என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை 2026"

    • டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
    • ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    இதனால் ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.

    இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு பதிலாக இப்ராஹிம் சர்ட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 2 கேட்சுகளை தவறவிட்டார்.
    • இந்த தொடரில் இந்திய வீரர்கள் இதுவரை 13 கேட்சுகளை தவறவிட்டனர்.

    மும்பை:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது அரைஇறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா-ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 6-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில் விளையாடுகிறது. இதில் 3-ல் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி இதே மும்பை மைதானத்தில் மோதின. இதில் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் ஆடும். இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரை இறுதியில் ஆடுகிறது.இதற்கு முன்பு விளையாடிய 5 அரைஇறுதியில் 3-ல் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.

    இன்றைய போட்டி குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறிய தாவது:-

    ஆட்டத்தில் கேட்சுகளை தவறவிடுவது கவலை அளிக்கிறது. வெளிப்படையாக யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை தவறவிடுவது கிடையாது. பீல்டிங்கில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். வீரர்கள் பயிற்சியின் போது கடினமாக உழைத்து வருகிறார்கள்.

    வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான முறையில் பந்து வீசி வருகிறார். அதில் விக்கெட் எடுக்கும் திறனை பெற்று முன்னேறி வருகிறார். சஞ்சு சாம்சன் ஒரு தரமான பேட்ஸ்மேன். அரை இறுதி போட்டிக்காக அவரிடம் அதிகமான உரையாடல் நடைபெறவில்லை. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை அனுபவம் மூலம் சிறப்பாக கையாண்டார்.

    அவர் அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கடுமையான பயிற்சியை மேற்கொள்வார். கடினமான காலக்கட்டத்தில் அமைதியாக இருந்து போராடிய அவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு மோர்கல் கூறியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 2 கேட்சுகளை தவறவிட்டார். இந்த தொடரில் இந்திய வீரர்கள் இதுவரை 13 கேட்சுகளை (7 ஆட்டம்) தவறவிட்டனர்.

    • ஸ்டப்ஸ்- யான்சன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது.
    • யான்சன் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்காவின் மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 7 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெக்கோன்சி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக் 3-வது பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ரிக்கெல்டன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 1.5 ஓவரில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    அடுத்து வந்த பிரேவிஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். தென்ஆப்பிரிக்கா பவர் பிளேயான முதல் 6 ஓவரில 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்தது.

    அதன்பின் தென்ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மார்க்கிராம் (18), டேவிட் மில்லர் (6) ரச்சின் ரவீந்திரா பந்தில் ஆட்டமிழந்தனர். பிரேவிஸ் (34) நீஷம் பந்தில் ஆட்டமிழந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி 77 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ் உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. யான்சன் அதிரடியாக விளையாடி ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடினார்.

    பின்னர் ஸ்டப்ஸ் அதிரடியை தொடங்கினார். 18-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கும், 3-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். யான்சன் 5-வது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்காவுக்கு 22 ரன்கள் கிடைத்தன. தென்ஆப்பிரிக்கா 18 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்தது.

    19-வது ஓவரை பெர்குசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டப்ஸ் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 24 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ்- யான்சன் ஜோடி 73 ரன்கள் குவித்தது. 19-வது ஓவரில் யான்சன் இரண்டு சிக்சர்கள் அடுத்தடுத்து பறக்கவிட்டு 27 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் விளாசினார்.

    கடைசி ஓவரை ஹென்றி வீசினார். 3-வது பந்தில் போஸ் க்ளீன் போல்டானார். அடுத்த பந்தில் ரபடா ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. யான்சன் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்றி, மெக்கோன்சி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
    • இந்த முறை தென்ஆப்பிரிக்கா அணி எளிதாக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை.

    ஐசிசி தொடரில் மிகவும் எதிர்பார்க்கும் அணியாக தென்ஆப்பிரிக்கா எப்போதுமே திகழ்ந்து வரும். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தில் நாக்அவுட் சுற்றில் ஏமாற்றம் அளிக்கும். அதேவேளையில் நட்சத்திர அணியாகவே திகழாது நியூசிலாந்து. ஆனால் வீறுகொண்டு எழுந்து விளையாடுவார்கள்.

