என் மலர்

  நீங்கள் தேடியது "Ottapidaram"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 4-ந் தேதி வழக்கம் போல மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் ராமலெட்சுமி மற்றும் குழந்தைகளையும் காணவில்லை.
  • மனைவி, குழந்தைகள் மாயமான வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறிய மாடசாமி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

  தூத்துக்குடி:

  ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது40). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலெட்சுமி (35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

  குழந்தைகளுடன் தாய் மாயம்

  இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வழக்கம் போல மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் ராமலெட்சுமி மற்றும் குழந்தைகளையும் காணவில்லை.

  அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஓட்டப்பிடாரம் போலீசில் 5-ந் தேதி புகார் செய்தார்.

  எஸ்.பி. அலுவலகத்தில் மனு

  இந்நிலையில் மனைவி, குழந்தைகள் மாயமான வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறிய மாடசாமி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

  இதைத்தொடர்ந்து மனு தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி போலீசாருக்கு அறிவுறு த்தப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை ராமலெட்சுமி, அவர்களது 3 குழந்தைகள் எங்கு சென்றனர்? என அவர்களை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சார்பதிவாளர் முத்து மாரியப்பன் விண்ணப்பத்தில் உள்ள வாரிசு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்களை இணையத்தில் சரி பார்த்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புதியம்புத்தூர்:

  ஓட்டப்பிடாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முத்துராஜ் என்பவரின் சொத்துகளை அவரது மனைவி பொன்செல்வி (வயது55) என்பவர் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு விண்ணப்பம் வந்திருந்தது.

  பெயர் மாற்றம்

  சார்பதிவாளர் முத்து மாரியப்பன் விண்ணப்பத்தில் உள்ள வாரிசு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்களை இணையத்தில் சரி பார்த்தார். அப்போது பத்திரப் பதிவுக்காக குறிப்பிட ப்பட்டிருந்த முத்துராஜின் மகள் பாலசவுந்தரி என்பவரின் ஆதார் எண்ணை சரிபார்த்ததில் அதில் வேறொருவரின் பெயர் வந்தது.

  போலி ஆதார்

  இதனால் சந்தேகம் அடைந்த சார் பதிவாளர் நடத்திய விசாரணையில், பாலசவுந்தரிக்கு பதிலாக முப்புலிவெட்டியை சேர்ந்த நட்டார் மனைவி ஒளி முத்தம்மாள் என்பவரை அழைத்து வந்தது தெரிந்தது.

  இதையடுத்து சார்- பதிவாளர் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )சுதேசன், சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தீவிர விசாரணை நடத்தினர்.

  அதில் போலி ஆதார் கார்டு மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற புதியம்புத்தூர் மேல மடத்தை முத்துராஜ் மனைவி பொன் செல்வி, அவரது மகன் சுமன்ராஜ், தூத்துக்குடி சேர்ந்த முத்துராஜா மனைவி சசி பாலா (28), பத்மநாபன் மனைவி பொன்சுமதி, புதியமுத்தூர் மேல மடத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் (75), முப்புலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் மனைவி ஒளி முத்தம்மாள் (39) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
  • நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் லோகம்மாளின் கம்மலை பிடிங்கி சென்றனர்.

  ஓட்டப்பிடாரம்:

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருேக உள்ள குமரெட்டியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்.

  இவரது மனைவி மாரியம்மாள் (வயது45). இவர் எப்போதும்வென்றான் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

  இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

  அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

  இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா (74) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கடந்த மாதம் மகனை பார்க்க சென்றார். அவரது வீட்டின் பூட்டும் இன்று உடைக்கப்பட்டு கிடந்தது.

  ஆனால் அவரது வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டது.

  இது தொடர்பாக பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

  மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

  இந்நிலையில் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி லோகம்மாள் (60) என்பவர் காற்றுக்காக வீட்டின் வளாகத்தில் நேற்று இரவு படுத்து தூங்கினார். நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரது கம்மலை பிடிங்கி சென்றனர்.

  இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

  போலீசார் விசாரணையில் இதே கும்பல் தான் மற்ற 2 வீடுகளிலும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.   

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் உள்ளே சென்று பார்த்த போது 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
  • சவாலாப்பேரி ரத்தின- பேச்சியம்மாள் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் பணம் கொள்ளை போனது.

  புதியம்புத்தூர்:

  ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது62).

  இவர் நேற்று தனது மனைவியுன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் மாலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.


  இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

  சவாலாப்பேரி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி பேச்சியம்மாள். கூலி தொழிலாளர்கள்.

  நேற்று இவர்கள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

  இது தொடர்பான புகாரின் மணியாச்சி மற்றும் புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மலர்குளத்திற்கு செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை மழை வருவதற்குள் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
  • கால்வரத்து பகுதி தூர்வாரப்படும் என யூனியன் தலைவர் ரமேஷ் கூறினார்.

