என் மலர்
நீங்கள் தேடியது "ஏஐ"
- டெல்லி போலீசாருக்கு 18 மணி நேர டிரான்சிட் ரிமாண்ட் வழங்கப்பட்டது.
- ல்லி போலீசாரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என இமாச்சல பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டில், இளைஞர் காங்கிரசார் சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் ஏற்கனவே சிலரை கைது செய்தனர்.
இந்நிலையில் சௌரப், சித்தார்த், அர்பாஸ் ஆகிய மூன்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்ரு பகுதியில் வைத்து நேற்று டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ஒரு மாநில போலீசார் மற்றொரு மாநிலத்திற்குச் சென்று ஒருவரைக் கைது செய்யும்போது, உள்ளூர் போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், டெல்லி போலீசார் இந்த விதியைப் பின்பற்றவில்லை.
எனவே சிவில் உடையில் வந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மூவரை கைது செய்து, அவர்கள் தங்கிருந்த விடுதியின் சிசிடிவி உபகாரணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை எடுத்துச் சென்ற டெல்லி போலீசார் மீது சிம்லா போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர்.
நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில், சிம்லா கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் கான்ஷ் கபில் இல்லத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
டெல்லி போலீசாருக்கு 18 மணி நேர டிரான்சிட் ரிமாண்ட் வழங்கப்பட்டது. இதன் மூலம் கைதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்ற அனுமதி கிடைத்த பிறகும், இன்று அதிகாலை 4 மணியளவில் சிம்லா அருகே உள்ள ஷோகி எல்லையில் டெல்லி போலீஸ் வாகனங்களை இமாச்சலப் போலீசார் வழிமறித்தனர்.
சிசிடிவி ஆதாரங்கள் உள்ள வாகனத்தின் சாவியை ஒப்படைக்கும்படி சிம்லா போலீசார் கேட்டனர். ஆனால், டெல்லி போலீசார் அதனை மறுத்துவிட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே நாடு ரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.
டெல்லி போலீசார் தங்களிடம் உள்ள ஆதாரங்களின் பட்டியலை முறைப்படி காட்டிய பிறகு, சிம்லா போலீசார் தடையை நீக்கினர். இதையடுத்து டெல்லி குழுவினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, டெல்லி போலீசாரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், மாநில அரசு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குப் புகலிடம் அளித்துப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் உதய் பானு சிப் கைது
டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.
பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் டுபட்ட இளைஞர் காங்கிரஸார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மனு அளித்துள்ளது.
- இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
- போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணி காட்சிகளுக்கு நன்றி.
டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.
பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது நாட்டின் இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நமோ பாரத் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றியபோது இந்த சம்பவத்தை கண்டித்தார்.
அவர் கூறியதாவது, "டெல்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டை காங்கிரஸ் தனது தரம் தாழ்ந்த மற்றும் நிர்வாண அரசியலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ் கொள்கை ரீதியான திவாலானது உறுதி ஆகி உள்ளது.
வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா கடுமையாக உழைத்து வரும் வேளையில், இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
இது தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரான போராட்டம் அல்ல, மாறாக நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது
காங்கிரஸ் தலைவர்களே, உங்கள் நிர்வாணத்தை நாடு ஏற்கனவே நன்கு அறியும். இப்போது மீண்டும் சட்டையைக் கழற்றி அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸின் இத்தகைய அநாகரீகமான போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவற்றுக்கு நன்றி என்றும் மோடி குறிப்பிட்டார்.
- பிரேசில் அதிபர் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
- டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபர் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.
புதுடெல்லி:
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பிரேசில் அதிபரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் பாரம்பரிய வரவேற்பை லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஏற்றுக்கொண்டார்.
- டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார்.
- செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார்.
இந்தியா சார்பில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தலைவர்கள் நேரில் வந்து இதில் கலந்து கொண்டனர். இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவும் பங்கேற்றார்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார். இதுபோல இந்திய அரசின் பல்வேறு அணுகுமுறைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், டிட்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டு இருந்தார். "எங்கள் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார, வர்த்தகம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். சமீபத்திய டிட்வா சூறாவளியின்போது இந்தியாவின் விதிவிலக்கான ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.
இதுபோல பிரதமர் மோடியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவர் "எரிசக்தி, இணைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாசாரம், நீலப்பொருளாதாரம் மற்றும் பலவற்றில் ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
டிட்வா புயல் பாதிப்புக்காக இலங்கைக்கு இந்தியா முதல் ஆளாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மறுசீரமைப்பு தொகுப்புக்காக உறுதி செய்தது. இதில் சாலைகள், ரெயில்வே மற்றும் பாலங்கள் மறுசீரமைப்பு, வீடுகள் மறுகட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளுக்கு ஆதரவாக இருந்தது.
- ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்து வருகிறது.
- அங்கு நுழைந்த இளைஞர் காங்கிரசார் மேலாடையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார் தங்கள் மேலாடையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், காங்கிரசின் இந்தப் போராட்டத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா கூறுகையில், அரசியல் எதிர்ப்பு என்பது ஜன்நாயக உரிமை. அதற்காக இப்படி செய்வது தேசிய அவமானம்.
