என் மலர்
நீங்கள் தேடியது "பிரான்ஸ் அதிபர்"
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார்.
- பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படத்துடன் அவரின் புகைப்படத்தை ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் என்று கூறப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர் அவரது பள்ளி ஆசிரியராக இருந்தார்.
மேக்ரான் தற்போது பிரான்சின் அதிபராக இரண்டாவது மற்றும் இறுதி பதவிக்காலத்தில் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே மேக்ரான்ஒரு வினோதமான பிரச்னையை எதிர்கொண்டுள்ளார்.
அவர் தனது மனைவி ஒரு ஆண் அல்ல பெண் தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேக்ரான் உடைய மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் பல காலமாக வதந்திகள் பரவி வருகின்றன.
உண்மையில் இந்த சர்ச்சை 2017 இல் பிரான்சில் தொடங்கியது. நடாஷா ரே என்பர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பிரிஜிட் மேக்ரோனின் உண்மையான பெயர் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்று கூறினார்.
மேலும் பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படம் என்று நம்பப்படும் ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் எனவும் வீடியோவில் நடாஷா கூறியிருந்தார்.

இதுதொடர்பான அவதூறு வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நாடாஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே அமெரிக்க தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் பிரிஜிட் மேக்ரோன் ஒரு ஆண் என்று பேசி வந்தார். அவருக்கு எதிராக மேக்ரான் தம்பதியினர் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கின் ஒரு பகுதியாக, பிரிஜிட் மேக்ரான் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மேக்ரானின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார்.
- நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் பிரான்ஸ் அதிபருக்கு தெரியாது
- இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு டிரம்ப் திரும்பி சென்றார்" என்று தெரிவித்தார்.
ஆனால் மேக்ரானின் இந்த கூற்று தவறு என்று டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், "விளம்பரம் தேடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்கவிற்கு திரும்பிச் சென்றதாகத் தவறாகக் கூறினார். நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது, ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே செய்தாலும் இல்லாவிட்டாலும், இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்" என்று தெரிவித்தார்.
- ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவிற்கு அதிபர் மேக்ரான் பாராட்டு
- இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாக பேட்டி.
லுசைல்:
கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார். தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர் ஆதரவு தெரிவித்தார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இறுதி ஆட்டத்தில் தோற்றதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம், மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக எம்பாப்பே உள்பட தோல்வியால் துவண்டிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவின் ஆட்டம் அசாதாரணமானது என்றும், 24 வயதான அவர், ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் மேக்ரான் தெரிவித்தார். இந்நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். உலக கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸ் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது.
- அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது வாக்கை பதிவு செய்தார்.
பாரீஸ்:
பிரான்சில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என அதிபர் மேக்ரான் தெரிவித்தார். அதன்படி, பிரான்ஸ் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது.
அங்கு 4.90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தமுள்ள 577 இடங்களுக்கான இந்த தேர்தல் இரு சுற்றுகளாக நடைபெற உள்ளது.
வலதுசாரியான மரைன் லீ பென்னின் தேசிய பேரணி கட்சி இந்த முறை மக்களின் பெரும் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது.
இந்தத் தேர்தலில் தேசிய பேரணி கட்சி ஆதிக்கம் செலுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தேசிய பேரணி கட்சி முன்வைத்த வாக்குறுதிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது வாக்கை இன்று பதிவு செய்தார்.
ஞாயிறன்று மாலை முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. அதன்பின்னரே, தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
தங்கள் கட்சி 289 இடங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றால் மட்டுமே பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாக தேசிய பேரணி கட்சி தெரிவித்துள்ளது.
- ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்.
- இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரட்டன் டாடாவின் மறைவு குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. இந்தியா மற்றும் பிரான்சில், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் தொழில்கள் மேம்பட்டன.
அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் ரத்தன் டாடா நினைவுகூறப்படுவார்.
அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.






