என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan Player"
- இந்திய அணி என்று பெயரிட்டது கடைசி வரை எனக்கு தெரியாது.
- கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் தனியார் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறார்கள்.
கராச்சி:
பக்ரைனில் கடந்த 16-ந்தேதி தனியார் அமைப்பு சார்பில் ஜி.சி.சி. கோப்பைக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஈரான் போன்ற பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு அதன் சார்பில் வீரர்கள் ஜாலியாக பங்கேற்றனர். பெரும்பாலான அணிகளில் அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களே இடம் பெற்றிருந்தனர்.
ஆனால் இந்திய அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தும் ஒருவர். அவர் இந்திய அணிக்குரிய சீருடை அணிந்தும், தேசிய கொடியை உற்சாகமாக அசைத்தப்படியும் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனை கவனத்தில் கொண்டுள்ள பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 27-ந்தேதி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் கபடி சம்மேளன செயலாளர் ராணா சர்வார் கூறுகையில், 'இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள், இந்திய தனியார் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் அவர்களுக்காக உபைதுல்லா ஆடியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கபடி சம்மேளனத்திடமோ அல்லது பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடமே எந்த அனுமதியும் பெறாமல் சென்றுள்ளார். அவர் மட்டுமல்ல இவ்வாறு 16 வீரர்கள் பக்ரைன் சென்றுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
உபைதுல்லா ராஜ்புத் கூறுகையில், 'இது தனியார் போட்டி. இதில் இந்தியா, பாகிஸ்தான் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் இந்திய அணி என்று பெயரிட்டது கடைசி வரை எனக்கு தெரியாது. கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் தனியார் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறார்கள். ஆனால் ஒரு போதும் இந்தியா அல்லது பாகிஸ்தான் பெயரில் விளையாடவில்லை. தவறுதலாக இந்தியாவின் பெயரில் விளையாடியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
- ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக சவுத் ஷகீல் விளையாடினார்.
- போட்டியின் போது சவுத் ஷகீல் தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய வர முடியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சவுத் ஷகீல் இந்த தொடரில் விளையாடினார். அவர் ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பிடிவி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சவுத் ஷகீல் களத்திற்கு வரவில்லை. மூன்று நிமிடங்கள் ஆகியும் சவுத் ஷகீல் களத்திற்கு வராததால் பிடிவி அணி கேப்டன் நடுவரிடம் அவுட் கேட்டார்.
இதையடுத்து நடுவர் சவுத் ஷகிலுக்கு அவுட் கொடுத்து விட்டார். இந்த நிலையில் போட்டியின் போது சவுத் ஷகீல் படுத்து தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய அவரால் வர முடியவில்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலே முதல் முறையாக டைம்ட் டவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை சவுத் ஷகீல் படைத்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணி தற்போது தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் நிலையில், சவுத் ஷகீல் களத்திற்கு வராமல் படுத்து தூங்கிய சம்பவம் பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இந்த போட்டியில் முஹம்மது ஷாசாத் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சவுத் ஷகீல் பேட்டிங் செய்ய வராமல் தூங்கியதால் அவருடைய அணி 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஒரு விக்கெட் விழுந்த பிறகு களத்திற்கு இரண்டு நிமிடத்திற்குள் புது பேட்ஸ்மேன் வந்து பேட்டிங் செய்ய தயாராகவில்லை என்றால் அவருக்கு டைம்ட் அவுட் என்ற முறையில் அவுட் வழங்கப்படும்.
கடந்த 2023 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் இவ்வாறு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான சோயிப் மாலிக் 2015-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தற்போது சோயிப் மாலிக் வெஸ்ட்இண்டீசில் வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் கரிபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் போட்டியில் கயானா அமாசோன் வாரியர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் 36 வயதான சோயிப் மாலிக் அளித்த ஒரு பேட்டியில், ‘2019-ம் ஆண்டு ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எனது கடைசி உலக கோப்பை போட்டியாகும். ஆனால் 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அது தான் எனது இலக்காகும். இந்த இரண்டும் பெரிய இலக்காகும். அதனை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். இது எப்படி போகும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் இந்த இரண்டு உலக கோப்பை போட்டியிலும் விளையாட முடியும் என நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார். #T20WorldCup #Pakistan #ShoaibMalik






