என் மலர்
நீங்கள் தேடியது "labour"
- லெனின்சிங் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
- பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மாயநேரியை சேர்ந்தவர் லெனின்சிங் (வயது 32). தொழிலாளி. கடந்த 17-ந் தேதி இவர் தனது மனைவி அனிதாவிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் லெனின்சிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான லெனின்சிங்கை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் , குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
- அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார்.
களக்காடு :
திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோதைசேரி விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் (23), குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இதுபற்றி குமார் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர்.
- மிக்கேல் போஸ்கோ அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கெபியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்.
- ஆத்திரம் அடைந்த ஜெபஷ்டின், மிக்கேல் போஸ்கோவை கம்பால் தாக்கினார்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள உள்வாய் நாகல்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் மிக்கேல் போஸ்கோ (வயது 29). தொழிலாளி. இவர் சம்பவ த்தன்று அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கெபியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார். இதைப்பார்த்த அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சேசுமிக்கேல் மகன் ஜெபஷ்டின் (25), மிக்கேல் போஸ்கோவை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெபஷ்டின், மிக்கேல் போஸ்கோவை கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார்.
இதுபற்றி மூலை க்கரைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஜெபஷ்டினை தேடி வருகின்றனர்.
- ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
- தனது வீட்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அவினாசி,ஜூலை.16-
அவினாசியை அடுத்து அணைப்புதூர் எருமைக்காடு தோட்டம்கணபதிசாமி காம்பவுண்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 38). இவரும் இவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் .இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டு ஆகிறது. இவர்களது மகள் கோவையில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது மனைவி தனது மகளைப் பார்க்க கோவைக்கு சென்று விட்டார். ராஜேந்திரன் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. எனவே வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே பார்த்தபோது ராஜேந்திரன் தீக்காயங்களுடன் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.விசாரணையில் ராஜேந்திரன் தனது வீட்டு கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்தில் நைலான் கயிறு சுற்றி இருந்தது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
- குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது.
- ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்:
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது. சேலம் மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், இன்றைய நவீன காலத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருமானம் சம்பாதிப்பது குழந்தைகளின் பெற்றோருக்கும், வேலை அளிப்பவர்களுக்கும், சமதாயத்துக்கும் நல்லது அல்ல. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம், வேலைக்கு அல்ல என்ற குறிக்கோளுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் முறை தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்து இணை இயக்குனர் (பொறுப்பு) தினகரன், கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் சட்டம் குறித்து உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, ஆள் கடத்தல் மற்றும் இளம் சிறார் நீதி, சட்டம் குறித்து சேலம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, வெளிமாநில தொழிலாளர் சட்டம் குறித்து சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் ஆகியோர் பேசினர்.
இந்த பயிற்சியில் ஓசூர் இணை இயக்குனர் சபீனா, துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
- குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன்.
கும்பகோணம்:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். இந்திய அரசமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை . எனவே 14 வயதுக்கு ட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் . குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இதில் பொது மேலாளர் முகமது நாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜன், முதன்மை தணிக்கை அலுவலர் சிவகுமார் மற்றும் துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட வன்னிவயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசித்ரா நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் குண சேகரன்,கிராம நிர்வாக அலுவலர் காமேஸ்வரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.
- மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு:
வள்ளியூர் அருகே உள்ள மேலசண்முகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வின் மகன் மார்சல் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விகுபாய் (25) என்பவரும் ஏர்வாடி அருகே உள்ள ஆவரந்தலையில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றனர்.
அப்போது இவர்களுக்கும், பொத்தையடியை பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் ராஜபுதூர்-வள்ளியூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அங்குள்ள சாஸ்தா கோவில் ஆர்ச் அருகே சென்ற போது, பொத்தை யடியை சேர்ந்த முத்துக்கு மார் மகன் வைகுண்டராஜா, பெருமாள் மகன் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து மார்சலையும், விகுபாயையும் வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.
இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இது தொடர்பாக வைகுண்ட ராஜா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த குறிஞ்சான்பட்டி வேதகோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணிய பாண்டியன்(53). விவசாயி.
சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி சசிகலா(48), சற்று தாமதமாக சாப்பாடு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சுப்பிரமணிய பாண்டியன் சாப்பிடாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதற்கிடையே சசிகலா, வீட்டுக்கு செல்லாமல் மாலை வரை தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு அதன்பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணிய பாண்டியன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகன்(34). இவர் வைக்கோல் லோடு ஏற்றும் வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த சில நாட்களாக வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்று கூறி அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்குத் தெருவை சோ்ந்த ராமசாமி மகனான உப்பள கங்காணி சண்முகராஜ் (வயது 45), ஆவரையூா் அருகே பைக்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றபோது, 3 பேரால் வழிமறித்து வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் இன்று சண்முகராஜ் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.
உடன் தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரி ஷங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், ஒன்றிய சேர்மன் ஜனகர், பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், கவுன்சிலர் கேசவன், ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகானந்தம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் இருந்தனர்.