search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samba"

    • ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு,நாதல் படுகை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
    • மழையினால் பயிரிலுள்ள குருத்துப் புழுக்கள் தானாகவே அழிந்து விடும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் சுமார் 5000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா, ஆத்மா திட்ட மேலாளர் அரவிந்த், அலுவலர்கள் சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு,நாதல் படுகை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த நேரடி விதைப்பு பயிரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா கூறுகையில் நெற்பயிரில் பரவலாக குருத்துப் புழு தாக்குதல் இருந்து வருகிறது.

    இந்த மழையினால் பயிரிலுள்ள குருத்துப் புழுக்கள் தானாகவே அழிந்து விடும் என்றார்.

    • அக் டோபரில் எந்த நாளிலும் நல்ல மழை பெய்யவில்லை என்று மாவட்ட வேளாண் மைத் துறை தெரிவித்துள் ளது.
    • ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் நடவு எதிர்பார்த்த அளவில் இல்லை.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 485 மி.மீ. மழையினை பெறும். வழக்கமாக இந்தப் பருவ மழை அக்டோபர் 3-வது அல்லது 4-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டில் பருவமழை தாமதமாக தொடங்கியது.

    இருப்பினும் கடந்த அக் டோபரில் எந்த நாளிலும் நல்ல மழை பெய்யவில்லை என்று மாவட்ட வேளாண் மைத் துறை தெரிவித்துள் ளது.

    பொதுவாக அக்டோபர் மாதத்தில் அரியலூர் மாவட் டத்தில் சராசரி மழைப்பதிவு 127.71 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் சென்ற மாதம் 44.29 மிமீ பதிவாகியுள்ளது. பற்றாக்குறை 76 சதவீதமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 954 மில்லி மீட்டர். இதில் வடகிழக்கு பருவமழை யின் போது 485 மில்லி மீட்டர் மழையும், தென் மேற்கு பருவமழையின் போது 357 மில்லி மீட்டர் மழையும், கோடையில் மழையளவு 83 மி. மீட்டர் மழையும் பெற்று வந்தது. ஆனால் ஜனவரியில் இருந்து இதுவரை 440.95 மி.மீ. மட்டுமே பெற்றுள்ளது.

    தென்மேற்கு பருவம ழையும் மாவட்டத்தில் சரியாக பெய்யவில்லை. ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே 231.74 மி.மீ., மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 140 மிமீ பதிவாகி யுள்ளது.

    இது பருவகால சராச ரியை விட 57 மிமீ அதிகம். அதே நேரம் அக்டோபரில் எந்த நாளிலும் கனமழை பெய்யவில்லை. இது பெருத்த ஏமாற்றம் அளிக்கி றது.

    இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும் போது,

    பொதுவாக அக்டோ பரில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கு வார்கள். இந்த மாதத்தில் பெய்யும் மழை நெல் நாற்றுக்கு உதவும். இது நவம்பர் முதல் மற்றும் 2-வது வாரத்தில் வேகத்தை அதிகரிக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் நடவு எதிர்பார்த்த அளவில் இல்லை.

    சம்பா சீசனில் வழக்கமாக 20,500 ஹெக்டேர் பரப்பள வில் நெல் நடவு செய்யப்ப டும். ஆனால் தற்போது மாவட்டத்தில் இதுவரை 7,300 ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி நடந்துள் ளது. நெல் நடவு செய்த பெரும்பாலான விவசா யிகள், பாசனத்திற்கு பம்ப் செட்டை நம்பியுள்ளனர்.

    புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தை உறுதி செய்த விவசாயிகள், இன்னும் சாகுபடி செய்யவில்லை. மேட்டூர் அணையில் நீர்வ ரத்து வேகமாக குறைந்து வருவதால், அணை மூடப்ப டுவதற்கு முன்பே, கால்வாய் மூடப்பட்டதால், இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு சராசரி நெல் நடவு பரப்பளவை விவசாயிகள் எட்டுவது சந்தேகம் என்றார்.

    • பருவநிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படுகிறது.
    • பனிப்பொழிவால் சம்பா சாகுபடி வெகுவாய் பாதிக்கும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக லேசான மழைப்பொழி வோடு அதிகாலை வேளையில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் நாகப்பட்டினம் மாவட்டம்

    கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி, அனக்குடி, இறையான்குடி, கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பனிப்பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவி வருகிறது.

