என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: மழையால் தடைப்பட்டால் இந்தியாவுக்கு ஆப்பு- ஐசிசி விதி சொல்லுவது என்ன?
    X

    டி20 உலகக் கோப்பை: மழையால் தடைப்பட்டால் இந்தியாவுக்கு ஆப்பு- ஐசிசி விதி சொல்லுவது என்ன?

    • 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் மோதுகிறது.
    • அரையிறுதிப் போட்டிகளுக்கு மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளும் நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் மோதுகிறது.

    இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மழையால் தடைப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

    அந்த வகையில் ஐசிசி விதிமுறைகளின்படி, அரையிறுதிப் போட்டிகள் மழையால் முழுமையாகக் கைவிடப்பட்டால், 'குரூப் ஸ்டேஜ்' (Super 8) சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

    சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது பிரிவில் முதலிடம் (3 வெற்றிகள்) பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், இந்தியா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தனது பிரிவில் 2-வது இடத்தையே பிடித்திருந்தது.

    போட்டி நடைபெறும் நாளில் போதிய நேரம் இருந்தும், குறைந்தபட்சம் 10 ஓவர்கள் கூட வீச முடியாத சூழல் ஏற்பட்டால், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும். அவ்வாறு ரத்தாகும் பட்சத்தில், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.

    அரையிறுதிப் போட்டிகளுக்கு மாற்று நாள் (Reserve Day) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நாளிலும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் மட்டுமே இந்தப் புள்ளிப் பட்டியல் விதிமுறை கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×