என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artificial Intelligence"

    கண்ணியமான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்.

    ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கண்ணியமான, முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்.

    மக்கள் மனிதர்களை போல் செயல்படாவிட்டால் அவர்களுக்கு மன்னிக்க முடியாத கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்.

    முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய சக்தியான ஏஐ-ஐ தவறாக பயன்படுத்தி பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சியை காட்டுகிறது" என்றார்.

    • செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்ற விவாதம் அதிகரித்துள்ளது.
    • பலரும் ஏஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை கூறி வருகின்றனர்.

    செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.

    அண்மையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நல்லதா கெட்டதா என்ற விவாதம் அதிகரித்துள்ளது. பலரும் ஏஐ தொழில்நுட்பத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உலக வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது என்று உலக புகழ்பெற்ற Rich Dad Poor Dad புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார்

    இதுகுறித்து ராபர்ட் கியோசாகி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உலக வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது, இதற்கு செயற்கை நுண்ணறிவே முக்கிய காரணம். லட்சக்கணக்கான மக்கள் இந்த சரிவால் தங்கள் சேமிப்பு அனைத்தையும் இழக்க நேரிடும். செல்வத்தைப் பாதுகாக்க ஒரே வழி, தங்கம், வெள்ளி, பிட்காயின்களில் முதலீடுகள் செய்வதுதான். இதிலும் வெள்ளை சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடு" என்று தெரிவித்துள்ளார்.

    • AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது.
    • AI தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது

    ரிவால்வர் ரீட்டா' பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், "இப்போ இருக்கின்ற பெரிய பிரச்சனை AI. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..

    சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று.. AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    கீர்த்தி சுரேஷ் பேசியது தொடர்பாக நடிகர் விஜய் ஆன்டனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளது. மனிதனின் உழைப்பை எளிமைப்படுத்தும் ஒரு தளமாக தான் தற்போதைய AI விளங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.

    `ரிவால்வர் ரீட்டா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார்.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், `ரிவால்வர் ரீட்டா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "AI" குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

    இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில்," இப்போ இருக்கின்ற பெரிய பிரச்சனை AI. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..

    சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று..

    AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது" என்றார்.

    • பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
    • எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான்.

    கூகுள் உடைய தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து எச்சரித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ உடைய புழக்கம் அதிகரித்து வருகிறது.

    அண்மையில் பிசிசிக்கு அவர் அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு பிழைகளை செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவை சொல்லும் அனைத்தையும் கண்ணை மூடித்தனமாகக் நம்பிவிடக் கூடாது. பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.

    இந்தத் தொழில்நுட்பத்தின் முழு பலன்களையும் மக்கள் பெற வேண்டுமானால், ஏஐ தரும் தகவல்களுடன் மற்ற நம்பகமான தகவல் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், இந்த ஏஐ முதலீட்டு குமிழி வெடித்தால் எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான். இணையதளம் அறிமுகமானபோது அதில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அதன் தாக்கம் ஆழமானது. அது போல தான் ஏஐ துறையும்" என்று தெரிவித்தார்.

    மேலும் ஏஐ அடிப்படையிலான சூப்பர் சிப்களை தாங்கள் உருவாக்கி வருவதாகவும், ஓபன் ஏஐ உடைய சாட்ஜிபிடி போட்டியை எதிர்கொள்ள ஆல்பாபெட் தனது முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

    • அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
    • ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு காரணமாக கூறப்படுகிறது.

    உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

    அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன. 

    • தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் பயன்படுத்தலாம்
    • விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.

    இதில் சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் குரோமுக்கு போட்டியாக ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி அட்லஸ் வெப் பிரவுசர் களம் இறங்கியுள்ளது.

    தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் இதை பயன்படுத்தக்கூடிய நிலையில், விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூகுள் குரோமைப் போலவே இதுவும் Chromium based பிரவுசர் என்பதால், கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூகுளுக்கு சுமார் $150 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் இதை வெளியிட்டன.