    பருவ நிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படுகிறது.

    வழக்கத்திற்கு மாறாக பொய்யும் பனிப்பொழிவு காரணமாக அறுவடைக்கு தயாராகியுள்ள குறுவை நெற்பயிர்கள் மட்டுமின்றி தற்போது விதைக்கப்பட்டுள்ள சம்பா சாகுபடியும் வெகுவாக பாதிக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மேலும் சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால் விபத்துகளை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

    இந்த பனிபொழிவால் காலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்பவர்களும், வீடுகளுக்கு பால் மற்றும் பேப்பர் கொண்டு செல்பவர்களும் அவதிய டைந்தனர்.

    • ஆழ் துளை கிணறு தண்ணீர் மூலம் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது.
    • விவசாயிகள் தங்கள் வயல்களில் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ் துளை கிணறு தண்ணீர் மூலம் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் ஆழ் துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் சம்பா நடவு செய்ய தொடங்கி உள்ளனர்.நடப்பு ஆண்டு கால்வாய் பாசன வசதி பெறும் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.

    மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு மற்றும் வரத்து வெகுவாக குறைந்தது.இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக மூடப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து குடி தண்ணீருக்கு மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரி பாசனபகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், திருக்காட்டுபள்ளி பகுதியில் ஆழ் துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

    இதிலும் முன்னதாக நாற்றுவிட்டு விவசாயிகள் தங்கள் வயல்களில் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை நல்ல நிலையில் பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் சரிவு காணாமல் சரியாக சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.
    • 60 சதவீத சம்பா அறுவடை பணிகள் நிறைவு.

    பாபநாசம்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் ஆணை முன்கூட்டியே திறக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறையின் மூலம் முக்கிய பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வார பட்டது. தட்டுப்பா டின்றி தேவையான விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.

    போன்ற காரணங்களால் டெல்டா மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி, சாகுபடி பணிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.

    பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் பருவம் தவறி பெய்த மழைக்கு பிறகு தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

    இதுவரை சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு சம்பா அறுவடை பணிகள் நிறைவு பெற்று உள்ளது.

    இம்மாத இறுதிக்குள் சம்பா அறுவடை பணிகள் முடிவு நிலை எட்டும் என எதிர்பார்க்க படுகிறது.

    • சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி, ஆலங்குடி, மூங்கில்குடி, செம்பியன்மகாதேவி, இருக்கை, மகாதானம் சுக்கானூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்ப ட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் கன மழையால் வயல்களை மழைநீர் சூழ்ந்தது. நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு 10 தினங்களில் தயாராக இருந்த 5000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல் மணிகள் முளைத்து சேதமடைந்துள்ளது.

    சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதுவரை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிடவே இல்லை எனவும் உடனடியாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆந்தை பந்தல் அமைத்து எலிகளை இரவு நேரங்களில் கட்டுப்படுத்தலாம்.
    • உளுந்து விதை போன்றவை பற்றிய மானிய விவரங்களை கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் ஆதனூர் கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    பயிற்சியில் விதை சான்று துறை, விதை சான்று அலுவலர் அசோக் கலந்து கொண்டு பேசுகையில், விதை தேர்வு, வயல் பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப் பின் விதையின் ஈரப்பத அளவு போன்றவை பற்றியும் தரமான விதைகளை உற்பத்தி செய்வது குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    மேலும் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பதிவு செய்தல் பற்றியும் மற்றும் விதைகளின் நிலைகள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கினார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் பேசுகையில், நடப்பு சம்பா தாளடி பருவத்தில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் அதன் மேலாண்மை பற்றியும் மற்றும் எலி ஒழிப்பு மேலாண்மை பறவைக்குடில் ஆந்தை பந்தல் அமைத்து எலிகளை இரவு நேரங்களில் கட்டுப்படுத்தலாம் என்றும் ப்ரோமோ டைலான் மருந்தினை பயன்படுத்தி எலிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி ஆத்மா திட்ட செயல்பாடுகள் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் ரவி பேசுகையில், வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பில் உள்ள உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள், உளுந்து விதை போன்றவை பற்றிய மானிய விவரங்களை கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    பயிற்சியில் உதவி விதை அலுவலர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அகல்யா மற்றும் ஆதனூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ் செய்திருந்தார்.

