என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "damage"
- கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
- 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
நேற்று தஞ்சை, குருங்குளம், திருவையாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
இருப்பினும் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் மழை இல்லை.
இருந்தாலும் இரவில் மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 11 கூரை வீடுகள், 5 ஓட்டு வீடுகள் என மொத்தம் 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.
மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு:-
தஞ்சாவூர்-9.50, அதிராம்பட்டினம் -9.20, ஒரத்தநாடு -9, திருவையாறு-7.
- வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
- தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 65) இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.
ஏகாம்பரம் சுமை தூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது கூரை வீட்டில் திடீரென தீ பிடித்தது எரிய தொடங்கியது. பின்னர் வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் வீடு முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முடியவில்லை.
அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த தளவாட சாமான்கள், மின் சாதனங்கள், கட்டில் பீரோ, புடவை என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
- மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரசு (45)நேற்று இரவு இவரது வீட்டில் வழக்கம்போல் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதன் காரணமாக அவரது கூரை வீடும் தீ பற்றி எரிந்தது. சிலிண்டர் வெடிக்கும் போது இரவு நேரம் என்பதால் பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் பயங்கர சத்தத்தை கேட்டு என்ன நடக்கிறது என தெரியாமல் அவரவர் வீட்டை விட்டு வெளியில் வெகு தூரம் ஓடி உள்ளனர். அப்போதுதான் சரசு வீட்டில் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது .
உடனே அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் தீ வீடு முழுவதும் பரவி விட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு இடத்திற்கு வந்து தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சரசு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகி விட்டது . இந்த தீ விபத்து குறித்து மரக்காணம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிசை வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
- இது சம்பந்தமாக ஜெயராஜ் முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள மணலூர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 48). இவருடைய குடிசை வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் வேறு யாருக்கும் எந்த சேதமும் இல்லை வீட்டில் இருந்த துணிகள் மட்டும் எரிந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெயராஜ் முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- சிலைகளை சேதப்படுத்தி, மரங்களை வெட்டிய மர்மநபரை தேடி வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள பஞ்சமி நிலத்தில் கன்னிமார் கோவில் உள்ளது. கடந்த 14-ந்தேதி ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட கிராம மக்கள் இக்கோவிலில் கிடா வெட்டி வழிபாடு செய்ய 100-க்கும் மேற்பட்டோர் வந்தனர். கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது சம்பந்தமாக போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
மேலும், கோவில் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்டோர் கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பாரத் சின்னசேலம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சாமி சிலைகளை சேதப்படுத்தி, மரங்களை வெட்டிய மர்மநபரை தேடி வந்தனர். இ்ந்நிலையில் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அங்குள்ள மரங்களை வெட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.
- மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
திருவாரூர்:
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் அந்த காவிரிநீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்து, அங்கிருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.
இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள தோலி, உதயமார்த்தாண்டபுரம், வடசங்கந்தி, இடையூறு, குன்னலூர், பாண்டி போன்ற பகுதிக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் பருவமழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து பயிர்களை காப்பாற்றி வந்தனர்.
இந்த நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் குறுவை நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.
இதனால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தடைபட்டு உள்ளது பல போராட்டங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களில், பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில், வயல்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதாலும், பயிர்கள் சாய்ந்ததாலும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
- வீட்டில் இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை சிவன்தெற்கு வீதியை சேர்ந்தவர் அருள்வாசகம். இவர் குத்தாலம் பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அருள் வாசகம் பணிக்கு சென்ற நிலையில், மனைவி மங்கையர்கரசியும் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்று விட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக அருள் வாசகம் வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இருந்தும் வீட்டிலிருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் நில பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம் என்று கூறப்படு கிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு 2,65,834 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது, அதில் 6,430 நபர்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்தாண்டு இதுவரை 2,42,743 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4,524 நபர்களுக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்) போன்றவைகளை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அழித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவிலியர்கள், 954 கொசு ஒழிப்புக்கென நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,324 ஒப்பந்த பணியாளர்கள் என ஆக மொத்தம் 4,231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னையில் இன்று மட்டும் 54 நபர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
- தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் கூரை வீட்டில் வசித்து வருபவர் கருப்பையன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அன்று இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தாக்கியதில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அடிப்படை உபகரணங்கள் வழங்கினார்.
- பாபநாசத்தில் இருந்து சென்ற லாரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.
- சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரயில் நிலையம் அருகில் பாபநாசத்தில் இருந்து வேகமாக சென்ற லாரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.
இதில் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்ததில் சேதம் ஏற்பட்டது.
சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாபநாசம் மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் கருணாகரன், இளமின் பொறியாளர் ஷாஜாதி, மின்பாதை ஆக்க முகவர் ராஜகோபால் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சீரமைத்தனர்.
பின்பு மின்வாரிய ஊழியர்கள் தடைப்பட்ட மின்சாரத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின் இணைப்பு தரப்பட்டது.
இது குறித்து பாபநா சம்மின்வாரிய இளமின் பொறியாளர் ஷாஜாதி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் கலை வாணி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.