என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி ஏஐ மாநாட்டில் மேலாடையின்றி காங்கிரசார் போராட்டம் - பிரதமருக்கு எதிராக முழக்கம்!
    X

    டெல்லி ஏஐ மாநாட்டில் மேலாடையின்றி காங்கிரசார் போராட்டம் - பிரதமருக்கு எதிராக முழக்கம்!

    • பாரத் மண்டப பகுதிக்குள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இளைஞர் காங்கிரசார் புகுந்தனர்.
    • மேலாடையை கழற்றி அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    டெல்லி ஏஐ மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த டெல்லி காவல்துறை, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

    அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×