என் மலர்
நீங்கள் தேடியது "ECI"
- மேகாலயாவில் மொத்தம் 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் தகுதியுடைய வாக்காளர்களை சென்றடைவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தகுதியுடைய ஒவ்வொரு வாக்காளரும் எளிதாக வாக்களிக்க முடியும் என்பதை உறுதிசெய்ய இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட மகத்தான முயற்சிக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.
இந்த அணியில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். இது வாக்காளர்களை சாதனை எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- புலம் பெயர்ந்த வாக்காளர்கள், வாக்களிக்க சொந்த மாநிலத்துக்கு செல்ல தேவையில்லை.
- தற்போது இருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிக்க திட்டம் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதை அடுத்து வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
அதன்படி பணி மற்றும் இதர காரணங்களுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வரும் தேர்தலில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இந்த நடைமுறை மூலம் புலம் பெயர்ந்த வாக்காளர்கள், வாக்குப்பதிவுக்காக தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் இருந்தே தொலைதூர வாக்களிப்பு மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
இதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்க, வரும் ஜனவரி 16-ந் தேதி ஆலோசனை கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் கலந்து கொண்டு எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளது.
- இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.
- தேர்தல் ஆணையத்தன் செயல்பாட்டிற்கு ஜெர்மனி மந்திரி பாராட்டு.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரை சந்தித்த அன்னாலெனா தலைமையிலான ஜெர்மன் பிரதிநிதிகள் குழு, இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தது.
பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் எளிதில் வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்படும் விரிவான பயிற்சி முறை உள்ளிட்டவை குறித்து ராஜீவ் குமார் அப்போது விளக்கம் அளித்தார். தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பங்கேற்பையும் இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலியான சமூக ஊடக தாக்கம், பெரும்பாலான தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு ஒரு சவாலாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக செயல்பாட்டை ஜெர்மனி வெளியுறவு மந்திரி பாராட்டினார். டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
- மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
- தேர்தலில் நேர்மையை உறுதி செய்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
- 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. டெல்லியில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்குகிறார்.
உலகெங்கிலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள், யுஎன்டிபி போன்ற அமைப்புகளுக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்மீனியா, மொரிஷியஸ், நேபாளம், சிலி, கிரீஸ், பிலிப்பைன்ஸ் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டெல்லியில் உள்ள பல நாடுகளின் தூதரகங்களை சேர்ந்த பிரநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் முதல் இரண்டு அமர்வுகள் தேர்தல் நேர்மையை உறுதி செய்வது மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
- அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
- தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. எனவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்நிலையில், இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
இந்த 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்தது. தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் 87 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

