search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliment election"

    • 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இந்த ஊழல் நடந்தபோது, மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குனராக இருந்தார்

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார்.
    • இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளங்கள் முதலில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், கௌதம புத்த நகர் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் ஷர்மாவுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் நேற்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது, பொது மக்களிடையே பேசிய அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வது, சமூகத்தை பிளவுப்படுத்த நினைப்பது போன்ற செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டதே இல்லை என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "சகோதர சகோதரிகளே பிரதமரை எனக்கு இப்போது தான் தெரியும் என்றே இல்லை. நீண்ட காலம் அவருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை. நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்ததே இல்லை," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இன்றும் அவர் மீது எனக்கு மதிப்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2006 டிசம்பர் 9 ஆம் தேதி பேசிய டாக்டர் மன்மோகன் சிங், யாருக்கேனும் நாட்டின் சொத்துக்கள் மீது உரிமை இருப்பின், அது நிச்சயம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்காகவே இருக்க வேண்டும் குறிப்பாக இதை கூறும் போது சிறுபான்மை சமூகமாக அவர் முஸ்லீம்களையே குறிப்பிட்டார்."

    "நாட்டின் வளங்கள் மற்றும் சொத்துக்கள் மீது அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று அவர் தெரிவித்தார், நாங்கள் அப்படி கூறவே இல்லை. இப்போது பிரதமர் இதை சொன்னதும், அதனை சர்ச்சையாக்க முயற்சிக்கின்றனர்," என்று தெரிவித்தார். 

    • மெகபூபா முப்தி கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுகிறது.
    • பா.ஜ.க.வின் 'சி' டீமாக மெகபூபா கட்சி இணைந்துள்ளது என்றார் உமர் அப்துல்லா.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாளை மறுதினம் நடைபெற உள்ள 2வது கட்ட தேர்தலில் மேலும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் அங்கு இணைந்து போட்டியிடுகின்றன. இதில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் முஷ்தாக் பஹாரி பிரசாரத்தில் பேசுகையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு பஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பா.ஜ.க வேட்பாளரை விடுத்து அவர் வேறு கட்சிக்கு ஆதரவளித்தது விவாதப் பொருளானது.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கே பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும். நாடு முழுவதும் விஷத்தைப் பரப்பும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், ஜம்மு காஷ்மீரின் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும்.

    மற்ற கட்சிகள் எல்லாம் 'ஏ' டீம், 'பி' டீம் என ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்துள்ளன. அந்த வகையில் தற்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வில் 'சி' டீமாக இணைந்துள்ளது என தெரிவித்தார்.

    • மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்.
    • அங்கு 72 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில் மணிப்பூரில் 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இன்னர் மணிப்பூரில் 68 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். வாக்கு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன.

    இதையடுத்து, 47 தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் 22-ம் தேதி (நாளை) மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 4 ஆம் தேதி வரை அமலில் உள்ளன.

    இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருப்பதால் மாநில அரசின் செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

    இதற்காக கோழிக்கறி வறுவல், கோழிக்கறி கிரேவி மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகள் தடபுடலாக சமைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த துணை ராணுவ வீரர்களுக்கு போலீசார் அசைவ விருந்து வைத்த சம்பவம் பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. 

    • கள்ளக்குறிச்சியில் 75.64 சதவீதம், தருமபுரியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
    • பொள்ளாச்சியில் 72.22 சதவீதம், நாகப்பட்டினத்தில் 72.21 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    சென்னை:

    தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.

    காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஆரணி- 73.77

    கரூர் - 74.05

    பெரம்பலூர்- 74.46

    சேலம்- 74.55

    சிதம்பரம்- 74.87

    விழுப்புரம்- 73.49

    ஈரோடு- 71.42

    அரக்கோணம்- 73.92

    திருவண்ணாமலை- 73.35

    விருதுநகர்- 72.99

    திண்டுக்கல்- 71.37

    கிருஷ்ணகிரி- 72.96

    வேலூர்- 73.04

    பொள்ளாச்சி- 72.22

    நாகப்பட்டினம்- 72.21

    தேனி- 71.74

    நீலகிரி- 71.07

    கடலூர்- 72.40

    தஞ்சாவூர்- 69.82

    மயிலாடுதுறை- 71.45

    சிவகங்கை- 71.05

    தென்காசி- 71.06

    ராமநாதபுரம்- 71.05

    கன்னியாகுமரி- 70.15

    திருப்பூர்- 72.02

    திருச்சி- 71.20

    தூத்துக்குடி- 70.93

    கோவை- 71.17

    காஞ்சிபுரம்- 72.99

    திருவள்ளூர்- 71.87

    திருநெல்வேலி- 70.46

    மதுரை- 68.98

    ஸ்ரீபெரும்புதூர்- 69.79

    சென்னை வடக்கு- 69.26

    சென்னை தெற்கு- 67.82

    சென்னை மத்தி- 67.35

    • பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது
    • பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    எழும்பூரில் இன்று இரவு 10.05க்கு கிளம்பி காலை 6.30க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கமாக நாளை மாலை 6.30க்கு கிளம்பி நள்ளிரவு 2.45க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதற்கு முன்னதாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது..

    சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

    • தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, காலை 8-11 மணி வரையும், மாலை 5-8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.

    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
    • பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது

    இந்நிலையில், பாராமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி சுனேத்ர பவார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்போது முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
    • அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை மறுதினம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். வாக்கு எண்ணும் நாள் வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×