    இப்போதும் அதேபோன்றுதான் தென்ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து இலங்கை தயவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இந்த இரு அணிகளும் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் அரையிறுதியில் மோதுகின்றன. இதற்கு முன்னதாக மூன்று முறை இரு அணிகளும் உலகக் கோப்பை நாக்அவுட் போட்டியில் விளையாடியுள்ளன. மூன்று முறையும் நியூசிலாந்துதான் வெற்றி வாகை சூடியுள்ளது.

    2011 உலகக் கோப்பை காலிறுதி, 2015 உலகக் கோப்பை அரையிறுதி, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆகியவற்றில் தென்ஆப்பிரிக்காவை நியூசிலாந்து வீழ்த்தியுள்ளது.

    ஆனால் இந்த முறை தென்ஆப்பிரிக்கா மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது. இதனால் பழைய வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.

    • இந்திய அணி 6-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதியில் விளையாடுகிறது.
    • இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரை இறுதியில் ஆடுகிறது.

    மும்பை:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    2-வது அரை இறுதி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா-ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

    இந்திய அணி 6-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதியில் விளையாடுகிறது. இதில் 3-ல் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது.

    2007-ல் ஆஸ்திரேலியாவை 15 ரன்னிலும், 2014-ல் தென்ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2024-ல் இங்கிலாந்தை 65 ரன்னிலும் வீழ்த்தியது. 2016-ல் வெஸ்ட் இண்டீஸ் (7 விக்கெட்), 2022-ல் இங்கிலாந்து (10 விக்கெட்) அணிகளிடம் தோற்றது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி இதே மும்பை மைதானத்தில் மோதின. இதில் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் ஆடும்.

    இந்தப்போட்டி தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 72 ரன் னில் வீழ்ந்தது. இந்த மோச மான தோல்விக்கு பிறகு நெருக்கடியில் அபாரமான ஆட் டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை பெற்றது. இதே உத்வேகத்துடன் ஆடி இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    லீக் ஆட்டங்களில் 4 போட்டிகளிலும் (அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் நல்ல நிலைக்கு திரும்பியது அணிக்கு கூடுதல் பலமாகும். அதே நேரத்தில் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலையை ஏற்படுத்துகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் (231 ரன்), இஷான்கிஷன் (224), திலக்வர்மா (178 ரன்), ஷிவம் துபே (166) ஆகியோர் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் பும்ரா (9 விக்கெட்), வருண் சக்கரவர்த்தி (12 விக்கெட்) ஆகியோர் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் பணியில் (172 ரன், 6 விக் கெட்) சிறப்பாக செயல் படுகிறார்.

    மிகவும் முக்கியமான இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் ஆடிய வீரர்களே இடம் பெறுவார்கள். சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். அதே நேரத்தில் இங்கிலாந்து எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும். இதனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு வரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

    இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரிபுரூக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 1 சதம், 1 அரை சதத்துடன் 228 ரன்கள் எடுத்துள்ளார். வில்ஜேக்ஸ், பெதல், பான்டன், பில் சால்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    பந்துவீச்சில் ஆதில் ரஷீத் (11 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர், டாசன் (தலா 10 விக்கெட்) ஓவர்டன் (9), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி லீக் சுற்றில் தடுமாறி பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேபாளம், ஸ்காட்லாந்து, இத்தாலி ஆகிய அணிகளை வென்றது. வெஸ்ட் இண் டீசிடம் 30 ரன்னில் தோற் றது. சூப்பர் 8 சுற்றில் 3 ஆட் டத்திலும் (இலங்கை, பாகிஸ் தான், நியூசிலாந்து) வெற்றி பெற்றது. இதனால் இந்தியா வுக்கு எதிராக சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக் கையில் இருக்கிறது.

    இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரை இறுதியில் ஆடுகிறது. இதற்கு முன்பு விளையாடிய 5 அரைஇறுதியில் 3-ல் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.

    • இந்திய ரசிகர்கள் விளையாட்டு மீது காட்டும் எல்லையற்ற அன்பே இத்தகைய சாதனைகளுக்குக் காரணம்.
    • நாக் அவுட் போட்டிகளிலும் ஆதரவு தெரிவித்து மேலும் புதிய சாதனைகள் படைக்க இந்திய ரசிகர்கள் துணை இருக்க வேண்டும்.

