என் மலர்
நீங்கள் தேடியது "The Hundred"
- முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 100 பந்துகளில் 168 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து தோற்றது.
லண்டன்:
இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஓவல் இன்வின்சிபிள்ஸ், டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. வில் ஜாக்ஸ் 72 ரன்னும், ஜோர்டான் காக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஓவல் இன்வின்சிபிள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
இந்நிலையில், ஓவல் இன்வின்சிபிள் அணியின் கேப்டன் சாம் பில்லிங்ஸ் கேப்டனாக தொடர்ந்து 3 முறை தனது அணிக்கு கோப்பை வாங்கித் தந்துள்ளார் என்பதால் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