    மகரிஷி வால்மீகி வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தோன்றும் ஒரு திரைப்படத்தின் டிரைலர் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

    இந்த வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் இதை செய்தியாக வெளியிட்டன.

    இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து தனது சமூக வலைதளத்தில் அக்ஷய் குமார் ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில், "நான் மகரிஷி வால்மீகி வேடத்தில் நடித்ததாகக் காட்டப்படும் சில ஏஐ வீடியோக்களை நான் சமீபத்தில் பார்த்தேன்.

    அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என்றும், ஏஐ-யைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், சில செய்தி சேனல்கள் இதைச் சரிபார்க்காமல் செய்தி என்று எடுத்துக்கொண்டன" என்று குறிப்பிட்டுள்ளார்.

      

    • ஆளுநர் தேர்தலில் 2ஆம் பிடித்த நிலையில், மேல்சபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
    • தோல்வி விரக்தியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென பதில் கொடுத்து வருகிறது. தகவல் பெறுவதற்காகவே ஏ.ஐ. பயன்படுத்தி வந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கட்சி ஏ.ஐ.-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.

    தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.

    The Path to Rebirth என் கட்சி கடந்த ஜனவரியில் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஆவார். அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதிக்கிறது.

    2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.

    எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது. கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    • ‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ என்று அந்த ஏஐ அமைச்சருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
    • அல்பேனிய பிரதமா் எடி ராமா அறிவித்தார்.

    உலகில் முதல் முறையாக அல்பேனியா நாடு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சரை நியமித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அந்நாட்டு அமைச்சரவையில் ஊழல் தடுப்புத் துறை அமைச்சராக ஏஐ நியமிக்கப்பட்டதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா நேற்று அறிவித்தார்.

    'சூரியன்' என்று பொருள்படும் 'டியெல்லா' என்று அந்த ஏஐ அமைச்சருக்கு பெயரிடப்பட்டுள்ளது.

    டியெல்லா, 100 சதவீத ஊழல் இன்றியும் விரைவாகவும் வெளிப்படையாகவும் அரசு ஒப்பந்தங்களை கையாள உதவும் என்று பிரதமா் எடி ராமா தெரிவித்தார்.

    1990 இல் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு அல்பேனியாவில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. டியெல்லாவின் வருகை மக்களுக்கு நம்பிக்கையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஐஸ்வர்யா ராயின் பெயர், உருவம், புகைப்படங்களை யாரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்த உரிமையில்லை.

    பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது பிரபல தன்மை உரிமைகள் (Publicity & Personality Rights) காப்பதற்காக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    மனுவில், தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான, அவதூறான காட்சிகள் அனுமதியின்றி பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேதி (Aishwarya-வுக்கு சார்பாக) நீதிமன்றத்தில் வாதாடியதாவது:

    "ஐஸ்வர்யா ராயின் பெயர், உருவம், புகைப்படங்களை யாரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்த உரிமையில்லை."

    "முழுமையாக போலியாக உருவாக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன."

    "ஒருவர், என் வாடிக்கையாளர் பெயர் மற்றும் முகத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார். கூடுதலாக, இவை சிலர் தங்களது பாலியல் ஆசையைத் திருப்தி செய்ய பயன்படுத்துகின்றனர். இது மிகுந்த மோசமானது."

    இதற்கு பதிலளித்த நீதி. தேஜஸ் காரியா,

    "அனுமதியின்றி ஐஸ்வர்யா ராய் பச்சனின் படங்கள் அல்லது உருவம் பயன்படுத்தும் இணைய தளங்களுக்கும், தனிநபர்களுக்கும் தடை விதிக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.

    • முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
    • உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார்.

    செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் உச்சமாக ஓபன் ஏஐ உடைய பிரபல சாட்பாட் தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) சொன்னதை கேட்டு ஒருவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்த்தவர் ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56). இவர் முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.

    உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.

    இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.

    சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.

    "உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.

    இதன் விளைவாக எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

    தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.

    இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

    Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்.

    ×