search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabaddi match"

    • ரமேஷ் உள்ளிட்ட சிலருடன், மத கடி வாட்டர் டேங்க் அருகில் மது குடித்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது.
    • போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மதகடி தோமாஸ் அருள் திடலைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது24). இவர் கும்ப கோணத்தில் நடைபெற்ற கபடி போட்டியில், 2-ம் பரிசு பெற்ற மகிழ்ச்சியில், நண்பர்கள் டேவிட், சூரியா, அலெக்ஸ், ரமேஷ் உள்ளிட்ட சிலருடன், மத கடி வாட்டர் டேங்க் அருகில் மது குடித்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது. அப்போது, இந்த கபடிக்குழு வெற்றிபெற நான்தான் காரணம் என ரமேஷ் என்பவர் கூறியதாக வும், அதற்கு, பிரசாந்த் ஏன் சூரியா நல்ல விளையாட வில்லையா என கேட்டதாக வும் இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் பீர்பாட்டி லால் பிரசாந்த் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் காயம் ஏற்பட்ட பிரசாந்த் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு பிரசாந்த் நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    அதேபோல், ரமேஷ் நிரவி போலீசில் கொடுத்த மற்றொரு புகாரில், பிரசாந்த் இந்த கபடிகுழு வெற்றி பெற நான்தான் காரணம் என கூறியதால் எங்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நான் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குசென்றேன். வீட்டின் அருகே சென்ற போது, மேற்படி பிரசாந்த் தனது நண்பர்கள் அஜித், சிவக்குமார், கார்த்திக் ஆகி யோருடன் என்னை வழி மறித்து, என்னை தாக்கி னார்கள். இதில் காயம் அடைந்த நான் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்க பட்டேன். மேலும் என் மீது தாக்குதல் நடத்திய மேற்கண்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் வருகிற அக்டோபர் மாதம் தென்னிந்திய கபடி போட்டி நடந்தது.
    • இந்த தகவலை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணி தலைவர் ரமேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கபடி அணியின் தலைவர் ரமேஷ் கண்ணன் ராமநாதபுரத்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கபடி அணி கடந்த 4 முறை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. வருகிற 11,12,13-ந் தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆல் இந்தியா சாம்பியன்ஷிப் கபடி போட்டி சென்னை யில் நடக்க இருக்கிறது.

    இப்போட்டியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கபடி அணி கலந்து கொள்கிறது.அதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கடற்கரை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வருகின்ற செப்டம்பர் 9,10-ம் தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு அணிக்கான வீரர்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் தென் இந்தியா அளவிலான மாற்றுதிறனாளிகள் சாம்பியன்ஷிப் போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற திட்ட மிடப்பட்டுள்ளது.

    இந்த போட்டிகள் நடத்து வதற்காகவும், மாவட்ட ஆட்சியரின் வாழ்த்து பெறுவதற்காகவும், இன்று அவரை நேரில் சந்திக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்பேட்டியின் போது தமிழக மாற்றுத் திறனாளிகள் அணி கேப்டன் மகேஸ், துணை கேப்டன் ரமேஷ் மற்றும் அணி வீரர்கள் பிரவின், சரவணன், மோகன், அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

    • தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துலுக்கன்குளம் புதியபூக்கள் கபடி குழு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது.

    இதில் கலைஞானபுரம் அணியும், சிலுவைபுரம் அணியும் மோதினர். இதில் சிலுவைபுரம் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்வி அடைந்த அணியை மற்றொரு அணியினர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பை சேர்ந்த 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கலைஞானபுரம் தொண்டியம்மாள் என்பவர் வீட்டின் வழியாக சென்ற போது அதிகமான ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனை தொண்டியம்மாள் என்பவர் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.

    தகவல் அறிந்ததும் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் கிராமத்திற்கு சென்று கற்களால் மாறி, மாறி தாக்கி கொண்டனர். அப்போது இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இதில் பொன்னுச்சாமி, பள்ளி மாணவி பிரியதர்ஷினி, மாடசாமி, பரமசிவம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவு துலுக்கன்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    எனினும் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் இன்று காலை நீடித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குளித்தலை வட்டம் குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி (ஊர் சார்ந்த தனி விளையாட்டு குழு) விளையாட்டிற்கு வந்திருந்த சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன் பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் தங்கவேல் (வயது 26) என்பவர் சிறிது நெஞ்சுவலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.

    போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி தாய்மண் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடத்தப்படுகிறது. #Thirumavalavan #Kabaddi

    சென்னை:

    சென்னை சாலிகிராமம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 6 மணிக்கு கபடி போட்டி தொடங்குகிறது.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40 அணிகள் பங்கேற் கின்றன. கபடி போட்டி தொடக்க விழாவிற்கு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வி.கோ.ஆதவன் தலைமை தாங்குகிறார். தயாளன், பனையூர் பாபு ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கிறார்கள்.

    போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் பண முடிப்பும், அம்பேத்கர் நினைவு கோப்பையும், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரம் பணமுடிப்பும் காமராஜர் நினைவு கோப்பையும் வழங்கப்படுகிறது.

    3-வது பரிசாக ரூ.30 ஆயிரம் பணமுடிப்பும் மற்றும் தொல்காப்பியர் நினைவு கோப்பையும், 4-வது பரிசாக ரூ.20 ஆயிரம் பணமுடிப்பும், தன்ராஜ் பாளையம்மாள் நினைவு கோப்பையும் வழங் கப்படுகிறது.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலை இறுதி போட்டி நடத்தப்பட்டு இரவு பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பணமுடிப்பை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் வி.கோ.ஆதவன், விருகை தொகுதி செயலாளர் கரிகால் வளவன், ராஜசேகரன், தி.மு.க. வக்கீல் எம்.ஸ்ரீதர், ஏ.எம்.கணேஷ், கோ.ராம லிங்கம், வி.என்.கண்ணன், ஜெ.செந்தில்குமார், வி.என். ஜெயகாந்தன், அப்துல் அஜீஸ், திலீப், மாவட்ட செயலாளர்கள் ரவிசங்கர், இரா.செல்வம், நா.செல்லத் துரை, அம்பேத்வளவன், அன்புசெழியன், சூ.க.ஆத வன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டியினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டியினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார் இந்த போட்டியில் 73 அணிகள் பங்கேற்கின்றன.

    திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் தினேஷ் ராஜா முதலாமாண்டு நினைவு கோப்பைக்கான கபடி போட்டி இள மருது அணி சார்பில் தொடங்கியது.

    திருமங்கலம் சாத்தங்குடி நாட்டாமங்கலம் உசிலம்பட்டி திருப்பரங்குன்றம் அவனியாபுரம் அலங்காநல்லூர் நடு முதலைக்குளம் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 73 அணிகள் பங்கேற்றன. மாவட்ட அளவிலான கபடி போட்டியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தொடங்கி வைத்தார்.

    கபடி போட்டிகள் 2 நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சுழற்கோப்பையும் ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் இந்த போட்டியினை சுற்று வட்டார கிராம மக்கள் கண்டுகளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி, முன்னாள் தொகுதிச் செயலாளர் ஆண்டிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி வருகிற 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை துபாயில் உள்ள அல் வாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது. #Kabaddi #KabaddiMastersDubai2018
    துபாய்:

    சர்வதேச கபடி பெடரேஷன் சார்பில், துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் 6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி வருகிற 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை துபாயில் உள்ள அல் வாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிப்போட்டிக்கு முன்னேறும். தினசரி இரண்டு லீக் ஆட்டங்கள் முறையே இரவு 8 மற்றும் 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டங்கள் வருகிற 22 மற்றும் 25-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #Kabaddi  #KabaddiMastersDubai2018
    ஓட்டப்பிடாரம் அருகே கோவில் விழாவையொட்டி கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற முப்புலிவெட்டி ஜெயசேகர் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 18-வது ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. போட்டிக்கு ஊர் தலைவர் ஜோசி தலைமை தாங்கினார். போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டனர்.

    இறுதி போட்டியில் முப்புலிவெட்டி ஜெயசேகர் அணியும் தூத்துக்குடி ஏ.கே பிரதர்ஸ் அணியும் மோதின. இறுதி போட்டியை தூத்துக்குடி கேபிள் டி.வி தாசில்தார் செல்வக்குமார் தொடங்கி வைத்தார். இதில் முப்புலிவெட்டி ஜெயசேகர் அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு ரூ.26 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

    2-வது பரிசு பெற்ற தூத்துக்குடி ஏ.கே பிரதர்ஸ் அணிக்கு ரூ.21 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, சிலோன் காலனி தில்லைநாயகம், முப்புலி வெட்டி சங்கரநாராயணன், தூத்துக்குடி கேபிள் டி.வி தாசில்தார் செல்வக்குமார் மற்றும் பலர் பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார்.

    ×