என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து"
- ஓஷோ ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும்.
- எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன்.
இந்தியாவில் பிறந்து, தனது ஆன்மீக சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் ஓஷோ.
இந்தியாவில் ஆசிரமம் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் அமைத்தார். பாலியல் சுதந்திரம் குறித்து ஓஷோவின் சொற்பொழிவுகள் மிக புகழ்பெற்றவை.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான பிரேம் சர்கம் என்ற பெண் ஓஷோவின் ஆசிரமத்தில் 50க்கும் மேற்பட்ட முறை பலாத்தகாரம் செய்யப்பட்டேன் என்று பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பிரேம் சர்கம், 6 வயதில் எனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தேன்
ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும் பெண்கள், பருவமடைந்தவுடன் பாலியல் வழிகாட்டுதலுக்காக வயது வந்த ஆண்களைத் தேட வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது.
தன்னுடைய 7 வயதில் முதல்முறையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளானேன். எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். 12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்.
பின்னர் புனேவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று ஒரேகானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தாயுடன் சேர்ந்தேன். அங்கு குறைந்தது 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டேன். 16 வயதில் தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எனக்கு புரிந்தது
ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட 2 பிரிட்டிஷ் பெண்களின் கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையம் மூடப்பட்டது.
- தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
லண்டன்:
காலநிலை மாற்றம் என்பது இன்றைய உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால் புவி வெப்பமயமாதல், அதீத கனமழை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கோரி உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை குறைத்து, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த உலக நாடுகள் முயற்சிக்கின்றன.
அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து ஆற்றலையும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெற இங்கிலாந்து இலக்கு நிர்ணயித்துள்ளது.
எனவே தலைநகர் லண்டனில் செயல்படும் ராட்கிளிப் அனல் மின் நிலையத்தை மூட அரசாங்கம் முடிவு செய்தது. இதனையடுத்து 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அனல் மின் நிலையம் நேற்றுடன் அதன் பணியை நிறைவு செய்தது.
இதன்மூலம் இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையமும் மூடப்பட்டது. இதுகுறித்து எரிசக்தி துறை மந்திரி மைக்கேல் ஷாங்க்ஸ் கூறுகையில், `2030-க்குள் நாட்டின் அனைத்து ஆற்றல்களும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தில் இருந்து பெறுவதற்கான முயற்சியில் இது ஒரு மைல்கல் ஆகும்' என பாராட்டு தெரிவித்தார்.
இங்கிலாந்தில் 1990-ம் ஆண்டு நாட்டின் மின் உற்பத்தியில் சுமார் 80 சதவீதம் அனல் மின் நிலையம் மூலமே பெறப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு மின்சார தேவையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே அனல் மின் நிலையம் மூலம் பெறப்பட்டது.
தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்கும் முதல் பெரிய பொருளாதார நாடாக இங்கிலாந்து மாறி உள்ளது.
- ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார்.
- பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது.
இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சோமர்செட் மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சோமர்செட் அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார்.
ஆனால் அந்த பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது. இதை கவனித்த பஷீர் நடுவரிடம் தெரிவிக்க, அந்த பந்தை டெட் பாலாக நடுவர் அறிவித்தார்.
பேட்ஸ்மேன் பந்தை சந்திக்கும் போது கவன சிதறல் ஏற்படும் வகையில் ஏதேனும் அசைவுகள், சத்தம் கேட்டால் அந்த பந்து டெட் பாடலாக அறிவிக்கப்படும்.
அதனால் பஷீர் தனது விக்கெட்டை காப்பாற்றினார். ஆனால் பஷீர்க்கு நீண்ட நேரம் இந்த அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை. அபோட் பந்துவீச்சில் அடுத்த 2 பந்துகளிலேயே பஷீர் டக் அவுட் ஆனார்.
இதன் விளைவாக, சோமர்செட் முதல் இன்னிங்ஸில் 136 ரன்களுக்குச் சுருண்டது.
Kyle Abbott nearly had two wickets in two balls... But a towel fell out of Abbott's back pocket in his delivery stride, and it was deemed a dead ball. pic.twitter.com/9jTYDoABfk
— Vitality County Championship (@CountyChamp) September 26, 2024
- முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலிய அணி 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
மழைக்காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது.
பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 50 ஆவது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரில் பேட்டிங் செய்த லிவிங்ஸ்டன் 6,0,6,6,6,4 என 28 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலிய பவுலர் என்ற மோசமான சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.
இதற்க்கு முன்னதாக ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து சைமன் டேவிஸ், கிரேக் மெக்டெர்மாட், சேவியர் டோஹெர்டி, ஆடம் ஜாம்பா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் இந்த மோசமான சாதனையை கைவசம் வைத்திருந்தனர்.
6️⃣▪️6️⃣6️⃣6️⃣4️⃣Incredible final over hitting from Liam Livingstone ??? #ENGvAUS ?? | @liaml4893 pic.twitter.com/qfEDxOM88N
— England Cricket (@englandcricket) September 27, 2024
- நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 79-வது கூட்டம் நடைபெற்றது.
- பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது என்றார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது. அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
5 நிரந்திர உறுப்பினர்களான ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை எந்தவொரு முக்கிய தீர்மானத்தையும் வீட்டோ செய்ய அதிகாரம் கொண்டவை.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆதரவு தெரிவித்து இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நிரந்தர உறுப்பினராக இந்தியாவை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆதரித்தார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 79-வது கூட்டத்தின் பொது விவாதத்தில் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், "அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத் தயாராக இருக்கும், அதிக பிரதிநிதித்துவ அமைப்பாக ஐ.நா. மாற வேண்டும். பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாகக் காண விரும்புகிறோம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதிக இடங்கள் இருக்க வேண்டும்.
நம்மிடம் ஒரு பாதுகாப்பு கவுன்சில் தடைசெய்யப்பட்டிருக்கும் வரை, ஒவ்வொரு தரப்பினரின் நலன்களுக்கும் ஏற்ப, நாம் முன்னோக்கிச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று கூறுவேன். எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் பயனுள்ளதாக்குவோம், முதலில் அவற்றை அதிக பிரதிநிதிகளாக்குவோம். அதனால்தான் பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது என்றார்.
- இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி என்ற பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.
- 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தது.
உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்தது
இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது. 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது.
33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Rosie, the cat who was considered the oldest in the world, has passed away in Britain at the age of 33. pic.twitter.com/a8eF4Vciyy
— NewsPoint (@HaberNoktam) September 16, 2024
- அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.
- வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருாள் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.
வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதன் காரணமாக ஆல்-ரவுண்டர் வீரரான லியம் லிவிங்ஸ்டன் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு லிவிங்ஸ்டன் முக்கிய காரணமாக செயல்பட்டார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 19 ஆம் தேதி துவங்குகிறது. பட்லருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக மாறியிருக்கிறார்.
- இறப்பை தானே தீர்மானிக்கும் வகையில் வலியில்லாமல் இறப்பதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனம் சூசைட் பாட் ஒன்றை தயாரித்து இருக்கிறது.
- வயது முதிர்ந்த தம்பதி ஒன்றாக வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், விருப்பப்பட்டு தன்னுடைய இறப்பை தானே தீர்மானிக்கும் வகையில் வலியில்லாமல் இறப்பதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனம் சூசைட் பாட் ஒன்றை தயாரித்து இருக்கிறது.
இந்நிலையில் இந்த சூசைட் பாடில் இறப்பதற்கு ஒரு பிரிட்டிஷ் தம்பதி முன்வந்துள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது கடைசி தருணத்தை ஒன்றாக செலவிடமுடியும் என நினைத்துள்ளனர். வயது முதிர்ந்த தம்பதி ஒன்றாக வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டினை சேர்ந்த தம்பதி பீட்டர் ஸ்காட் (வயது 86), அவரது மனைவியான கிறிஸ்டைன் (வயது 80) ஓய்வு பெற்ற செவிலியர். இவர்கள் 46 ஆண்டுகள் திருமண உறவில் மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். கிறிஸ்டைனுக்கு டிமன்ஷியா நோய் இருப்பது ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், தன் மனைவி இல்லாத வாழ்க்கையை கொஞ்சமும் நினைத்து பார்க்க முடியாமல் இந்த முடிவிற்கு இருவரும் வந்துள்ளனர்.
இதைப்பற்றி பீட்டர் ஸ்காட் கூறுயதாவது "நாங்கள் எங்கள் வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து முடித்து விட்டோம். இதன் பிறகு அவள் நோயால் அவதிப்பட்டு கஷட்டப்படுவதை இந்த வயதில் பார்க்க என்னால் முடியாது."
"என்னால் முடிந்த அளவுக்கு நான் அவளை கவனித்துக்கொள்வேன். ஆனால் அவள் தன் வாழ்க்கையில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் போது உதவியாக போதுமான அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறாள். அவள் தன்னையும் தன் வாழ்க்கையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறாள். சூசைட் பாட் அவளுக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது, அவள் இல்லாமல் வாழ நானும் விரும்பவில்லை," என கூறியுள்ளார்.
இதனால் இவர்கள் சுவிட்சர்லாந்து சென்று அந்த டெத் பாடில் தங்களில் உயிரை மாய்த்துக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக இந்த தம்பதி தங்களது கடைசி காலத்தை ஆல்ப்ஸ் மலையில் வாக்கிங் செல்லவும், சுவையான மீன் உணவை சாப்பிடவும் முடிவு செய்துள்ளனர்.
- இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அடுத்த மாதம் 7ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அடுத்த மாதம் 7ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
Check out the England squad set to take on Pakistan in the upcoming Test tour! ???#ENGvsPAK #England #Testcricket #icc pic.twitter.com/9n3LD8Z43G
— Cricadium CRICKET (@Cricadium) September 10, 2024
- டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை மொயீன் அலி வீழ்த்தியுள்ளார்.
- மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார்.
மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
2019ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022ல் டி20 உலகக் கோப்பையையும் வென்ற இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இடம் பெற்றிருந்தார்.
2022 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
ஓய்வு பெறுவது தொடர்பாக பேசிய மொயீன் அலி, "எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்கான நேரம். தொடர்ந்து லீக் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடுவேன். எதிர்காலத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றவும் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
- ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ரன்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை ஆகும்.
இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார்.
- இங்கிலாந்தின் ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகினார்.
- மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.
அண்மையில், , இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து ஜூலை 30 ஆம் தேதி மேத்யூ மோட் விலகினார்.
இந்நிலையில், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக பிரென்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மெக்கல்லம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்