search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "super market"

    • வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர்.
    • குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆரணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.

    குழந்தைகளுக்கு பிடித்தமான முந்திரி, திராட்சை, பாதாம், பேரிச்சம் அடங்கிய பாக்கெட்டை வாங்கினார்.

    அப்போது அந்த பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார்.

    வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் வேறு பாக்கெட் மாற்றி எடுத்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51). இவர் குமாரபுரம் சந்திப்பில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பிரபாகர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தார். அப்போது ஆவரை குளத்தை சேர்ந்த ரவிக்குமார் (45), ராபர்ட் (40) ஆகிய இருவரும் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது பிரபாகரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ரவிக்குமார், ராபர்ட் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் பிரபாகர் கடையை பூட்டிவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம்- கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரவிக்குமார், ராபர்ட் இருவரும் பிரபாகர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் அவரிடம் தகராறு செய்ததுடன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து கீழே தள்ளியதுடன் பிரபாகரை கையால் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பிரபாகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294(பி), 329, 506(2) ஐ.பி.சி. ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவிக்குமார் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பிக் பாப்'ஸ் அங்காடியில் மதுபானம் விற்பனையாகிறது
    • கரன் விசாரிக்க தொடங்கியதும் அந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சுமார் 30 கிலொமீட்டர் தொலைவில் உள்ளது மேற்கு கொவினா (West Covina) பகுதி.

    இதன் மேற்கு ப்யுன்டே நிழற்சாலையில் (West Puente Avenue) "பிக் பாப்'ஸ் லிக்கர்ஸ் அண்ட் மார்கெட்" எனும் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பலவிதமான மக்களுக்கு தேவையான பொருட்களுடன் பல மதுபானங்களும் விற்பனையாகிறது.

    இங்கு இரு தினங்களுக்கு முன் மாலை 09:00 மணியளவில் 25 வயதிற்கு உட்பட்ட 2 ஆண்கள் பொருட்களை வாங்குவது போல் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், அங்குள்ள பொருட்களை பிறர் கவனிக்காத வகையில் திருட தொடங்கினர்.

    அங்கு மேற்பார்வையில் இருந்த கரன் சிங் (Karan Singh) எனும் 34 வயதான இந்தியர், இவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க தொடங்கினார். அவர்கள் திருடுவதை உறுதி செய்து கொண்ட கரன், அவர்களை இடைமறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் மோதலாக மாறியது.

    இதில் அந்த இருவரும் கரனை திடீரென துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதும் அந்த இருவரும் ஒரு காரில் தப்பி சென்றனர்.

    அதிர்ச்சியடைந்த அந்த அங்காடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் அந்நாட்டு அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்தனர். விரைந்து வந்த சேவை பணியாளர்கள் கரனை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த அங்காடியின் உரிமையாளரின் உறவினரான கரன், கடந்த ஒரு வருடம் முன்பு அமெரிக்கா வந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் 12 வயது மகனும் இந்தியாவில் உள்ளனர். மனைவியையும் மகனையும் அமெரிக்காவிற்கு அழைத்து வர பணம் சேமிக்க கரன் தீவிரமாக முயன்று வந்தார்.

    கரனை கொன்றவர்களை பிடிக்க மேற்கு கொவினா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    • காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
    • சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பூஜை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் போன்ற அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு வாடிக்கையாளர்கள் தாங்களாகவே தேவையான பொருட்களை சுயசேவையாக எடுத்து கடைசியில் பில் போட்டு அதற்கான பணம் செலுத்தி பின்னர் பொருட்களை அதற்கான கவுண்டரில் பெற்று செல்வர்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை கடைக்கு வந்த 3 பெண்கள் பொருட்கள் வாங்குவதாக சொல்லிவிட்டு பொருட்களை எடுத்து வைக்க தேவையான கூடையை எடுத்து சென்று மளிகை பொருட்கள், பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கு பொருட்கள் என்று 1 மணிநேரத்திற்கும் மேலாக எடுத்துள்ளனர்.

    ஆனால் கவுண்டர் வரும்போது குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே இருந்தது. அவற்றிற்கு மட்டுமே பில் போட்டனர். ஒரு பெண் ஸ்பூன் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு 80 ரூபாயும், மற்றொரு பெண் குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் என 70 ரூபாயும் என மொத்திலேயே 150 ரூபாய்க்கே பணம் செலுத்தி விட்டு பொருட்களை பெற்று கொண்டு சென்றுள்ளனர்.

    இதனால் சந்தேகமடைந்த சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் ஸ்ரீராம் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்தபோது அந்த பெண்கள் பொருட்கள் எடுத்துகொண்டு அவற்றை ஆளில்லா இடத்திற்கு வந்து தங்களது சேலைக்குள் ஒரு பையை கட்டி கொண்டு வந்து மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களையெல்லாம் அதில் போட்டு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அவர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.

    • வள்ளியூர் 4 வழிச்சாலை கேசவனேரி ரோட்டை சேர்ந்தவர் இசக்கிமுத்து . இவர் வீட்டின் முன் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
    • அங்கு வைக்க்பபட்டிருந்த ரூ. 7 ஆயிரம் பணம் மற்றும் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருட்டு போயிருந்தது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் 4 வழிச்சாலை கேசவனேரி ரோட்டை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது48). இவர் வீட்டின் முன் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    திருட்டு

    நேற்று இரவு இசக்கிமுத்து வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் இன்று காலை சூப்பர் மார்க்கெட் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கு வைக்க்பபட்டிருந்த ரூ. 7 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விசாரணை

    சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் முகமூடி அணிந்த ஒரு வாலிபர் நிதானமாக நாற்காலியில் அமர்ந்தவாறு பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. அந்த காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்
    • போலீசார் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி தீபாசத்யன் முன்னிலையில் நேற்று இரவு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    இதனையடுத்து எஸ்.பி. தீபா சத்யன் பல்பொருள் அங்காடியை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி விற்பனையை தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் விஸ்வேஸ்வரய்யா (மாவட்ட தலைமையகம்) முத்துக்கருப்பன் (சைபர் கிரைம்) டிஎஸ்பிக்கள் பிரபு (ராணிப்பேட்டை), பிரபு (அரக்கோணம்), இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், சதீஷ்குமார், தனஞ்செழியன், சீனிவாசன், விஜயலட்சுமி, சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட இந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பல்பொருள் அங்காடியில் காவலர்கள் தீயணைப்பு துறை சிறைத்துறை ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் பல் பொருட்களை வாங்கி பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள குரோஜர் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #SuperMarketFiring
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தின் லூயிஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ளது குராகர் சூப்பர் மார்க்கெட்.

    நேற்று மதியம் 3 மணியளவில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்தான். கையில் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினான்.



    இந்த திடீர் தாக்குதலில் அங்கிருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.  மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #SuperMarketFiring
    தேனி அருகே பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பிரிவில் ராமச்சந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றுள்ளார்.

    நள்ளிரவு சமயத்தில் கடையில் இருந்த புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அங்காடியில் வேகமாக பரவிய தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×