search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்கங்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்கங்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்கங்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் பூ. விசுவநாதன், சின்னதுரை உள்ளிட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் தலைமையில் இன்று திடீரென்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது;

    கர்நாடகாவில் மேகதாது பகுதியில் அணையைக் கட்டினால் தமிழக விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி பாசன பகுதிகள் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும். நீர்வரத்து குறைந்து விடும் இதனால் ஒட்டுமொத்த விவசாயிகள் சங்கம் சார்பாக எங்களின் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கிறோம்.

    அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால் டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை தொடருவோம். அதுமட்டுமில்லாமல் மேகதாது பிரச்சினையை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகளின் ஒரு ஓட்டு கூட பதிவாகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    விவசாயிகள் ஏற்கனவே அல்லல் பட்டு வரும் சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள்.இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகும்.

    விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிட வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் ஒட்டுமொத்தமாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×