என் மலர்
நீங்கள் தேடியது "deepseek"
- உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர்.
- பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமான ஒரு ஏஐ தொழில்நுட்ப உலகையே ஆட்டம் காண வைத்தது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).
இந்த நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில், டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க நிறுவனங்களை விட பன்மடங்கு குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டது.

டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும்.
சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும்.
ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.
மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுங்கின. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த டீப்சீக் மற்ற ஏஐ செயலிகளை விட உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசும் அளவுக்கு டீப்சீக் அசுர வளர்ச்சி கண்டது.
ஜனவரி இறுதியில், அதாவது சரியாக ஜனவரி 27(திங்கள்கிழமை), அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பூகம்பத்தை சந்தித்தன.
டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது.
என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டது.

ஜனவரி இறுதியில் பங்குச்சந்தையை அதிரவைத்த டீப்சீக், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில சவால்களைச் சந்தித்தது.
ஜனவரி 27-ல் புகழ் உச்சத்தில் இருந்தபோது, டீப்சீக் தளம் கடுமையான 'DDoS' சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.
இதனால் புதிய பயனர்கள் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சில நாட்களிலேயே மீண்டும் வலுவாகச் செயல்பாட்டுக்கு வந்தது.
அதிபர் டிரம்ப் நிர்வாகம் டீப்சீக் வளர்ச்சியை 'தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்' என்று கருதியது. இதனால், அமெரிக்க அரசு நிறுவனங்களில் டீப்சீக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், டீப்சீக் போன்ற சீன நிறுவனங்கள் அதிநவீன 'என்விடியா' சிப்களைப் பெறுவதைத் தடுக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
இதற்கிடையே கூகுள் தனது Gemini 3 மாடலையும், OpenAI தனது GPT-5.2 மாடலையும் வெளியிட்டன. இவை சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பது (Reasoning) மற்றும் கோடிங் செய்வதில் புதிய உச்சத்தை எட்டின.
அதேநேரம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் டீப்சீக் தனது அடுத்தடுத்த பதிப்புகளை (V3 சீரிஸ்) வெளியிட்டது. இவை முந்தைய மாடல்களை விட வேகமாகவும், துல்லியமாகவும் இருந்தன.

குறிப்பாக, இது கணிதம் மற்றும் கோடிங் -இல் கூகுளின் ஜெமினி 3 மற்றும் ஓபன் ஏஐ-யின் புதிய மாடல்களுக்கு நிகராகப் போட்டியிட்டது.
ஆண்டின் இறுதியில், பயனர்களுக்காக வெறும் பதில்களை மட்டும் தராமல், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது, காலண்டரில் வேலைகளைக் குறிப்பது போன்ற பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.
டீப்சீக் வெறும் ஒரு செயலியாக மட்டும் இல்லாமல், ஏஐ உலகில் நிலவி வந்த அமெரிக்க ஏகபோகத்தை உடைத்தெறிந்த ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. 100 மில்லியன் டாலர்கள் செலவழித்தால்தான் சிறந்த ஏஐ-யை உருவாக்க முடியும் என்ற பிம்பத்தை வெறும் 6 மில்லியன் டாலரில் டீப்சீக் உடைத்துக் காட்டியது.

