என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pigeon Chicks"

    • அந்தோணி ராஜ் வழக்கம் போல் பி. துரைச்சாமிபுரம் கிராமம் அருகே உள்ள ஒரு கிணற்றில் அந்தோணிராஜ் புறா குஞ்சு எடுப்பதற்காக கிணத்தில் இறங்கியுள்ளனர்.
    • அப்போது மனைவி கிணற்றுக்குள் பார்த்தபோது கணவன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பி.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது35). இவரது மனைவி மாரிச்செல்வி இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது.

    புறா குஞ்சு

    அந்தோணி ராஜ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மற்ற நேரத்தில் கிணற்றில் புறா குஞ்சு எடுத்து உணவு சமைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    வழக்கம் போல் பி. துரைச்சாமிபுரம் கிராமம் அருகே உள்ள ஒரு கிணற்றில் அந்தோணிராஜ் புறா குஞ்சு எடுப்பதற்காக கிணத்தில் இறங்கியுள்ளனர்.அப்போது அங்கு நிலைத்தடுமாறி கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ள நிலையில், நீச்சல் தெரியாததால் பரிதாபமாக உயிரிழந்தார்

    கிணற்றில் தவறி விழுந்து

    நீண்ட நேரம் ஆகியும் அந்தோணி ராஜ் வீட்டிற்கு வரவில்லை என்று குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றுள்ளனர். ஒரு கிணறு அருகில் அவருடைய காலனி கிடந்துள்ளது. அப்போது மனைவி கிணற்றுக்குள் பார்த்தபோது கணவன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பின்னர் பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. போலீசார், ஒட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சீதாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×