என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வினி வைஷ்ணவ்"

    • Grok AI இடம் Prompt மூலம், அந்தப் பெண்களின் ஆடைகளைக் குறைத்தும், அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கவும் கூறுகின்றனர்.
    • கீழ்த்தரமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் 'Grok' இத்தகு நடத்தையை ஊக்குவிக்கிறது.

    எக்ஸ் தளத்தில் உள்ள Grok செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெண்களை தவறாக சித்தரிக்க பயன்படுத்தப்படுவது குறித்து உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி, மத்திய ரெயில்வே மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவரது கடிதத்தில், "

    சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் ஒரு புதிய ஆபத்தான போக்கு உருவெடுத்துள்ளது.

    எக்ஸ் தளத்தின் 'Grok AI' வசதியைப் பயன்படுத்தி, ஆண்கள் சிலர் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுகின்றனர்.

    பின்னர் அந்த Grok AI இடம் Prompt மூலம், அந்தப் பெண்களின் ஆடைகளைக் குறைத்தும், அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கவும் கூறுகின்றனர். Grok ஏஐயும் அப்பெண்களின் ஆடைகளை குறைகிறது.

    இது சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றும் பெண்களையும் குறிவைத்து நடத்தப்படுகிறது.

    மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இத்தகைய கீழ்த்தரமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் 'Grok' இத்தகு நடத்தையை ஊக்குவிக்கிறது.

    இது பெண்களின் தனியுரிமையை மீறுவதுடன், அவர்களின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதுமாகும்.

    பெண்களுக்கான பாதுகாப்பான இடமாக இந்தத் தளம் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தங்கள் ஏஐ செயலிகளில் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் நீங்கள் அமைச்சராக வலுவாக வலியுறுத்த வேண்டும்.

    இதே போன்ற போக்குகள் மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தளங்களிலும் எந்தத் தடையுமின்றி அரங்கேறுவதை நாம் பார்க்கிறோம்.

    பொதுவெளியிலும் டிஜிட்டல் முறையிலும் பெண்களின் கண்ணியம் மீறப்படுவதை நம் நாடு வேடிக்கை பார்க்க முடியாது.

    மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இதை எடுத்துரைக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.
    • இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவேகம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இவ்விரு நகரங்களுக்கு இடையேயான 508 கி.மீ. தூரத்திற்கு 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி.

    இந்நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    புல்லட் ரெயில் திட்டம் குறித்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை 2027 ஆக.15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும். புல்லட் ரெயிலின் முதல் பிரிவு சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி - சூரத், வாபி - அகமதாபாத், தானே - அகமதாபாத், மும்பை - அகமதாபாத் வரை விரிவாக்கம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

    • சென்னை மற்றும் சூரத் இடையிலான பயண நேரம் சுமார் 45% குறையும்
    • 5.6 கோடிக்கும் அதிகமான மனித வேலைநாட்களை உருவாக்கும்

    மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது. 

    மகாராஷ்டிராவின் நாசிக் - சோலாப்பூர்  இடையேயான மிகப்பெரிய ஆறு வழிச்சாலை மற்றும் ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை-326 விரிவாக்கம் என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 374 கி.மீ நீளம் கொண்ட 6 வழி பசுமைவழி விரைவுச்சாலைக்கு ரூ. 19,142 கோடியும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு ரூ.1,526 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆறுவழிச்சாலை மும்பை - சென்னை மற்றும் சூரத் - சென்னை பொருளாதார வழித்தடங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தப் பாதையில் 27 பெரிய பாலங்கள், 164 சிறிய பாலங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் சூரத் இடையிலான பயண நேரம் சுமார் 45% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாசிக், அஹில்யாநகர் , தாராசிவ் மற்றும் சோலாப்பூர் மாவட்டங்கள் வழியாக செல்லும்.

    ரூ.1,526 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இரண்டாவது திட்டம், கனிம வளம் நிறைந்த அதேசமயம் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அலுமினிய உற்பத்தி போன்ற தொழில்களுக்கு ஆதரவளிப்பதுடன், சந்தை வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள காபி சாகுபடி போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கும் உறுதுணையாக அமையும் என கூறப்பட்டுள்ளது. 

    இதில் ஒடிசாவின் மோகனாவிலிருந்து கோராபுட் வரையிலான 206 கி.மீ தொலைவு கொண்ட நெடுஞ்சாலை பலப்படுத்தப்பட்டு இரு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 5.6 கோடிக்கும் அதிகமான மனித வேலைநாட்களை உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

    ×