காங்கிரஸ் இதற்கு வெட்கப்பட வேண்டும். மதிப்புமிக்க ஒரு மாநாட்டை இந்தியா நடத்தும் சமயத்தில், கண்ணியத்திற்கு எதிரான ஒரு
செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது, நம் நாட்டின் உலகளாவிய பிம்பத்தை அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
- பாரத் மண்டப பகுதிக்குள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இளைஞர் காங்கிரசார் புகுந்தனர்.
- மேலாடையை கழற்றி அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி ஏஐ மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த டெல்லி காவல்துறை, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது.
- இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து, பின்லாந்து, குரோசியா, எஸ்டோனியா, சொ்பியா, சுலோவாகியா, மொரீஷியஸ், பூடான், கஜகஸ்தான், கிரீஸ், சீஷெல்ஸ், பொலிவியா, கயானா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ஆல்பா பெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து அதிபர் கெய் பார்மலின் மாநாட்டில் பேசுகையில், அடுத்த ஆண்டு ஏ.ஐ. உச்சி மாநாடு ஜெனீவாவில் நடைபெறும் என அறிவித்தார்.
- பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
- நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:-
பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அற்புதமான நாட்டில், இந்த அற்புதமான நகரத்திற்கு எங்களை வரவேற்றதற்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு தெரு வியாபாரி வங்கிக்கணக்கை திறக்க முடியவில்லை. முகவரி இல்லை, ஆவணங்கள் இல்லை. இன்று அதே விற்பனையாளர் தனது தொலைபேசியில் பணம் செலுத்துகிறார்.
உலகில் வேறு எந்த நாடும் உருவாக்காத ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது. 140 கோடி மக்களுக்கான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது. தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் ஒரு கட்டண முறை செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியாது என்று உலகம் இந்தியாவிடம் கூறியது. ஆனால் அது தவறு என்று இந்தியா நிரூபித்துள்ளது.
விரைவாக புதுமைகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு நமது மனித குலத்திற்கு உதவும் என்று நாங்கள் கூறி வருகிறோம். நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.
செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய துறையாக மாறியுள்ளது. இந்த பெரிய தொழில்நுட்பம் இன்னும் பெரியதாகிவிட்டது. செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் புதுமை மற்றும் பொறுப்புணர்வு, தொழில் நுட்பத்தை மனிதநேயத்துடன் இணைப்பவர்களால் கட்டமைக்கப்படும். இந்தியாவும் பிரான்சும் இந்த எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைக்க உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நான் ஒவ்வொரு முறை வருகை தரும் போதும், மாற்றத்தின் வேகத்தால் நான் வியப்படைகிறேன்.
- விசாகப்பட்டினம் நகரத்தில் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் ஏ.ஐ மையத்தை நிறுவ உள்ளது.
ஏ.ஐ உச்சி மாநாட்டில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பேசியதாவது:-
இந்தியாவுக்கு மீண்டும் வருவது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் ஒவ்வொரு முறை வருகை தரும் போதும், மாற்றத்தின் வேகத்தால் நான் வியப்படைகிறேன். நான் ஒரு மாணவனாக இருந்தபோது சென்னையில் இருந்து ஐ.ஐ.டி கரக்பூர் வரை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி சென்றேன். அந்த ரெயில் விசாகப்பட்டினம் வழியாக செல்லும். இப்போது விசாகப்பட்டினம் நகரத்தில் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் ஏ.ஐ மையத்தை நிறுவ உள்ளது.
இந்த மையம் ஜிகாவாட் அளவிலான கணினி மற்றும் ஒரு புதிய சர்வதேச நீர்மூழ்கி கேபிள் நுழைவாயிலைக் கொண்டிருக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் வணிகங்களுக்கும் வேலைவாய்ப்புகளையும் அதிநவீன ஏ.ஐ-யையும் கொண்டு வரும். ஏ.ஐ என்பது மறுக்க முடியாத வகையில் பணியாளர்களை மறுவடிவமைக்கும். முற்றிலும் புதிய தொழில்களை உருவாக்கும் என்றார்.
- என்.பி.சி.ஐ. நிறுவனம் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக என்விடியாவுடன் கைகோர்த்துள்ளது.
- செயற்கை நுண்ணறிவு வசதிகளை புகுத்த என்விடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் தேசிய நிறுவனமாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ.) உள்ளது.
யு.பி.ஐ. சேவையை அறிமுகப்படுத்தி நாட்டின் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பழக்கப்படுத்திய என்.பி.சி.ஐ. நிறுவனம் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக என்விடியாவுடன் கைகோர்த்துள்ளது.
அதன்படி யு.பி.ஐ. செயலியை மேலும் மேம்படுத்தி செயற்கை நுண்ணறிவு வசதிகளை புகுத்த என்விடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20-ந்தேதி முடிவடைகிறது.
70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் ஏஐ தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்.20-ந்தேதியுடன் நிறைவடைய இருந்த ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பிற உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை. பிப்.20, 21 ஆகிய நாட்கள் ஏஐ உச்சி மாநாட்டிற்கு பொதுமக்கள் தாராளமாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






