு வழிச்சாலை மற்றும் ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை-326 விரிவாக்கம் என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 374 கி.மீ நீளம் கொண்ட 6 வழி பசுமைவழி விரைவுச்சாலைக்கு ரூ. 19,142 கோடியும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு ரூ.1,526 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறுவழிச்சாலை மும்பை - சென்னை மற்றும் சூரத் - சென்னை பொருளாதார வழித்தடங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தப் பாதையில் 27 பெரிய பாலங்கள், 164 சிறிய பாலங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் சூரத் இடையிலான பயண நேரம் சுமார் 45% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாசிக், அஹில்யாநகர் , தாராசிவ் மற்றும் சோலாப்பூர் மாவட்டங்கள் வழியாக செல்லும்.
ரூ.1,526 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இரண்டாவது திட்டம், கனிம வளம் நிறைந்த அதேசமயம் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அலுமினிய உற்பத்தி போன்ற தொழில்களுக்கு ஆதரவளிப்பதுடன், சந்தை வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள காபி சாகுபடி போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கும் உறுதுணையாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
இதில் ஒடிசாவின் மோகனாவிலிருந்து கோராபுட் வரையிலான 206 கி.மீ தொலைவு கொண்ட நெடுஞ்சாலை பலப்படுத்தப்பட்டு இரு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 5.6 கோடிக்கும் அதிகமான மனித வேலைநாட்களை உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
- பனிப்பொழிவு பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ .11,718 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு ரூ.11,718.24 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இது இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது முறையாக எடுக்கப்படுகிறது. முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் மற்றும் செப்டம்பர்க்கு இடையில் நடத்தப்படும். இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு , பிப்ரவரி 2027 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு பகுதிகளான லடாக், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் அடுத்தாண்டு தொடங்கவுள்ள கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு ஆகும். மொபைல் போன்கள் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் முழு செயல்முறையையும் நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் வெப் போர்டல் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.






