ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: மீண்டும் வலியுறுத்திய தேர்தல் ஆணையம்

பாராளுமன்ற தேர்தல், அதன்பின் நடந்த பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளது.ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: மீண்டும் வலியுறுத்திய தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி, தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல், அதன்பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி ஆவணங்களையும் வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. தனது குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

ஆனால், குற்றச்சாட்டுகளை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய ராகுல் மறுத்துவிட்டார். இதையடுத்து பா.ஜ.க. உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com