என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சி மாநாடு"

    • டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார்.
    • செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார்.

    இந்தியா சார்பில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தலைவர்கள் நேரில் வந்து இதில் கலந்து கொண்டனர். இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவும் பங்கேற்றார்.

    இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார். இதுபோல இந்திய அரசின் பல்வேறு அணுகுமுறைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், டிட்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

    இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டு இருந்தார். "எங்கள் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார, வர்த்தகம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். சமீபத்திய டிட்வா சூறாவளியின்போது இந்தியாவின் விதிவிலக்கான ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

    இதுபோல பிரதமர் மோடியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவர் "எரிசக்தி, இணைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாசாரம், நீலப்பொருளாதாரம் மற்றும் பலவற்றில் ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

    டிட்வா புயல் பாதிப்புக்காக இலங்கைக்கு இந்தியா முதல் ஆளாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மறுசீரமைப்பு தொகுப்புக்காக உறுதி செய்தது. இதில் சாலைகள், ரெயில்வே மற்றும் பாலங்கள் மறுசீரமைப்பு, வீடுகள் மறுகட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளுக்கு ஆதரவாக இருந்தது.

    • பாரத் மண்டப பகுதிக்குள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இளைஞர் காங்கிரசார் புகுந்தனர்.
    • மேலாடையை கழற்றி அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    டெல்லி ஏஐ மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த டெல்லி காவல்துறை, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

    அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    • நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.

    டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:-

    பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அற்புதமான நாட்டில், இந்த அற்புதமான நகரத்திற்கு எங்களை வரவேற்றதற்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு தெரு வியாபாரி வங்கிக்கணக்கை திறக்க முடியவில்லை. முகவரி இல்லை, ஆவணங்கள் இல்லை. இன்று அதே விற்பனையாளர் தனது தொலைபேசியில் பணம் செலுத்துகிறார்.

    உலகில் வேறு எந்த நாடும் உருவாக்காத ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது. 140 கோடி மக்களுக்கான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது. தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் ஒரு கட்டண முறை செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியாது என்று உலகம் இந்தியாவிடம் கூறியது. ஆனால் அது தவறு என்று இந்தியா நிரூபித்துள்ளது.

    விரைவாக புதுமைகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு நமது மனித குலத்திற்கு உதவும் என்று நாங்கள் கூறி வருகிறோம். நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.

    செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய துறையாக மாறியுள்ளது. இந்த பெரிய தொழில்நுட்பம் இன்னும் பெரியதாகிவிட்டது. செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் புதுமை மற்றும் பொறுப்புணர்வு, தொழில் நுட்பத்தை மனிதநேயத்துடன் இணைப்பவர்களால் கட்டமைக்கப்படும். இந்தியாவும் பிரான்சும் இந்த எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைக்க உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது
    • உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 6 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 21-ந்தேதி முடிவடைகிறது.

    70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள Google CEO சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.

    தொழில்நுட்பம், AI, புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை.

    டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20-ந்தேதி முடிவடைகிறது.

    70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் ஏஐ தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பிப்.20-ந்தேதியுடன் நிறைவடைய இருந்த ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பிற உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை. பிப்.20, 21 ஆகிய நாட்கள் ஏஐ உச்சி மாநாட்டிற்கு பொதுமக்கள் தாராளமாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது.

    டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.

    5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர்.

    பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர்.

    லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதால் கண்காட்சி நடத்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 24 மணி நேரத்தில் அவை மீட்கப்பட்டன.

    இதுபோன்ற மோசமான ஏற்பாட்டிற்காக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மக்களின் வருகை அதிகமாக இருந்தது. புகார்களை உடனுக்குடன் தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் கருத்துகளைக் கொண்டு எஞ்சிய நாட்களில் ஏற்பாடுகள் சீர் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இந்தக் குளறுபடிகளை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இது அரசின் தவறான நிர்வாகத்தைக் காட்டுகிறது. போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது" என்று தெரிவித்தார்.   

    • தமிழ்நாட்டில் ஏராளமாக சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக பல்வேறு சுற்றுலா நிறுவனங்களுடன் 217 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவரது முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் ஏராளமாக சுற்றுலா தலங்கள் உள்ளன.

    * நமது பாரம்பரியத்தை உலக அளவில் கொண்டு செல்லும் திறன் சுற்றுலா துறைக்கே உண்டு.

    * கலைகள், கலைஞர்கள், பண்பாட்டை கொண்டு செல்லும் வலிமை சுற்றுலாத்துறைக்கு உள்ளது.

    * தமிழின் தொன்மையும், தமிழர்களின் நாகரிகமும் உலகம் முழுமைக்கும் தெரியும்.

    * கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

    * சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு உள்ளது.

    * பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது.
    • அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா, சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடை பிடித்தது.

    இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    மேலும் சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். இந்தியா- அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீன அதிபர் ஜின் பிங்குடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு தென் கொரியாவின் ஜியாங்சு நகரில், அக்டோபர் இறுதியில் தொடங்கி, நவம்பர் தொடக் கம் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் உயர்மட்ட ஆலோசகர்களும் செல்ல உள்ளனர்.

    மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

    அதில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப், ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு குறித்து தீவிர விவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் இன்னும் உறுதியான திட்டங்கள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, "டிரம்பின் தென்கொரிய பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.

    • பல்வேறு காரணங்களால் சில தலைவர்கள் வரவில்லை
    • சில நாட்டு தலைவர்களின் வருகை உறுதியாகவில்லை

    உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா உட்பட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க அனைத்து நாடுகளின் தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில அதிபர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரடார் ஆகியோர் பல்வேறு காரணங்களால் வர மாட்டார்கள் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃப்யுமியொ கிஷிடா, ஜெர்மனி அதிபர் ஓலஃப் ஷோல்ட்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான், சவுதி அரேபியா இளவரசர் மொஹம்மத் பின் சல்மான், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா, தென் கொரியா அதிபர் யூன் சுக்-இயோல், ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் டாயிப் எர்டோகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

    இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உறுப்பினர்கள் பங்கேற்கிறார்களா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், நைஜீரிய அதிபர் போலா டினுபு மற்றும் மவுரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் வந்திறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    • இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.
    • சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று [ஜூன் 14] முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் வைத்து நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இத்தாலி சென்றுள்ளார்.

    இத்தாலியில் குழுமத்தொடங்கியுள்ள உலகத் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி இந்திய முறையில் நமஸ்தே சொல்லி வரவேற்கும் வீடியோ வைரலானது.

    இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.

    ஜி7 நாடுகளின் சக தலைவர்களான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரோன், ஆகியோருடன் நடந்து செல்லும்போது அவர்களை விட்டு தனியாக பிரிந்து கால் போன போக்கில் ஜோ பைடன் உலாவினார். பின்னர் அவரை இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் அனைவரும் இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தார்.

    முன்னதாக தன்னை வரவேற்ற மெலோனிக்கு பைடன் விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோ வைரலாக நிலையில் தற்போது கால் போன போக்கில் பைடன் உலாவும் வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அமேரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் விழித்துக்கொண்டே தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.

    ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தனது மகனை மன்னிக்க மாட்டேன் எனவும், சட்டப்படி என்ன நடந்தாலும் அதை ஏற்கிறேன் எனவும் பைடன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்குகொண்டுவர ஜோ பைடன் அழுத்தம் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. 

    ×