என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் அருகே அதிகாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
    X

    வள்ளியூர் அருகே அதிகாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

    • விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
    • விபத்து குறித்து வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் விசாரணை நடத்தி வருகிறார்.

    வள்ளியூர்:

    நெல்லை மேலப்பாளை யத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 26). பூக்கட்டும் தொழிலாளி. இவர் நேற்று இரவு மேலப்பாளையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    விபத்தில் பலி

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் அப்துல் கரீம், அல்தாரிக் ஆகிய 2 பேரும் அவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கணேசன் ஓட்டினார். வள்ளியூர் அருகே நம்பியான்விளையில் நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே சென்றபோது விபத்தில் சிக்கினர்.

    இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    விசாரணை

    அவர்கள் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அப்துல் கரீம், அன்சாரி ஆகியோர் வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 3 பேரும் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கணேசன் இறந்தாரா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் ஏதும் மோதி இறந்தாரா? என்று விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×