என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Valliyur"
- பீரோவில் இருந்த கத்தி, துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை காணவில்லை.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் அழகு(வயது 42). இவர் அமிர்தசரசில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
அழகு கடந்த 2010-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளார்.
அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் 32-பிஸ்டல் வகையை சார்ந்த துப்பாக்கியையும், அதற்குரிய 30 தோட்டாக்களையும் அவர் வாங்கி உள்ளார். இதில் அவர் சோதனை செய்வதற்காக 5 தோட்டாக்களை பயன்படுத்தி உள்ளார். எஞ்சிய 25 தோட்டாக்களையும் அவர் தன் வசம் வைத்திருந்தார்.
அந்த துப்பாக்கியை அவர் பணியாற்றும் இடங்களில் வைத்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அழகு வந்தார். பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதி விடுமுறை முடிந்து பணிக்காக மீண்டும் அமிர்தசரஸ் புறப்பட்டுள்ளார்.
அப்போது சமூகரெங்கபுரத்தில் குடியிருந்து வரும் அவரது பெற்றோரிடம் இது முக்கியமான பொருள் என கூறி ஒரு பெட்டியில் தன்னுடைய துப்பாக்கி, 25 தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தியை உறையில் வைத்து ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அழகுவின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த வழியாக சென்றபோது அழகுவின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அழகுவின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது கதவுகளை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கத்தி, துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை காணவில்லை.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் அவற்றை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதுபற்றி அழகுக்கு அவரது பெற்றோர் தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக அமிர்தசரசில் இருந்து புறப்பட்டு இன்று காலை ராதாபுரம் வந்து சேர்ந்தார். அவர் ராதாபுரம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி, தோட்டாக்களை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நேற்று அதிகாலையில் அதே பகுதியில் 95 வயது மூதாட்டியிடம் கம்மலை பறித்துச்சென்ற அதே கும்பல் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நேற்று காலை முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது.
- சூட்டுப்பொத்தையில்முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறங்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி கார்த்திகை தீபம் ஏற்றினார்.
வள்ளியூர்:
ெநல்லை மாவட்டம் வள்ளியூர் ஸ்ரீமுத்து கிருஷ்ண சுவாமி 110-வது குருபூஜை தேரோட்டத்திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. 5-ம் திருவிழாவான 22-ந் தேதி கிரிவல தேரோட்டம் நடைபெற்றது.
பரணி தீபம்
அதன் பின்னர் 23-ந் தேதி ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜைநடைபெற்றது. 9- ம் திருவிழாவான நேற்று காலை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. பின்னர் பூஜித குரு மாதாஜி வித்தம்மா முன்னிலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதன் பின்னர் பரணிதீபத்தில் இருந்து சூட்டுப்பொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறங்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி கார்த்திகை தீபம் ஏற்றினார். பின்னர் மஹாமேரு மண்டபத்தில் சிறப்பு கார்த்திகை வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா, சபாநாயகர் அப்பாவு, வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கண்ணன், அரசு வக்கீல் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராஜம், பொன்பாண்டி, பாக்கியம், தி.மு.க விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆதி பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முருகன் கோவில் கிழக்கு வாசல் முன்பு சொக்கபனை கொழுத்தப்பட்டது. திருக்கார்த்திகையை யொட்டி வள்ளியூரில் பல்வேறு வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- விக்னேஷ் நேற்றிரவு வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
வள்ளியூர் பகுதியில் வசித்து வந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மகன் விக்னேஷ் (வயது 31).
இந்நிலையில் விக்னேஷ் நேற்றிரவு நெல்லையில் இருந்து வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பொன்னாக்குடி வெள்ள நீர் கால்வாய் புதிய பாலம் அருகே விக்னேஷ் சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர் பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர்.
தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக நெல்லை அரசு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மே லும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்ப டுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.
- முத்து கிருஷ்ணசுவாமி குரு பூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடைபெற்றது.
- 26-ந்தேதி மாலை சூட்டுப்பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டுப் பொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 110-வது கிரிவல தேரோட்டத்திருவிழா இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது.
தேரோட்டம்
முன்னதாக சூட்டுப் பொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேருமண்ட பத்தில் உள்ள ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.
ஸ்ரீமுத்து கிருஷ்ண சுவாமி குரு பூஜையை யொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மேளவாத்தி யங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரத நாட்டியம், கோலாட்டங்க ளுடன் தேரோட்டம் நடை பெற்றது.
வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள்
சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வந்தனர். இத்தேரோட் டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடு களில் இருந்தும் டெல்லி, பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்றனர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) காலை 10.15 மணிக்கு ஸ்ரீ மஹாமேரு தியான மண்ட பத்தில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறு கிறது.
26-ந்தேதி மாலை சூட்டுப் பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 27-ந்தேதி காலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும் நடை பெறுகிறது.
பின்னர் குரு ஜெயந்தி ஆராதனாவும், அபிஷேக திருவிளக்கு பூஜையும் நடை பெறுகிறது. விழா ஏற்பாடு களை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- வள்ளியூர் மின் கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி மற்றும் சங்கனான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் .
வள்ளியூர்:
தமிழ்நாடு மின் வினியோக வள்ளியூர் பிரிவு செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வள்ளியூர் மின் கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி மற்றும் சங்கனான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் . மேலும் மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்ற வற்றை அகற்றி மின்பாதை யினை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு,காடுவெட்டி, வடமலை சமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.
பணகுடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.சங்கனான்குளம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்குஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை, தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- தேரோட்டத்தின் போது பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சூட்டுப்பொத்தை அடிவாரத்தில் முத்து கிருஷ்ண சுவாமி கோவில் கொண்டுள்ளார். முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை மற்றும் தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டு விழா நேற்று காலை 6.30 மணிக்கு வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் மஹாமேரு மண்டபத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடைபெற்றது.
சிறப்பு பூஜை
இதில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா, ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் மற்றும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டா டப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி சித்திரகூடத்தில் எஸ்.எஸ்.என்.ரமேஷ், சவுமியா பிரஷாந்த் குழுவினரின் வீணாகானம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருகிற நாட்களில் இரவு லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டியம், இசை சொற்பொழிவு, பக்தி இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தேரோட்டம்
வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தேரோட்டம் நிறைவு பெற்றதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 23-ந் தேதி காலை 10.15 மணிக்கு மஹாமேரு தியான மண்டபத்தில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது.
கார்த்திகை தீபம்
26-ந் தேதி சூட்டுபொத்தையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி காலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும் நடைபெறுகிறது. பின்னர் குருஜெயந்தி ஆராதனாவும் ,அபிஷேக திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- சிதம்பராபுரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
- இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும்.
வள்ளியூர்:
வள்ளியூர் கோட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வழிகாட்டுதலின் படியும் களக்காடு நகர்புற பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சிதம்பரா புரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர் ஏர்வாடி உபகோட்டம் செல்வகார்த்திக், உதவி மின் பொறியாளர் களக்காடு நகர்புற பிரிவு நலீம் மீரான் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 110-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்ட திருவிழா தொடக்க நிகழ்ச்சி 18-ந்தேதி (சனிக்கிழமை)காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
- சூட்டுபொத்தை அடிவா ரத்தில் உள்ள வனவிநாய கருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டுபொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது.
கிரிவல தேரோட்ட திருவிழா
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி யின் 110-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்ட திருவிழா தொடக்க நிகழ்ச்சி 18-ந்தேதி (சனிக்கிழமை)காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
சூட்டுபொத்தை அடிவா ரத்தில் உள்ள வனவிநாய கருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மேருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுகிறது.
ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 5 மணிக்கு சூட்டுப்பொத்தை கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞ ர்களின் பரதநாட்டியம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.
சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க உள்ளனர். இத்தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்கின்ற னர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
23-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ மஹா மேரு தியான மண்டபத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. 26-ந் தேதி மாலை 5 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் நடைபெறுகிறது.
27-ந் தேதி காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவல மும், அதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு குருஜெயந்தி ஆராதனா மற்றும் அபிஷேகம் திரு விளக்கு பூஜையுடன் நடை பெறுகிறது. திருவிழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
கலைநிகழ்ச்சிகள்
10 நாட்கள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்து கிருஷ்ணா சித்திரக்கூ டத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் தின பாடல்கள், விழிப்புணர்வு மற்றும் தத்துவப் பாடல்கள் பாடி பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சியில் திருக்குறள் ஓப்புவித்தல் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை பள்ளித் தாளாளர் - முதல்வர் மணி அந்தோணி தலைமையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- சாமிநாதன் என்ற செந்தில் அவருடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
- செல்வகுமார்,சாமிநாதன் என்ற செந்திலை அவதூறாக பேசி மணிகண்டன் தாக்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் கீழரத வீதியை சேர்ந்த சாமிநாதன் என்ற செந்தில் (வயது40) என்பவர் அவருடைய நண்பருடன் நேற்று வள்ளியூர் சிவன் கோவில் தெருவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(31) என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து வள்ளியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தடுக்க வந்த போது அவரையும், சாமிநாதன் என்ற செந்திலையும் மணி கண்டன் அவதூறாக பேசி கண்ணாடி பாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சாமிநாதன் என்ற செந்தில் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
- ராதாபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
- அ.தி.மு.க.வினருக்கு மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா அறிவுரைகள் வழங்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூரில் ராதாபுரம் தொகுதிக்கான அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா, ராதாபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்காக பணியாற்றிய அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். பின்னர் ராதாபுரம் தொகுதியில் உள்ள பூத் கமிட்டி நோட்டுகள் சரி பார்க்கப்பட்டு அ.தி.மு.க.வினருக்கு மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அறிவுரைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளருமான மைக்கேல்ராயப்பன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா செல்வகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் சுந்த ரேசன், மகளிரணி செய லாளர் ஜான்சி ராணி, வள்ளியூர் பொருளாளர் இந்திரன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலரிச்சர்ட்டு, ஞானபுனிதா, அருண் குமார், எட்வர்ட்சிங், நகர, கிளை செயலாளர்கள், தொண்டர்கள் பூத் கமிட்டி யின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடி வில் பா.ஜ.க., தி.மு.க. வை சேர்ந்த 10 பேர் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை இணைத்துகொண்டனர்.
- வள்ளியூர் பஸ் நிலையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
- சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வள்ளியூர்:
வடக்கு வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வள்ளியூர் பஸ் நிலையம் மற்றும் மெயின்ரோடு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம், செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்