  ஓட்டப்பிடாரம்:

  ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம் அணைக்கட்டில் இருந்து கால்வாய் வழியாக புதியம்புத்தூர் மலர்குளத்திற்குச் செல்லும் கால்வாயில் குலசேகரநல்லூர் அருகே கடந்த மழை காலத்தில் உடைப்பு ஏற்பட்டு கோரம்பள்ளம் அணைக்கு செல்லும் கால்வாயில் செல்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை மழை வருவதற்குள் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமையில் யூனியன் ஆணையாளர் வெங்கடாச்சலம், யூனியன் கவுன்சிலர் மொட்டையச்சாமி, கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுமக்களின் கோரிக்கையான மலர்குளத்துக்கு செல்லும் கால்வாயில் உைடப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்படும். மேலும் கால்வரத்து பகுதி தூர்வாரப்படும் எனவும் யூனியன் தலைவர் ரமேஷ் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒட்டப்பிடாரம் தொகுதியில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
  ஒட்டப்பிடாரம்:

  ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பொதுமக்கள் வாக்களிக்க 257 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூத்கள் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 257 வாக்குச்சாவடிகளிலும் மத்திய அரசின் ஊழியர்களை நுண்பார்வையாளர்களாக நியமித்துள்ளனர். இதையடுத்து டெல்லி உள்ளிட்ட எந்த இடத்தில் இருந்தும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் இதில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

  மொத்தம் களத்தில் 15 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்த ஒரு வி.வி.பாட் எந்திரங்களும் வைக்கப்படுகிறது. 257 வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக ஒரு வீல் சேர் உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு தொகுதி முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

  பதற்றமான வாக்குச்சாவடிகள் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 3 மத்திய கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். #Bypolls #TNByelections

  சென்னை:

  தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் சட்டசபை தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியும் காலி இடங்கள் ஆனது.

  இதற்கிடையே டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர், விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, அரூர், மானாமதுரை ஆகிய 18 சட்டசபை தொகுதி இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

  இந்த நிலையில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, பழைய வழக்கு ஒன்றில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த ஓசூர் தொகுதியும் காலி இடமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 21 இடங்கள் காலி இடங்களாக இருந்தன.

  கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.

  தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை தி.மு.க., காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தி.மு.க. தரப்பில் புகார் கூறப்பட்டது. இதை மறுத்த தேர்தல் ஆணையம், “அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தது.

  இதைத் தொடர்ந்து அந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. இதற்கிடையே சூலூர் சட்ட சபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

  இந்த 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட 7-வது ஓட்டுப்பதிவு தினமான 19-ந்தேதியை 4 தொகுதி இடைத்தேர்தல் தேதியாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.

  4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந்தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற மே மாதம் 2-ந்தேதி கடைசி நாளாகும்.

  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு தேர்தலின்போது அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. அந்த தேர்தலில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. சூலூர் தொகுதியை காங்கிரசுக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கும் விட்டுக் கொடுத்திருந்தது.

   


  ஆனால் இந்த தடவை இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருப்பதால் 4 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களையே களம் இறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதனால் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.

  4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் உள்ளன. எனவே அதற்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களை களம் இறக்க இரு கட்சிகளிலும் இப்போதே விவாதமும், ஆலோசனைகளும் தொடங்கி விட்டது.

  மனுத்தாக்கல் தொடங்கும் 22-ந்தேதிக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவிக்க அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தி.மு.க.வில் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

  ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகையா, சூலூர் தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வும் வேட்பாளர் தேர்வு ஆலோசனையை தொடங்கி விட்டன.

  வருகிற 18-ந்தேதி நடக்கும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்குகளும், மே 19-ந்தேதி நடக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளும் மே 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த தேர்தல் முடிவுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தலைவிதியை நிர்ணயம் செய்வதாக இருக்கும். இதனால் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

  தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் பட்சத்தில் தனிப் பெரும்பான்மை பெற 117 பேர் ஆதரவு தேவை. தற்போது சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே 22 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.

  அ.தி.மு.க.வின் தற்போதைய 114 எம்.எல்.ஏ.க்களில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூன்று பேரும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அது போல இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய ஜன நாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.

  இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்ப தயாராக இல்லை. அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 108 ஆக குறைந்து விடும். இத்தகைய நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் 22 இடங்களில் குறைந்தபட்சம் 10 இடங்களில் வெற்றி பெற்றால்தான் அ.தி.மு.க.வின் நம்பகத்தன்மை பலம் 118 ஆக உயரும். எனவே 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றியை குறி வைத்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர்.

  சட்டசபையில் தற்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.

  தனி பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு உள்ளது. இந்த எண்ணிக்கையில் தி.மு.க.வால் வெற்றி பெற முடியுமா? என்பது மே 23-ந் தேதி தெரிந்து விடும். #Bypolls #TNByelections

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
  சென்னை:

  தமிழ்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

  இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது.

  இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

  ஏப்ரல் 22-ம் தேதி - வேட்பு மனுதாக்கல் தொடக்கம், 29-ம் தேதி - வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைகிறது. மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

  மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும்  என தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
  புதுடெல்லி:

  தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

  தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்த முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டது. ஆனால், அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  ஏப்ரல் 18ம் தேதிக்குப் பிறகு வேறு தேதிகளில் கூட இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாம் என திமுக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலம் வரும்போதுதான் தேர்தலை நடத்த முடியும் என்றும், சரியான நேரம் வரும்போது தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

  இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள திமுக, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.  இந்நிலையில், சென்னையில் இன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #ByElection2019 #SatyabrataSahoo
  சென்னை:

  டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

  இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

  இந்நிலையில், இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. #ByElection2019 #SatyabrataSahoo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print