search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ASSOCIATIONS"

    • கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அம்மாநில அரசு திருத்தும் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது.
    • IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    தினமும் 14 மணி நேர வேலை: அடுத்த சர்ச்சைக்கு ரெடியான கர்நாடகா.. கொந்தளிக்கும் ஊழியர்கள்கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அம்மாநில அரசு திருத்தும் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் அந்த சட்டத்திருத்தத்தில் 14 மணி நேர வேலை என்பதையும் கொண்டுவரவேண்டும் என்று ஐ.டி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. தற்போதுள்ள, தொழிலாளர் சட்டங்களின்படி அதிகபட்ச வேலை நேரம் என்பது 12 மணிநேரத்தை தாண்டக்கூடாது. ஆனால் நிறுவனங்கள் வைத்துள்ள முன்மொழிவில், 'IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் 14 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்'  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.டி நிறுவனங்களின் இந்த முன்மொழிவை கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிகின்றன. இந்நிலையில் இதற்கு ஊழியர்கள் மற்றும்  தொழிலாளர்கள் சங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு நாளைக்கு 14 மணி நேர வேலை என்பது மனிதாபிமானமற்றது என்றும் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனை கடுமையாக கூடியது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் கர்நாடகா அரசு மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கே அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 891 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
    • பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.539/- பிரீமியமாக செலுத்தி ரூ.35,900-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூர் i-ற்கு ரிலையன்ஸ் பொது காப்பீடு நிறுவனமும், தஞ்சாவூர் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

    2022-ஆம் ஆண்டில், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் II பயிருக்கு காப்பீடு செய்திட தஞ்சாவூர் மாவட்டத்தில் 891 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    நெல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள கடைசி நாள் 15.11.2022. நெல் சம்பா மற்றும் தாளடி பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.539/- பிரீமியமாக செலுத்தி ரூ.35,900-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

    விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விணணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1432), வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுச் சேவை மையங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் இதுவரை 14,189 விவசாயிகள் 38628 ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட விவசாயிகள் அனைவரும் உடன் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • சேர்ந்தான்குளத்தில் சிலர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு விவசாய சங்க நெல்லை மாவட்ட குழு சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், நிர்வாகிகள் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பருத்திபாடுக்கு உட்பட்ட சேர்ந்தான்குளத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே அதனை மீட்டு தரவேண்டும். மேலும் அங்குள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்கங்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் பூ. விசுவநாதன், சின்னதுரை உள்ளிட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் தலைமையில் இன்று திடீரென்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது;

    கர்நாடகாவில் மேகதாது பகுதியில் அணையைக் கட்டினால் தமிழக விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி பாசன பகுதிகள் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும். நீர்வரத்து குறைந்து விடும் இதனால் ஒட்டுமொத்த விவசாயிகள் சங்கம் சார்பாக எங்களின் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கிறோம்.

    அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால் டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை தொடருவோம். அதுமட்டுமில்லாமல் மேகதாது பிரச்சினையை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகளின் ஒரு ஓட்டு கூட பதிவாகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    விவசாயிகள் ஏற்கனவே அல்லல் பட்டு வரும் சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள்.இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகும்.

    விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிட வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் ஒட்டுமொத்தமாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    ×