என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக் சர்மா"

    • ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்றார்.
    • நட்சத்திர தொடக்க வீரராக உருவெடுத்து வருகிறார்.

    இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களம் இறங்கி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி இரண்டு தொடர்களிலும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

    அபிஷேக் சர்மாவுக்கு, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் ஆலோசனை வழங்கினார். பேட்டிங் குறித்து நுட்பங்களை வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் சிறப்பாக விளையாடும் அபிஷேக் சர்மா குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

    அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் "நீங்கள் அபிஷேக் சர்மாவிடம் இருந்து எதை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவரிடம் இருந்து யாரும் பேட்டை மட்டும் வாங்க முடியாது. அதற்காக அவர் சண்டையிடுவார். அழக்கூட செய்வார். இருந்தாலும் பேட்டை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார். 10 பேட் வைத்திருந்தாலும், இரண்டு பேட் மட்டுமே வைத்துள்ளேன் என்பார். என்னுடைய எல்லா பேட்டையும் எடுத்துக் கொண்டார். ஆனால், அவருடைய ஒரு சொந்த பேட்டை ஒருபோதும் கொடுக்கமாட்டார்" என்றார்.

    • அபிஷேக் சர்மா 528 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
    • சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.

    இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் அபிஷேக் சர்மா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய இலக்கு. பவர்பிளேயை பயன்படுத்தி அதிரடியாக ரன்குவித்து வருகிறார்.

    இன்றைய போட்டியில் 7 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 29 போட்டிகளில் 528 பந்துகளை சந்தித்து ஆயிரம் ரன்களை தொட்டார். இதனைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சூர்யகுமார் யாதவ் சாதனையை முறியடித்துள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். பில் சால்ட் 599 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் 604 பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.

    • அபிஷேக் சர்மா இரண்டு முறை அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
    • சுப்மன் கில் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் 4ஆவது பந்தில் அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லிடம் எளிதாக கேட்ச் கொடுத்தார். அந்த கேட்சை மேக்ஸ்வெல் பிடிக்க தவறினார். இதனால் அபிஷேக் சர்மா 5 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பித்தார்.

    3ஆவது ஓவரில் கில் தொடர்ந்து நான்கு பவுண்டரி விளாசினார். 4ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா மீண்டும் அவுட்டாவதில் இருந்து தப்பினார். எல்லிஸ் பந்தில் துவார்சுயிஸ் கேட்ச் மிஸ் செய்தார். இதனால் 11 ரன்னில் மீண்டும் ஒரு வாய்பு கிடைத்தது.

    இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

    அபிஷேக் சர்மா 13 பந்தில் 23 ரன்களும், சுப்மன் கில் 16 பந்தில் 29 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    • ஆசிய கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் அபிஷேக் 314 ரன்கள் குவித்தார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர் நாயகி விருதை மந்தனா வென்றார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்த விருதை தட்டி சென்றுள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 314 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வகையில் தொடர் நாயகன் விருதை இவர் தட்டி சென்றார்.

     

    மகளிருக்கான செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர் நாயகி விருதை மந்தனா வென்றார். 3 போட்டிகளில் விளையாடிய மந்தனா 1 சதத்துடன் 308 ரன்கள் குவித்தார்.

    • ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    • ஆசிய தொடரில் 314 ரன்கள் குவித்து அசத்தினார்.

    ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் நாயகனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரரான அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

    ஆசிய தொடரில் அபிஷேக் சர்மா 45 சராசரியுடன் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை அவர் தக்கவைத்து கொண்டார்.

    சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிராக 61 ரன்கள் எடுத்த போது அவர் 931 புள்ளிகளை பெற்றார். அதன்பிறகு நடந்த இறுதிப்போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவர் 926 புள்ளிகளை பெற்றார். இருப்பினும் அவர் முதல் இடத்தில்தான் தொடர்கிறார்.

    இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை (931) பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் அபிஷேக் சர்மா அதனை முறியடித்துள்ளார்.

    • அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரை சதம் அடித்தார்.
    • ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன் விளாசினார்.

    அடுத்து ஆடிய இலங்கை அணி பதும் நிசங்கா அதிரடி சதத்தால் 202 ரன்கள் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரைசதம் அடித்த 6வது இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா.

    இதற்கு முன்னதாக, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஹாட்ரிக் அரை சதமடித்து அசத்தி உள்ளனர்.

    • அபிஷேக் சர்மா 31 பந்தில் 61 ரன்கள் விளாசினார்
    • சுப்மன் கில் 4 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    சுப்மன் கில் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஞ்சு சாம்சன் 23 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.

    • இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இதன்மூலம் ரிஸ்வான், விராட் கோலி சாதனை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். கில் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 22 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.

    இதன்மூலம் ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிஸ்வான், விராட் கோலியின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.

    டி20 ஆசிய கோப்பைப் பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-

    289* - 2025-ல் அபிஷேக் சர்மா (6 இன்னிங்ஸ்)

    281 - 2022-ல் முகமது ரிஸ்வான் (6 இன்னிங்ஸ்)

    276 - 2022-ல் விராட் கோலி (5 இன்னிங்ஸ்)

    196 - 2022-ல் இப்ராஹிம் ஜத்ரான் (5 இன்னிங்ஸ்)

    • ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து சாதனை.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் 900 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றிருந்தனர்.

    இந்திய டி20 அணியின் அதிரடி வீரராக இளம் வீரர் அபிஷேக் சர்மா திகழ்ந்து வருகிறார். தொடக்க வீரராக விளையாடி வரும் அவர், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து வருகிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். மேலும் தரவரிசைக்கான புள்ளிகளில் 900-த்தை தாண்டியுள்ளார். தற்போது 907 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு 909 மற்றும் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டு 912 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் 900 புள்ளிகளை கடந்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

    • ஹாரிஸ் அபிஷேக் சர்மாவை ஸ்லெட்ஜிங் செய்யும் வித மாக வம்புக்கு இழுத்தார்.
    • அபிஷேக் சர்மாவும் திருப்பி ஏதோ கூறி பதிலடி கொடுத்தார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி பேட்டிங் செய்தபோது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் வீசினார். அப்போது 3 பந்தை எதிர் கொண்ட அபிஷேக் சர்மா ரன் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஹாரிஸ் அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் வித மாக வம்புக்கு இழுத்தார். அதற்கு அபிஷேக் சர்மாவும் திருப்பி ஏதோ கூறி பதிலடி கொடுத்தார்.

    பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் பவுண்டரி அடித்தார். இதனால் ஹாரிஸ் ஏதோ கூற மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா கோபமானார். அத்துடன் ஹாரிஸ் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். நடுவர் இருவரையும் சமாதானம் செய்தார்.

    இது குறித்து அபிஷேக் சர்மா போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் வீரர்கள் எந்த காரணமும் இல்லாமல் எங்களை நோக்கி வந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறைதான் அதற்கு பதிலடியாக இருந்தது. அவர்களுக்கு மருந்து கொடுக்க ஒரே வழி இதுதான்.

    நானும் சுப்மன் கில்லும் பள்ளி நாட்களில் இருந்தே விளையாடி வருகிறோம். ஒருவருக்கொருவர் துணை நிற்பதை ரசிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
    • அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது ஆட்டத்தில் 5 ஆவது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். அந்த ஓவரில் கில் பவுண்டரி விளாசினார்.

    அப்போது முதல் ஹாரிஸ் ராஃப் அபிஷேக் சர்மாவை பார்த்து ஏதோ கூற, அதற்கு அபிஷேக் சர்மா பதிலடி கொடுத்தார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நடுவர் ராஃபை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார்.
    • பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் திலக் வர்மா (804 புள்ளி) 3ம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (798 புள்ளி) 4வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 5வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி (706 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார்.

    டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (252 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார்.

    ×