search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் 15-ம் தேதி கடைசி நாள்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் 15-ம் தேதி கடைசி நாள்- கலெக்டர் தகவல்

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 891 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
    • பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.539/- பிரீமியமாக செலுத்தி ரூ.35,900-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூர் i-ற்கு ரிலையன்ஸ் பொது காப்பீடு நிறுவனமும், தஞ்சாவூர் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

    2022-ஆம் ஆண்டில், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் II பயிருக்கு காப்பீடு செய்திட தஞ்சாவூர் மாவட்டத்தில் 891 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    நெல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள கடைசி நாள் 15.11.2022. நெல் சம்பா மற்றும் தாளடி பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.539/- பிரீமியமாக செலுத்தி ரூ.35,900-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

    விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விணணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1432), வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுச் சேவை மையங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் இதுவரை 14,189 விவசாயிகள் 38628 ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட விவசாயிகள் அனைவரும் உடன் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×