டீப்சீக் வருகையால் தங்கள் பிரீமியம் தன்மைகளை மற்ற ஏஐ நிறுவனங்கள் குறைத்து வெகு மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏஐ தொழில்நுட்பம் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல, அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய ஒன்று என்பதை டீப்சீக் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
2025-ம் ஆண்டு என்பது ஏஐ-யின் வளர்ச்சி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும்போது அதில் 'டீப்சீக்' என்ற பெயர் புரட்சியின் வடிவமாக நிச்சயம் பதிவாகும்.
- சிறப்பாக செயல்பட்டதாக அலிபாபா தெரிவித்துள்ளது.
- தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.
சீனாவை சேர்ந்த அலிபாபா தனது ஏ.ஐ. மாடல் Qwen2.5 Max-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏ.ஐ. மாடல் தற்போது அதிக பிரபலமாக இருக்கும் டீப்சீக் ஏ.ஐ., ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் GPT-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயல்பட்டது என அலிபாபா தெரிவித்துள்ளது.
இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "Qwen 2.5-Max ஏ.ஐ. மாடல் GPT-4o, DeepSeek-V3 மற்றும் Llama-3.1-405B ஐ விட சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறியுள்ளது.
சர்வதேச ஏ.ஐ. தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், அலிபாபா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், டீப்சீக் நிறுவனத்தின் R1 ஏ.ஐ. மாடல் சிலிகான் வேலியை ஆட்டம் காண செய்ததோடு, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.
டீப்சீக்-இன் ஏ.ஐ. மாடல் அதிவேகமாக பிரபலம் அடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் அலிபாபாவின் Qwen 2.5 Max ஏ.ஐ. மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- 10 ஆயிரம் GPUs இலக்கு நிர்ணயித்த நிலையில், நாம் 18693 GPUs பட்டியலிட்டுள்ளோம். இந்த பணி சிறப்பாக அமைந்துள்ளது.
- விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட 18 செயலிகளை உருவாக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி) ஆகிய அமெரிக்க நிறுவனங்களே கோலோச்சி வருகின்றன.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் சீனா டீப்சீக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் டீப்சீக் அமெரிக்காவின் சாட்ஜிபிடி, கூகுள் ஆகியவற்றிற்கு கடும் சவாலாக விளங்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் சாட்ஜிபிடி, டீப்சீக், ஜெமினி போன்று இந்தியா தன்கென பிரத்யேக ஏ.ஐ. மாடல் உருவாக்கி வருவதாக மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி இந்தியாவின் முதல் ஏ.ஐ. மாடல் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். ஒப்புதல் கொடுத்த முதல் நான்கு மாதத்திலேயே அதற்கான கட்டமைப்பின் முதற்கட்ட பணிகளை தொடங்கப்பட்டது.
இந்தியாவின் ஏ.ஐ. திட்டத்திற்கான முதல் தூண் என கருப்பதப்படும் "Common Compute Facility" (அனைத்து நிறுவனங்களும், நிர்வாகங்களும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மாடல்) என்பதை உருவாக்கியுள்ளோம்.
"Common Compute Facility" அடிப்படையில் 10 ஆயிரம் GPUs இலக்கு நிர்ணயித்த நிலையில், நாம் 18693 GPUs பட்டியலிட்டுள்ளோம். இந்த பணி சிறப்பாக அமைந்துள்ளது.
GPUs
NVIDIA நிறுவனத்தின் H100- 12896 GPUs
NVIDIA நிறுவனத்தின் H200- 1480 GPUs
MI325 and MI325X-ன்- GPUs
விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட 18 செயலிகளை உருவாக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நான்காவது கட்டம் ஏ.ஐ.யின் பாதுகாப்பு தொடர்பானது. ஏ.ஐ. பாதுகாப்பு நிறுவனம் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது.
வளர்ந்து வரும் நிறுவனங்கள், 10 பெரும் மென்பொருள் நிறுவனங்கள் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் 8 முதல் 10 மாதங்களுக்குள் இந்த ஏ.ஐ. மாடல் தயாராகிவிடும்.
இந்தியாவின் தனித்துவமான மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த ஏ.ஐ. மாடல் உருவாகும்.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க சில தினங்களுக்கு முன் டீப்சீக் ஏ.ஐ. மாடலை வெளியிட்டது.
- அமெரிக்காவுக்கு டீப்சீக் கடும் சவாலாக இருக்கும் என கணிப்பு.
அமெரிக்காவின் சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏ.ஐ.-க்கு சவால் விடும் வகையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன் டீப்சீக் ஏ.ஐ. மாடலை வெளியிட்டது. டீப்சீக் மாடல் இலவசமாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்களது செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளது. அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை. சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாடலுக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது.
- சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சாட்ஜிபிடி ஏஐ உலகளவில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது. மற்றவற்றைக்காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதனால் உலகளவில் சாட்ஜிபிடி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ மாடல்கள் கடும் பின்னடைவை சந்தித்தது. பிரீமியம் முறையில் சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது. இதனால் ஏஐ தொழில்துறையில் சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு டீப்சீக் தலைவலியாக மாறியுள்ளது.
இதனிடையே டீப் சீக் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஓ. லியாங் வென்ஃபெங் என்று ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் அப்புகைப்படம் டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் புகைப்படம் இல்லை என்று தெரியவந்துள்ளது.
சீன கட்டுமான பொருட்கள் நிறுவனத்தின் இயக்குநர் லியாங் வென்ஃபெங் புகைப்படத்தை டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ. என தவறாக பரப்பியுள்ளனர்.
டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் பெயரும் லியாங் வென்ஃபெங் என்று இருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம். டீப் சீக் ஏஐ வெளிவரும் வரை லியாங் வென்ஃபெங் தனது ப்ரோபைலில் தன்னை பற்றிய போதுமான விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. டீப் சீக் ஏஐ வெளிவந்தவுடன் இது தொடர்பாக கடந்த வாரம் அவர் பேசியபோது தான் பலருக்கும் அவரை பற்றி தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ நாங்கள் எந்த நிறுவனத்தையும் ஒருபோதும் கேட்டதில்லை.
- சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது.
ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சில நாடுகள் அச்சம் அடைகின்றன. குறிப்பாக டீப்சீக் ஏஐ குறித்து அச்சம் கொண்டுள்ளன.
இதனால் அமெரிக்க பாராளுமன்ற ஊழியர்கள் கணினி மற்றும் செல்போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என பாராளுமன்ற அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய நிதித்துறை அமைச்சகம் சாட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவற்றால் அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி டீப்சீக் பயன்பாட்டை தடைசெய்துள்ளன.
இந்த நிலையில் டீப்சீக் செயலிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"சட்டங்களுக்கு எதிராக தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ நாங்கள் எந்த நிறுவனத்தையோ அல்லது தனி நபரையோ ஒருபோதும் கேட்டதில்லை, ஒருபோதும் கேட்க மாட்டோம்.
தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை மிகைப்படுத்தவோ அல்லது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை அரசியலாக்கவோ எடுக்கும் நடவடிக்கைகளை சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது. சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்" என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
- டவுன்லோட் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக், "உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது," என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது "தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்" என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.
டவுன்லோட் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.