    மும்பை:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது அரை இறுதிபோட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சாதனை படைத்துள்ளதாகத் ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியாவில் மட்டும் இந்தத் தொடரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை (50 கோடி) கடந்துள்ளது. இது இதுவரை நடந்த அனைத்து டி20 உலகக் கோப்பைகளையும் விட அதிகப்படியான பார்வைகளாகும்.

    நேரலை ஒளிபரப்பில் டிஜிட்டல் தளம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு போட்டியை ஒரே நேரத்தில் 6.05 கோடி (60.5 Million) பேர் நேரலையில் பார்த்தது உலக சாதனையாகப் பதிவாகியுள்ளது.

    இந்தத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியை மட்டும் சுமார் 16.3 கோடி பேர் டிஜிட்டல் தளத்தில் கண்டு களித்துள்ளனர்.

    ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வீடியோக்களின் எண்ணிக்கை 10 பில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டு பதிவான 16 பில்லியன் என்ற சாதனையைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து ஜெய் ஷா கூறியதாவது:-

    டி20 உலகக் கோப்பை 2026 தொடரை உலகளவில் அனைவரும் அணுகக்கூடிய ஒரு நிகழ்வாக மாற்ற வேண்டும் என்ற எங்களது இலக்கு நிறைவேறியுள்ளது. இந்திய ரசிகர்கள் விளையாட்டு மீது காட்டும் எல்லையற்ற அன்பே இத்தகைய சாதனைகளுக்குக் காரணம்.

    நாக் அவுட் போட்டிகளிலும் ஆதரவு தெரிவித்து மேலும் புதிய சாதனைகள் படைக்க இந்திய ரசிகர்கள் துணை இருக்க வேண்டும் என கூறினார்.

    • விமான சேவை ரத்தானதால் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே வீரர்கள் இந்தியாவிலேயே தங்கி இருக்கிறார்கள்.
    • போர் பதட்ட சூழ்நிலையால் இந்த இரு நாட்டு அணி வீரர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

    20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.

    மத்திய கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதட்ட சூழ்நிலையால் இந்த இரு நாட்டு அணி வீரர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். விமான சேவை ரத்தானதால் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே வீரர்கள் இந்தியாவிலேயே தங்கி இருக்கிறார்கள்.

    உடனடியாக நாடு திரும்பும் அவசியம் இல்லாவிட்டாலும் பாதுகாப்பான பயணத்துக்கான மாற்று ஏற்பாடு குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐ.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    • அரையிறுதியில் இந்தியாவைத் தான் எதிர்கொள்ள விரும்பினோம்.
    • இந்திய அணி ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி என்பதில் சந்தேகமில்லை.

    2026 டி20 உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி முதல் அரையிறுதி ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. நாளை 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.

    இந்நிலையில் தங்கள் அணி வீரர்கள் இந்தியாவை எதிர்கொள்ளவே ஆவலுடன் காத்திருப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் கூறினார். அவர் அப்படி கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியில் உள்ள சில வீரர்கள் அரையிறுதியில் இந்தியாவைத் தான் எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகக் கூறக் கேட்டேன். இந்திய அணி ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு பெரிய மேடையில் அவர்களை வீழ்த்துவது என்பது தனிச் சிறப்பு. அந்த சவாலை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    என்று அவர் கூறினார்.

    • வான்கடே மைதானத்தில் மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பயிற்சி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
    • இந்திய அணியின் பயிற்சி சுமார் ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, இரவு 7:00 மணிக்கு மேல் தொடங்கியது.

    2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.

    இந்தப் போட்டிக்கு முன்னதாக நேற்று நடைபெறவிருந்த இந்திய அணியின் பயிற்சி அமர்வு சந்திர கிரகணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    வான்கடே மைதானத்தில் மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பயிற்சி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சந்திர கிரகணம் நிலவியதால் பயிற்சி சுமார் ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, இரவு 7:00 மணிக்கு மேல் தொடங்கியது.

    இந்தியாவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. கிரகண நேரத்தில் சுப காரியங்களோ அல்லது புதிய முயற்சிகளோ மேற்கொள்வது அசுபமானது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்திய அணி நிர்வாகம் பயிற்சியை ஒத்திவைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்திற்கு முன் எந்தவிதமான "துரதிர்ஷ்டத்தையும்" தவிர்க்க விரும்பி இந்த மாற்றத்தைச் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கு ரசிகர்கள் பலர் மூடநம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் அணி மூழ்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு சாம்சன், ஹெல்மெட்டை வீசிவிட்டு முழங்காலிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.
    • சஞ்சு சாம்சன் தனது ஹெல்மெட்டை 'எறிந்ததாக' கருதப்பட்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் மோதுகிறது.

    முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதி சுற்றை தீர்மானிக்கும் போட்டியில் அதிரடியாக ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சஞ்சு சாம்சன் அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அந்த வகையில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு சாம்சன், ஹெல்மெட்டை வீசிவிட்டு முழங்காலிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.

    இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, அவர் ஹெல்மெட்டைத் தரையில் வீசியதுதான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் தனது கிரிக்கெட் உபகரணங்களை (பேட், ஹெல்மெட் போன்றவை) கோபத்திலோ அல்லது அதீத உற்சாகத்திலோ தரையில் வீசினால், அது "விளையாட்டு உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்" என்று கூறப்படுகிறது.

    சஞ்சு சாம்சன் தனது ஹெல்மெட்டை 'எறிந்ததாக' கருதப்பட்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக வீரர்களுக்குத் தடை விதிக்கப்படுவதில்லை. ஐசிசி நடத்தை விதிகளின்படி, இத்தகைய செயல்கள் பொதுவாக லெவல் 1 குற்றமாகவே கருதப்படுகின்றன. கோபம் அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துவதை விட, உற்சாகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வீரர்களிடம் நடுவர்கள் பெரிய கண்டிப்பு காட்டுவதில்லை.

    எனவே, சஞ்சு சாம்சன் மீது இதுவரை அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக இது போன்ற கொண்டாட்டங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்பதால், அவர் அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

    இந்த பிரிவின் கீழ் சமீபத்தில், பிப்ரவரி 18-ம் தேதி ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சி, ஆட்டமிழந்த பிறகு ஹெல்மெட்டை வீசியதற்காக அவருக்கு ஒரு 'டிமெரிட்' (Demerit) புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் மோதுகிறது.
    • அரையிறுதிப் போட்டிகளுக்கு மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளும் நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் மோதுகிறது.

    இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மழையால் தடைப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

    அந்த வகையில் ஐசிசி விதிமுறைகளின்படி, அரையிறுதிப் போட்டிகள் மழையால் முழுமையாகக் கைவிடப்பட்டால், 'குரூப் ஸ்டேஜ்' (Super 8) சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

    சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது பிரிவில் முதலிடம் (3 வெற்றிகள்) பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், இந்தியா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தனது பிரிவில் 2-வது இடத்தையே பிடித்திருந்தது.

    போட்டி நடைபெறும் நாளில் போதிய நேரம் இருந்தும், குறைந்தபட்சம் 10 ஓவர்கள் கூட வீச முடியாத சூழல் ஏற்பட்டால், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும். அவ்வாறு ரத்தாகும் பட்சத்தில், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.

    அரையிறுதிப் போட்டிகளுக்கு மாற்று நாள் (Reserve Day) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நாளிலும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் மட்டுமே இந்தப் புள்ளிப் பட்டியல் விதிமுறை கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நரேந்திர மோடி மைதானத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்களுக்குத் தெரியும்.
    • மீண்டும் இறுதிப்போட்டிக்காக இங்கு திரும்புவோம்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இதில் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளும் 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

    முதல் அரையிறுதி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த மைதானம் எங்களது ஹோம் மைதானம் என தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கன்ராட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த உலகக்கோப்பையில் எங்களது பெரும்பாலான போட்டிகளை (7-இல் 5 போட்டிகள்) அகமதாபாத்தில் விளையாடியதால், அந்த மைதானம் எங்களுக்கு ஒரு "சொந்த மைதானம்" (Home Ground) போன்ற உணர்வைத் தருகிறது. இந்த மைதானத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்களுக்குத் தெரியும்.

    அகமதாபாத் மைதானத்தின் சூழல் தங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாகவும், மீண்டும் இறுதிப்போட்டிக்காக இங்கு திரும்புவோம்.

    என ஷுக்ரி கன்ராட் கூறியுள்ளார்.

    இறுதிப் போட்டியும் அதே மைதானத்தில்தான் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×