    • மழைநீர் இந்த ஆறுகளின் வழியாக வடிந்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது.
    • கனமழையில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதமடையும் சூழ்நிலை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் முள்ளியாறு மற்றும் மாணங்கொண்டான் ஆறு சுமார் 20 கி.மீ தூரம் வரை பாசன மற்றும் வடிகால் ஆறாக ஓடுகிறது.இந்த ஆறுகளில் வாய்மேடு , மருதூர் , ஆயக்காரன்புலம் ,தாணி கோட்டகம் பகுதிகளிலில் 10 கி.மீ தூரம் அதிக அளவில் ஆகாயதாமரை மண்டிக்கிடக்கிறது.

    ஆகாயத்தாமரை ஆற்றுக்குள் தண்ணீர் தெரியாத அளவிற்கு மிக நெருக்கமாக மண்டிக்கி டப்பதால் இந்த பகுதியில் சம்பா சாகுபடி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் செய்யப்பட்டுள்ள நிலையில்தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வயல்களில் தேங்கிய மழைநீர் இந்த ஆறுகளின் வழியாக தான் தண்ணீர் வடிந்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் ஆறுகளில் ஆகாயத்தாமரை நிரம்பி தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் கனமழையில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 891 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
    • பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.539/- பிரீமியமாக செலுத்தி ரூ.35,900-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூர் i-ற்கு ரிலையன்ஸ் பொது காப்பீடு நிறுவனமும், தஞ்சாவூர் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

    2022-ஆம் ஆண்டில், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் II பயிருக்கு காப்பீடு செய்திட தஞ்சாவூர் மாவட்டத்தில் 891 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    நெல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள கடைசி நாள் 15.11.2022. நெல் சம்பா மற்றும் தாளடி பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.539/- பிரீமியமாக செலுத்தி ரூ.35,900-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

    விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விணணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1432), வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுச் சேவை மையங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் இதுவரை 14,189 விவசாயிகள் 38628 ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட விவசாயிகள் அனைவரும் உடன் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாப்பிள்ளை சம்பா அரிசியில் வைட்டமின் பி, பி1, புரதச்சத்து, நார்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் மாங்கனீஸ், பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது.
    • கருடன் சம்பா ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 160 முதல் 165 நாள் நாள் வயதுடையது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டம், வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் வட்டாரத்தில் தஞ்சாவூர் (விரிவு), வல்லம், மானாங்கோரை மற்றும் சூரக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி, ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் கிலோ ரூ.12.50-க்கு வழங்கப்படுகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண்மை உதவி அலுவலர் பரிந்துரையின் பேரில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய பரவலாக்கம் செய்யப்படும்.

    மாப்பிள்ளை சம்பா அரிசியில் வைட்டமின் பி, பி1, புரதச்சத்து, நார்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் மாங்கனீஸ், பாஸ்பரஸ், அதிகளவில் உள்ளது. இது உடலில் உள்ள சிவப்பணுக்கள் உற்பத்தி செய்து அதிக ரத்த அளவை அதிகரிக்க செய்யும். மாப்பிள்ளை சம்பா ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 155 நாள் முதல் 160 நாள் வயதுடையது.

    கருப்பு கவுனி அரிசியில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இவ்வரிசியில் உள்ள நார்ச்சத்தானது எல்.டி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. கருப்பு கவுனி ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 155 நாள் நாள் வயதுடையது.

    கருடன் சம்பா அரிசி இயற்கை பேரழிவுகளான வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இவ்வரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் ஆற்றல் உள்ளது. கருடன் சம்பா ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 160 முதல் 165 நாள் நாள் வயதுடையது.

    எனவே விருப்பமுள்ள விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.
    • விதைகள் சேதம் அடைந்து, முளைப்புத்திறன் குறைந்து விடும் என விவசாயிகள் வேதனை

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வந்த உடன் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

    குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.

    இதற்காக நெல் விதைகளை விவசாயிகள் வயல்களில் தெளித்துள்ளனர்.

    இந்த விதைகள் முளைத்து வரும் முன்னரே கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று பகல் முழுவதும் தொடர்ந்து மழை கொட்டியது.

    இதனால் சம்பா தாளடி விதைகள் தெளிக்கப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதில் விதைகள் சேதம் அடைந்து, முளைப்புத்திறன் குறைந்து விடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    ×